கடகம் குரு பெயர்ச்சி பலன்கள்..!! 2024

கடகம் ராசி அன்பர்களே..!!குரு பெயர்ச்சி பலன்கள்..!!வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை கனிவும், கற்பனை வளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!! இதுவரை தொழில் ஸ்தானமான பத்தாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது (01.05.2024) அன்று முதல் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். லாப ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான புத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் இளைய உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் மேம்படும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குரு ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். பேச்சில் தெளிவு பிறக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். தனிப்பட்ட சில அனுபவத்தின் மூலம் செயல்களில் மாற்றம் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். குரு ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் அயல்நாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வீர்கள். தர்ம பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். அரசாங்க விஷயங்களில் இருந்துவந்த தாமதம் நீங்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குரு நின்ற பலன்:குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கும், மதிப்பும் உயரும். குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. வெளிவட்டார தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொண்டு வரவுகளை மேம்படுத்துவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்வதற்கான சூழல் உண்டாகும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், பணி நிமிர்த்தமான வெளியூர் தொடர்புகளால் மதிப்பும், ஆதாயமும் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களிடத்தில் புரிதலும், அனுசரிப்பும் வேண்டும். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்கான சூழல் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். அசையா சொத்துக்களை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஈர்ப்பு ஏற்படும்.குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர கால சஞ்சாரம் ஆகும் சிந்தனையின் போக்கில் சற்று கவனத்துடன் இருக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நெருக்கடிகளை குறைக்கும். சுபகாரிய செயல்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் போட்டிகள் மேம்படும். வெளியூர் பயணங்களில் ஆதாயத்தை அறிந்து மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மற்றவர்களின் பேச்சுக்களில் உள்ள உண்மை நிலைகளை அறிந்து புதிய செயல்களில் ஈடுபடுவதை மேற்கொள்ளவும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு குழந்தைகள் பற்றிய கவலைகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான முயற்சிகள் கைகூடிவரும். சிறு மற்றும் குறுந்தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். ஆசிரியர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகளும், உயர்வான சூழல்களும் கிடைக்கும். முயற்சிக்கு உண்டான இடமாற்றம் அமையும். மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும்.சகப்பணியாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரிகள்: வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் குறையும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளும், அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் உண்டாகும். வாக்குறுதிகள் அளிக்கும்பொழுது சற்று சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் தகுந்த ஆவணங்களைக் கொண்டு செயல்படுவது லாபத்தை பெருக்கும். நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் சேர்க்கை ஏற்படும். கூட்டாளிகளுடனான பணிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். கலைஞர்கள்: கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் சார்ந்த ஒருவிதமான குழப்பம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்கு பின்பு சாதகமான வாய்ப்புகளும், மதிப்புகளும் ஏற்படும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களால் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். அரசியல்வாதிகளுக்கு ஒரு பொன்னான காலமாக அமையும். பொதுமக்களின் ஒத்துழைப்பும், தொண்டர்களின் ஆதரவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். கட்சி சார்ந்து வெளியூர் பயணம் செல்லக்கூடிய சூழல் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை நுட்பமாக செயல்பட்டு, உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் மாற்றங்களை உருவாக்குவீர்கள். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் எதிர்காலம் சார்ந்த சில முதலீடுகளை ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது. வழிபாடு: செவ்வாய்க்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் கைகூடிவரும். கடக ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 70/100 மதிப்பெண்களை பெற்று இருப்பதால் தீயாக வேலை செய்து மறைமுகமான தடைகளை வெற்றி கொள்ளுங்கள். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.  நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று கொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.  நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.  நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.  எனவே நாம் வரிசையில் காத்திருக்கும் போது  நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள். தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள். பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.   நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள். உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள். சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள். சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.  நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள். மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை. ✨இவைகளை ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தில் 🌿துரைவேலு கிருஷ்ணசாமி  🌺🌺🌺💕💕💕💕🚩🚩🚩🚩

ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள்..!! 2024

ரிஷபம் ராசி அன்பர்களே..!!குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரைகலகலப்பான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் வசப்படுத்தும் திறமை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே..!! இதுவரை போக ஸ்தானமான பனிரெண்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் 01.05 2024 முதல் ராசி ஸ்தானமான ஜென்ம வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். ஜென்ம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான புத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் குழந்தைகளிடமிருந்து வந்த வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். நினைத்த இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குரு ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். நெருக்கமானவர்களின் மூலம் சில மாற்றங்கள் உருவாகும். மறைமுகமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். குரு ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும். தெய்வீக பணிகளில் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். கடன் பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

