
ருத்ராட்சை..
கழுத்தில் அணிந்து
கொண்டு
இதை மட்டும் செய்யாதீங்க..
ருத்ராட்சம் செய்யும் அற்புதம்..
பாருங்க
நம் முன்னோர்கள் எதை செய்தாலும்,
அறிவியல் காரணங்களையும் ஆராய்ந்தே கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்..
ருத்ராட்சை மாலை அணிவதிலும்,
ஆன்மீக காரணமும் உண்டு,
அறிவியல் காரணமும் உண்டு.
ருத்ராட்சையை பொறுத்தவரை,
இயற்கையான ஆண்டிபயாடிக் தன்மை வாய்ந்தது.
இதனால், நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதுடன்,
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது..
ருத்ராட்சை:
அத்துடன், இயற்கையாகவே நேர்மறை ஆற்றலை ஈர்க்க கூடிய சக்தியையும் பெற்றிருக்கிறது..
எனவே, நம்முடைய உடலுடன் இந்த ருத்ராட்சை ஒட்டியிருக்கும்போது,
நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படும்..
இதன்காரணமாக, மனதில் ஒருவித தெளிவும்,
நிம்மதி உணர்வும்,
ஆத்ம திருப்தியும் கிடைக்கின்றது…
அதைவிட முக்கியமாக,
பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற அபாய நோய்களின் வீர்யத்தை இந்த ருத்ராட்சைகள் குறைக்கின்றன..
அவ்வளவு ஏன்? நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் இந்த ருத்ராட்சை ஆற்றிவிடும்.
காரணம், இந்த ருட்ராட்சையை சுற்றி, வெப்பத்தை கிரகித்துக்கொண்டு சுற்றுப்புறத்தினை குளிர்விக்கும் தன்மை உள்ளது…
அதனால்தான், இதை அணியும்போது, உடல் குளிர்ச்சி பெறுகிறது.
எனவே, இந்த ருத்ராட்சையை, ஒரு மதம் மட்டுமேயல்லாமல், அனைத்து மதத்தினருமே அணியலாம்..
வயது வித்தியாசமின்றி அணியலாம்.
ஆன்மீக ரீதியாக பார்த்தோமேயானால், மிகவும் புனிதம் நிறைந்த, மங்களகரமான பொருளாக ருத்ராட்சை பார்க்கப்படுகிறது..
21 வகைகள் ருத்ராட்சங்கள் உள்ளதாம்.
சிவபெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானதாக சொல்வார்கள்..
எனவேதான், சிவபக்தர்கள் இந்த ருத்ராட்சையை அணிந்து கொள்வார்கள்..
இதனால் மனம் அமைதி பெறுவதுடன், முன்னேற்றம், செல்வம், மகிழ்வான வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
எனினும், ருத்ராட்சை அணியும்போது சில விஷயங்களை மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக, திதி, பெண்கள் தீட்டு, தாம்பத்யம் என்ற 3 விஷயங்களும் இயற்கையாக நடைபெறக்கூடிய நிகழ்வு என்பதால், இதுபோன்ற நேரங்களில் ருட்ராட்சை அணியலாம்..
சிவப்பு, மஞ்சள், வெள்ளை நூலில் அணியலாம்..
அல்லது வெள்ளி, தங்கம், தாமிரத்தில்கூட அணியலாம்.
ஆனால், கருப்பு நூலில் மட்டும் இதை கோர்த்து அணிய கூடாதாம்.
யாராவது ஒருவர் இறந்த இடத்திற்கோ அல்லது தகனம் செய்யும்போதோ ருத்ராட்சத்தைஅணியக்கூடாது…
அதேபோல, படுக்கையறையிலும் ருத்ராட்சம் அணியக்கூடாது.
ஒவ்வொரு இரவும் தூங்கும் முன்பும், ருத்ராட்சை மாலையை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு படுப்பது நல்லது.
இதனால் மனம் அமைதி பெறுவதுடன், நல்ல தூக்கமும் வரும்.
பிறந்த குழந்தையை பார்க்க செல்லும் போது ருத்ராட்சம் அணியக்கூடாது.

இதனால் வாழ்க்கையில் தொல்லை ஏற்படலாம் என்கிறார்கள்..
அதேபோல, ருத்ராட்சம் அணியும்போது மது அருந்தக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, இறைச்சி சாப்பிடக்கூடாது.
முக்கியமாக, இறைச்சி, ஆல்கஹால் சாப்பிடும் இடத்திலும் ருத்ராட்சை அணியக்கூடாது..
இதை மீறினால் ருத்ராட்சமும் தூய்மையற்றதாகிவிடுமாம்..
அத்துடன், வரக்கூடிய நன்மைகளும் உங்களை வந்து சேராது..
அசைவம் சாப்பிட நேர்ந்தாலும், அந்த நாட்களில் ருத்ராட்சையை கழட்டிவிட வேண்டுமாம்.
இறுதி ஊர்வலம் செல்லும்போதும் ருத்ராட்சம் அணியக்கூடாது.
மொத்தத்தில், மனதை அடக்கி, மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் ஆற்றல் நிறையவே உள்ளது..
ருத்ராட்சம் அணிபவர்களுக்கு ஞாபகசக்தியும் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.