
கல்யாண பொருத்தங்கள் குறித்து பலவிதமான விஷயங்கள் இருக்கின்றன. நாள் பொருத்தம், நட்சத்திர பொருத்தம், பெயர் பொருத்தம் என பல ஜோதிட விதிகளைச் சொல்லுவார்கள். ஆனால், எத்தனைப் பொருத்தம் இருந்த போதிலும், ஒரே ஒரு பொருத்தம் மட்டும் இல்லை என்று சொன்னால், மணப் பொருத்தம் இல்லை என்றுதான் பொருள். இருமனம் கலக்காது திருமணம் சிறக்காது.இந்த உறவை அற்புதமாகப் பாடுவார் கவிஅரசர் கண்ணதாசன்.

“கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று” இரு உடல் கலப்பதால் மட்டும்பயனில்லை. அது காமம். அது வாழ்வின் ஒரு பகுதி தானே தவிர, அது முழுமை அல்ல. அந்த காமத்தையும் முறைப் படுத்தவே கல்யாண உறவு. இதில் மனப்பொருத்தம் அவசியம்.