குரு நின்ற பலன்:

ஜென்ம வீட்டில் குரு நிற்பதால் கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களால் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். பழைய சிந்தனைகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:

குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வாகன பழுதுகளை சரிசெய்து கொள்வது வீண் விரயங்களை தவிர்க்கும். கிடைக்கும் வாய்ப்பு சிறியதாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளவும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

கொடுக்கல், வாங்கல் செயல்களை குறைத்துக் கொள்வது நல்லது. முன்ஜாமீன் செயல்களை தவிர்த்துக் கொள்ளவும். முயற்சிகளில் உண்டாகும் தடைகளின் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். மனதளவில் எதிர்காலம் சார்ந்த சில புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். உங்கள் பேச்சுக்கான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். சேமிப்பு தொடர்பான புதிய திட்டங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.

குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,

நபர்களின் தன்மைகளை அறிந்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் கூறவும். ஆடம்பர சிந்தனைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில போட்டிகள் இருந்தாலும் மாறுபட்ட அனுபவங்களின் மூலம் வெற்றிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் கவனத்தோடு செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:

குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:

நிலுவையில் இருந்துவந்த வரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் சுபகாரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்கள்: குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சிக்கனத்தோடு செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களின் மற்றொரு முகத்தை அறிவீர்கள். எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. பிள்ளைகளின் திருமணம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகள் பற்றிய கவலைகள் குறையும். மாணவர்கள்: பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆசிரியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். தொலைத்தொடர்பு துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் நிதானம் வேண்டும். ஆராய்ச்சி மற்றும் சமூகம் தொடர்பான கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பொறுப்புக்கான தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாலின மக்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மறைமுகமான இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். கால்நடை வளர்ப்புகளில் சற்று விழிப்புணர்வு வேண்டும். மருத்துவ துறையில் சாதகமான வாய்ப்புகள் அமையும். வியாபாரிகள்: நீண்ட நாட்களாக தேக்கத்தில் இருந்துவந்த பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய தொழில் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உண்மை நிலைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கவும். பங்குதாரர்களின் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஜவுளி மற்றும் மருத்துவ பொருட்களின் வியாபாரம் மூலம் லாபம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கலைஞர்கள்: கலைத்துறையில் சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வும், ஆர்வமின்மையும் குறையும். அயல்நாட்டு தொடர்பு நிறுவனங்களால் ஆதாயம் அடைவீர்கள்.அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகளுக்கு சிக்கல்கள் குறையும். சில மாற்றமான தருணங்களும், வாய்ப்புகளும் ஏற்படும். இழுபறியான சில வழக்குகள் சாதகமாக முடியும். அரசு அதிகாரிகளிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் மனதில் புதுவிதமான இலக்குகளும், சுபகாரிய பணிகளில் ஒத்துழைப்பும், வெளியூர் சார்ந்த பயணமும் கைகூடி வரும். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து, அடக்கத்தோடு செயல்படுவது மேன்மையை உருவாக்கும். வழிபாடு: வியாழக்கிழமைதோறும் சித்தர்களின் வழிபாடும், ஜீவ சமாதிக்கு சென்று வருவதும் மனதளவில் இருந்துவந்த குழப்பங்களை குறைத்து தெளிவினை ஏற்படுத்தும். ரிஷப ராசி அன்பர்களே.. பொதுவாக 80/100 மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் இந்த குரு பெயர்ச்சியில் உங்களுக்கு ஆதாயம் என்பது குறைவுதான். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் தான் ஆர்வம் உண்டாகும். அதனால் நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்களை மேற்கொள்ளவும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள்..!! 2024

மேஷம் ராசி அன்பர்களே..!!குரு பெயர்ச்சி பலன்கள்..!!வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில்01.05.2024 முதல் 11.05.2025 வரை எதிலும் துரிதமாகவும்.. வேகமாகவும் செயல்படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..!! இதுவரை ஜென்ம ஸ்தானமான ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ஆம் (01.05.2024) நாள் முதல் ராசிக்கு தன ஸ்தானமான 2ம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சத்ரு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான அஷ்டம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் வழக்கு பிரச்சனைகள் சாதகமாக அமையும். விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். குரு ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் தூரத்து உறவினர்களின் வருகை உண்டாகும். அயல்நாட்டு பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல்கள் கைகூடிவரும். குரு ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதினால் நிர்வாக திறன் மேம்படும். சேவை தொடர்பான செயல்களில் ஆர்வம் உண்டாகும். புதிய நிறுவனம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த சில உதவிகளால் மேன்மை ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவ பொறுப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

