
திருமண உறவு என்பது பல்வேறு கனவுகளுடன் தொடங்கும். கணவன் – மனைவி இடையே இருக்கும் உறவு எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் இருக்க வேண்டும். உங்களுடைய திருமண உறவு ஆரோக்கியமாக என்பதற்கான சில அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் அந்த உன்னதமான தருணத்தில், நீங்கள் இருவரும் ஒற்றுமையாக நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் என்று தான் விழாவுக்கு வருகின்ற அனைத்து பெரியோர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துவார்கள். அத்தகைய திருமண உறவில் என்றென்றும் பலமானதாக இருக்க வேண்டும் என்றால் கீழ்காணும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தம்பதியர் இடையே எப்போதும் ஆரோக்கியமான உரையாடல் இருந்தால் தான் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இயலும். ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை எப்போதும் சுமூகமாக வெளிப்படுத்துவது தான் நீடித்த பந்தத்திற்கு அடிப்படையாக அமையும். பரஸ்பரம் மரியாதை கணவன், மனைவி இருவரும் பரஸ்பரமாக ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்க வேண்டும்.தன் வாழ்க்கைத் துணையின் கருத்துக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையே ஆனாலும் அவர்களுடைய எல்லையை கடந்து நாம் அத்துமீறி நடந்து கொள்ளக் கூடாது என்பதை உணர்வது அவசியம்.

எதிர்கால இலக்கு வாழ்க்கையில் இருவருமாக சேர்ந்து எந்த இலக்கை அடைய வேண்டும் என்பது குறித்து இருவருக்கும் ஒருமித்த கருத்துடன் கூடிய இலக்கு இருக்க வேண்டும். இருவருக்குமான நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். நம்பிக்கை மற்றும் நேர்மை தம்பதியர் இடையே எப்போதும் நீடிக்க வேண்டும். எந்த ஒரு விஷயமானாலும் ஒருவரை ஒருவர் கலந்து ஆலோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பது அவசியம். மனப்பூர்வமான ஆதரவு உங்கள் திருமண உறவு என்றென்றும் நீடித்த நிலைக்க வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கை துணைக்கு நீங்கள் எந்த அளவுக்கு மனதார துணையாக இருக்கிறீர்கள் என்பது முக்கியமாகும். குறிப்பாக உங்கள் வாழ்க்கை துணை ஒரு சவால் மிகுந்த அல்லது உயர் மிகுந்த சூழலை எதிர்கொள்ளும் போது நீங்கள் அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பிரச்னைகளுக்கு தீர்வு திருமண வாழ்க்கையில் பிரச்னைகளே இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தீர்வு இல்லாத பிரச்னைகள் பிரிவினைக்கு வழிவகை செய்யும். ஆகவே எந்த ஒரு சிக்கல் என்றாலும் அதற்கு உடனுக்குடன் தீர்வு காண்பது அவசியம். பலனுள்ள நேரம் தம்பதியர்கள் வேலை சார்ந்து நிறைய நேரத்தை செலவிட்டாலும், வீட்டில் இணைந்திருக்கும் தருணங்களில் எந்த அளவுக்கு நேரத்தை உபயோகம் உள்ள வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் கவனத்திற்குரியதாகும்.

வீட்டிலேயே ஆளுக்கு ஒரு பக்கம் வெவ்வேறு திசையில் இருந்தால் அதனால் எந்த பலனும் இருக்காது. தனித்த வளர்ச்சி உங்கள் கணவர் அல்லது மனைவியின் தனிநபர் சார்ந்த வளர்ச்சி குறித்து நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும். உங்கள் வெற்றியின் மீது மட்டுமே கவனம் செலுத்தாமல் அவர்களுடைய தேவை மற்றும் இலக்கு குறித்து நீங்கள் அக்கறை செலுத்தி உறுதுணையாக இருப்பது அவசியம். ஏற்றுக்கொள்வது வாழ்க்கை என்றால் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாக இருக்கும். எல்லா சூழல்களையும் நாம் ஏற்றுக் கொண்டு அனுசரித்து செல்ல வேண்டும். நல்லது நடந்தால் சரி என்றும், பிடிக்கவில்லை என்றால் ஏற்க முடியாது என்றும் சொல்லி விட முடியாது.