ரயில்வே.. முக்கிய தகவல்கள்

இந்திய ரயில்வே உலகின் 4-வது பெரிய அமைப்பு ஆகும். தினமும் 1.3 கோடி பேர் பயன்படுத்தும் ரயில்வே துறை பற்றிய 10 முக்கிய தகவல்கள் வருமாறு நாடு முழுவதும் 60 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பரவியுள்ள ரயில் பாதைகளில் தினமும் 11 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

> ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கை 15.4 லட்சம். இதன்மூலம் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள அதிகம் பேருக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

> நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் விவேக் எக்ஸ்பிரஸ். இது அசாம் மாநிலம் திப்ருகார் தமிழகத்தின் கன்னியாகுமரி இடையே இயக்கப்படுகிறது. 4,286 கி.மீ. நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மொத்தம் 56 நிறுத்தங்கள் உள்ளன. பயண நேரம் 82.30 மணி. மிகக் குறுகிய தூர ரயில் சேவை நாக்பூர் முதல் அஜ்னி வரை (3 கி.மீ.) இயக்கப்படுகிறது.

> திருவனந்தபுரம்-நிஜாமுதீன் இடையிலான ராஜ்தானி விரைவு ரயில் 528 கி.மீ.தூரம் பயணிக்கிறது. இது வடோதராவிலிருந்து (குஜராத்) கோட்டா (ராஜஸ்தான்) வரை நிற்காமல் 6.5 மணி நேரம் பயணிக்கிறது. அதேநேரம் ஹவுரா-அமிர்தசரஸ் விரைவு ரயில் அதிகப்படியான நிறுத்தங்களில் நின்று பயணிக்கிறது. நிறுத்தங்கள் எண்ணிக்கை 115.

> புதுடெல்லி-போபால் இடையிலான சதாப்தி விரைவு ரயில் நாட்டிலேயே அதிவிரைவு ரயில் ஆகும். இது அதிகபட்சமாக மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். நாட்டிலேயே மெதுவாக ஓடும் ரயில் நீலகிரி விரைவு ரயில். இது சராசரியாக மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.

> குவாஹாட்டி-திருவனந்தபுரம் விரைவு ரயிலின் திட்டமிட்ட பயண நேரம் 65 மணி 5 நிமிடங்கள் ஆகும். ஆனால் இது வழக்கமாக 10 முதல் 12 மணி நேரம் தாமதமாகவே சென்றடையும்.

> அரக்கோனம்-ரேனிகுண்டா இடையில் சென்னை அருகே உள்ள வெங்கடநரசிம்மராஜுவரிபெட்டா ரயில் நிலையத்தின் பெயர்தான் மிக நீளமானது. ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா அருகே உள்ள இப், குஜராத்தின் ஆனந்த் அருகே உள்ள ஓட் ஆகிய ரயில் நிலையங்களின் பெயர்கள்தான் மிகமிகச் சிறியவை.

> மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ராம்பூர் மற்றும் பெலாபூர் ஆகிய 2 வெவ்வேறு ரயில் நிலையங்கள் உள்ளன. இவை இரண்டும் ஒரே பாதையில் எதிர் எதிர் திசையில் அமைந்துள்ளன.

> கடந்த 1981-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி பிஹார் மாநிலம் பாக்மதி ஆற்றில் ஒரு பயணிகள் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 800 பேர் பலியாயினர். இதுதான் நாட்டின் மிகவும் மோசமான ரயில் விபத்து ஆகும்.

Always4u
× How can I help you?