குரு நின்ற பலன்: குரு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடிவரும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். முகத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி மனதளவில் தெளிவும், தனவரவு தொடர்பான எண்ணங்களும் அதிகரிக்கும். குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், தனவரவு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை துறைகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், பொருளாதார சிக்கல்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். கடன் பிரச்சனைகளை குறைப்பீர்கள். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் திருப்தியில்லாத சூழல் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும்.குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: தனம் சார்ந்த விஷயங்களில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்ளவும்.உறவினர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாகன பழுதுகளை சரிசெய்து கொள்வது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். தாயின் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தாயாருடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் விலகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனைகள் விலகும். புதுவிதமான துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். தடைபட்ட கல்விப் பணிகளை மேற்கொள்வதற்கான சூழல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் சாதகமாகும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த பணிகளில் இருந்துவந்த அலட்சிய போக்கு மறையும். சக ஊழியர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்புகள் மாறுபடும். பணி நிமிர்த்தமான சில பயணங்கள் கைகூடும். வியாபாரிகள்: வியாபாரத்தில் புதிய வியூகங்களை அமைத்து செயல்படுவீர்கள். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். கமிஷன் சார்ந்த வியாபாரத்தில் லாபம் ஏற்படும். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கலைஞர்கள்: கலைத்துறையில் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். புதுவிதமான அனுபவங்களால் மாற்றம் ஏற்படும். விமர்சனப் பேச்சுக்கள் படிப்படியாக குறையும். தடைபட்ட தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இசை துறைகளில் தனிப்பட்ட நாட்டம் பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தலைமை அதிகாரிகளுடன் நெருக்கமாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் உயரும். விமர்சனப் பேச்சுக்களின் தன்மையறிந்து செயல்படுவது நல்லது. நன்மைகள்:நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளும், வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகளும் கிடைக்கும். கவனம்:நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் செலவுகளின் தன்மையிலும், சிந்தனை போக்கிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வழிபாடு:செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர ஒத்துழைப்பும், மேன்மையும் ஏற்படும். மேஷ ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் பொதுவாக 40/100 மதிப்பெண்களை மட்டும் பெறுவதால் மற்றவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் கப்சிப் என இருந்து கவனத்தோடு செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

*கடவுள் எப்படிப்பட்டவன்?*

*கடவுள் எப்படிப்பட்டவன்?* கவியரசன் கண்ணதாசன் சொன்னது. #ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். 🪷மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽 🪷பூலோகத்தில் வாழும்போது  புகழையும் கொடுப்பான். 🪷பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽     🪷பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான். 🪷அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான். 🪷பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான். *அவன் தான் கடவுள்*🙏🏽    🪷கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். 🪷அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽    🪷ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான். 🪷பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை 🐅 புலிக்கும் கொடுப்பான். *அவன்தான் கடவுள்🙏🏽*    🪷அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான். 🪷அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽 🪷தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். 🪷அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். *அவன்தான் கடவுள்🙏🏽*    ‌ 🪷நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். 🪷அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். *அவன் தான் கடவுள்🙏🏽*    🪷புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். 🪷தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். *அவன் தான் கடவுள்🙏🏽* 🪷கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். 🪷தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். *அவன் தான் கடவுள்🙏🏽*      🪷மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். 🪷சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். 🪷பின்னிருந்து இயக்குவான். *அவன் தான் கடவுள்🙏🏽*     🪷தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான். 🪷(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். *அவன் தான் கடவுள்🙏🏽*

10 கிராம் விலை ஒன்றரை லட்சத்தை தாண்டும்..

10 கி விலை ஒன்றரை லட்சத்தை தாண்டும்.. தங்க விலையில் நடக்க போகும் ட்விஸ்ட்.. எக்ஸ்பர்ட்ஸ் கணிப்பு 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும்.. அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக தங்கத்தின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. 2024 முதல் காலாண்டில் மட்டும் தங்கம் 13% உயர்ந்தது. நேற்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 68,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 75110 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 55,080 ரூபாயாக உள்ளது. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் குறைந்தாலும் தொடர்ந்து மற்ற நாட்களில் மிகப்பெரிய அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் ஒரு சவரன் விலை 60 ஆயிரத்தை விரைவில் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2030ல் விலை உச்சம் அடையும்: 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார். சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. வடகொரியா – தென் கொரியா போர் , உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் – ஈரான் போர் போன்ற போர்கள் தற்போது நடக்கின்றன. பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலதும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் மத்திய வங்கியின் அதிக அளவிலான தங்க கொள்முதல், பணவீக்க அழுத்தங்கள், அதிகரித்த சில்லறை தேவை, பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் மூலம் அதிகரித்த வட்டி, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கு பங்களித்துள்ளன. இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும். அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும். தங்கத்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இப்படி உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, தங்கத்தின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தங்க நகை வாங்கப் போறீங்களா..

அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க! என்னதான் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தாலும், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை. தங்கம் சிலருக்கு அழகினை ஒரு படி கூட்டும் ஆபரணமாக இருக்கிறது. ஆனால் பலருக்கு அது சேமிப்பு. அப்படி அடிக்கடி தங்கம் வாங்குவோருக்குத் தான் இந்தப் பதிவு. தங்க நகைகள் பெரும்பாலும் அதன் அழகிய வடிவமைப்பினால் தான் மக்களால் ஈர்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இதனாலேயே மக்கள் அதன் டிசைன்கள் மற்றும் அதன்மீது பதிக்கப்பட்ட கற்கள் ஆகியவற்றை பார்த்துவிட்டு வாங்கி விடுகின்றனர். பொதுவாக தங்க நகைகள் அழகிய கற்களாலேயே அலங்கரிக்கப்படுகின்றன. அவ்வாறு கற்களால் வடிவமைக்கப்பட்ட நகைகளை வாங்கினால் மீண்டும் அதனை விற்கும் பொழுதோ அல்லது அடகு வைக்கும் பொழுதோ அதன் மீது பதிக்கப்பட்ட கற்களுக்கான மதிப்பு பூஜ்ஜியமாகும். அதாவது அந்த கற்களுக்கு மதிப்பு கிடையாது. இதனை நகை வாங்கும்பொழுது வாடிக்கையாளர்களுக்கு சில நகை கடை உரிமையாளர்கள் கூறிவிடுவர். அனால் பலர் தங்களின் லாபத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்ய மாட்டார்கள். எனவே தங்க நகை வாங்கும் நீங்கள், இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தங்க நகைகள் வாங்கும் பொழுது சில முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக நகை வாங்கும் இடமானது நமக்கு நன்கு தெரிந்த நம்பிக்கையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இல்லை எனில் பாரம்பரியமாக நகை செய்யும் பொற்கொல்லரிடம் சென்று நகைகளை வாங்கலாம். மேலும் வண்ண வண்ண கற்கள் பதித்த நகைகளை வாங்குவதை தவிர்த்து விட்டு கற்கள் இல்லாத சாதாரணமாக வடிவமைக்கப்பட்டுள்ள நகைகளை வாங்குவதில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்கள் இல்லாத நகைகளை வாங்கும் பொழுது நகைகளின் மீதான மதிப்பு அப்படியே இருக்கும். தங்க நகைகள் பெரும்பாலும் சாதாரண மக்களுக்கு ஒரு பெரும் முதலீடாக இருப்பதால் நகை வாங்குவது நகைகளை சேர்ப்பது என்பது மிக முக்கியமான விஷயமாகும். அத்தகைய தங்க நகைகளை தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம். அதோடு மட்டுமில்லாமல் சேதாரம் குறைவாக உள்ள தங்க நகைகளை வாங்க வேண்டும். நகையின் தரம், தங்கத்தில் கேரட் மதிப்பு எவ்வளவு உள்ளது என கவனித்து வாங்க வேண்டும். ஒரு கிராம் தங்கத்தின் விலை இவ்வளவு என்றும் ஒரு சவரன் தங்கத்தின் விலை இவ்வளவு என்றும் தெளிவாக தெரிந்து கொண்டு நகை வாங்க சென்றாலும் நகையின் விலையில் இருந்து சேதாரம் செய்கூலி என்று சொல்லி அதிகப்படியான பணத்தை நம்மிடமிருந்து பெற்றுக் கொண்டுதான் நகையை நம்மிடம் விற்கின்றனர். இதுபோல் இல்லாமல் சேதாரம் செய்கூலி இல்லாமலோ அல்லது சேதாரம் செய்கூலி குறைவாக உள்ள நகை கடையில் சென்று நகை வாங்குவது நல்லது. மேலும் நாம் வாங்குவது ஹால்மார்க் தங்க நகை தானா என்று உறுதி செய்து கொள்வது இன்னும் நல்லதாகும். ஏனெனில் நாம் வாங்கும் பொழுது இருந்த தங்கத்தின் மதிப்பு நாம் விற்கும் பொழுதோ அல்லது அடகு வைக்கும் பொழுதோ இருப்பதில்லை. இவ்வாறு நிகழும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு நகை வாங்கும் பொழுது மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் கவனத்தில் வைத்துக்கொண்டு நகைகள் வாங்க வேண்டும்.

