
22 வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் டாடா ஸ்டீல்.. மாஸ் தான் போங்க..! இந்திய ரயில்வே துறை தனது மொத்த கட்டமைப்பையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இணையாகவும், மேம்ப்பட்ட முறையில் மாற்றி ரயிலின் வேகம் முதல் மக்களுக்கான சேவை தரம் வரையில் அனைத்தையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியில் வந்தே பாரத் ரயில்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில் இதன் எண்ணிக்கையை பெரிய அளவில் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறை டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கீழ் டாடா ஸ்டீல் நிறுவனம் வரும் ஆண்டில் நாட்டின் அதிவேக மற்றும் பல்வேறு நவீன அம்சங்கள் நிறைந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்-ன் 22 ரயில்களை தயாரிக்க உள்ளது. இந்தியா ரயில்வே துறையை நவீனமயமாக்குவதில் வந்த பாரத் முக்கிய இடத்தில் உள்ளது.

ரயில்வே அமைச்சகம் ரயில்வே அமைச்சகம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 200 வந்தே பாரத் ரயில்களை உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. மேலும் வந்தே பாரத்-ன் முதல் ஸ்லீப்பர் ரயில் பெட்டியை 2024 முதல் காலாண்டில் இயக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. டாடா ஸ்டீல் இந்த முக்கியமான இலக்குகளை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே மற்றும் டாடா ஸ்டீல் இடையே உற்பத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான பல திட்டங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே போக்குவரத்தை நவீனமயமாக்குவதில் டாடா ஸ்டீல் இணைந்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் உள்ள இருக்கைகள், முதல் வகுப்பு ஏசி முதல் மூன்றாம் தர ஏசி பெட்டிகள் வரை, இனி டாடா ஸ்டீல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். ரயிலின் Linke Hofmann Busch (LHB) பெட்டிகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் டாடா ஸ்டீல் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன் கீழ் பேனல்கள், ஜன்னல்கள் மற்றும் ரயில்வேயின் கட்டமைப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.பன்னாட்டு ஸ்டீல் நிறுவனங்கள் இது போக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக, பன்னாட்டு ஸ்டீல் நிறுவனத்திடம், இந்திய ரயில்வே துறை சுமார் 145 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த உதிரிபாகங்களின் உற்பத்தி அடுத்த 12 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. சிறப்பு சீட் வடிவமைப்பு டாடா ஸ்டீல் தற்போது 16 கோச் பெட்டிகள் கொண்ட 22 ரயில்களை தயாரிக்க உள்ளது. இந்த 22 ரயில்களில் இருக்கும் சீட்கள் அனைத்தும் விமானத்தில் இருப்பது போல் 180 டிகிரி வரையில் திருப்ப கூடிய வகையில் சிறப்பு வடிவமைப்பை கொண்டு இருக்கும் என டாடா ஸ்டீல் துணை தலைவர் Debashish Bhattacharya தெரிவித்துள்ளார்.