மன்னித்தல்  என்பது  இறைவனின் அகராதியிலேயே  கிடையாது

*மன்னித்தல்  என்பது  இறைவனின் அகராதியிலேயே  கிடையாது  என்ற  கசப்பான  உண்மையை  நாம்  அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டும்.* ***********************************************   கல்லாப்  பிழையும்  கருதாப்  பிழையும்  கசிந்து  உருகி நில்லாப்பிழையும்  நினையாப்பிழையும்  நின்ஐந்தெழத்தை சொல்லாப்  பிழையும்  துதியாப்பிழையும்  தொழாப்பிழையும்எல்லாப்  பிழையும்  பொறுத்தருள்வாய்கச்சி  ஏகம்பனே .                –பட்டினத்தார்          இந்த  பாடலை  நம்மில்  பெரும்பாலோர்   அடிக்கடி  பாடி  இருப்போம். அதுவும்  பக்தி  மனநிலையில்  பாடி  இருப்போம்.        ஆனால்  ஒரு நாள்  ஈஸ்வரன்  என்னை  பார்த்து  திட்டுவது  போல்  உணர்ந்தேன் .  ஈஸ்வரன்  கேட்கிறார்  :-   நான்  ஏன்டா  கல்லா பிழையை  பொருத்துக்கனும் ?        நீ  உண்மையையும் ,  நீதியையும்,  ஆன்மாவை பற்றியும்   கற்று தெரிந்து  கொள்ள வேண்டும்  என்பதற்காக  தான்  உன்னை  பூமிக்கே  அனுப்பினேன்.        நீ  என்னடான்னா இங்கு  வந்து  ஒழுங்காக குருவை நாடி  தீட்சை பெறாமல் கல்வியும் கற்காமல் என் கோவிலுக்கு  வந்து   ” கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் … பொருத்து அருள்வாய்  ”  என்று  பிரார்த்தனை  செய்கிறாய் . ஒரு  உண்மையை  சொல்கிறேன்  :- தானமும்,   தவமும்,  பூமியில் மட்டும் தான் செய்ய முடியும்.  பூமியில் வாழும் காலத்தில் நீ தானம்,  தர்மம், தவம், செய்யாமல் வாழ்ந்து இறந்த பிறகு சூட்சும தேகத்தில்  இருக்கும் போது தானம், தர்மம்  செய்ய வேண்டும்  கடவுளே என்று  என்னிடம்   பிரார்த்தனை  செய்தால்;           நான் என்ன சொல்வேன்; அடப்பாவி  அதற்கு  தானே  உனக்கு  ஸ்தூல தேகம் கொடுத்து   பூமிக்கு  அனுப்பினேன்.  நீ என்னடா  என்றால்  அங்கு  ஒழுங்கா  எதையும்  கற்காமல் , தானமும்,  தவமும்  செய்யாமல் வாழ்ந்து விட்டு  இப்பவந்து  கேட்கிற.       சரி என்ன பன்றது   மறுபடியும்  பூமியில்  போய்  பிறந்து  முறையாக  குருவை நாடி தீட்சை பெற்றும் கல்வி கற்றும்,   தானம்  தவமும்  செய்து  வாழ்ந்து விட்டு  வா  என்று  தான்  சொல்வேன்.          மேல்  உலக வாழ்கை  என்பது   பூலோக  வாழ்க்கையின் போது செய்த  தானம்,  தவம், மற்றும்  பெற்ற  ஞானம்  போன்றவற்றிற்கான   பலனை  அனுபவிக்கிற  வாழ்கை  ஆகும்.        ” பதவி பூர்வ  புண்ணியானாம் ”    பூமியில்  வாழம் போது  100 அஸ்வமேத யாகம்  செய்தால்,  இறந்த பிறகு  சொர்க்கத்திற்கு  சென்றால்  அங்கு  இந்திர பதவியே  கொடுக்கப்படும்  என்பது  தான்  சாஸ்திரம்  ஆகும்.        அதனால்  தான்  மகாபலி  அரசன்  100 அஸ்வமேத யாகம்  செய்தான்  என்பது  உனக்கு  தெரியாதா?       ஒருவேளை  உனக்கு  சொர்க்கம் போன்ற  மகிழ்ச்சி  மற்றும்  பதவிகள்  மீது  எல்லாம்  பற்று இல்லை  என்றால்   முக்தி  அடைய வேண்டும்  என்பது  தான்  விருப்பம்  என்றால்  ;       நீ  ஒரு  குருவை சரண் அடைந்து   ஸ்தூல தேகம் ,  சூட்சும தேகம்,   காரண தேகம்,   மகா காரண தேகம்,   போன்ற  உண்மைகளையும், பசு பதி பாசம்  போதிக்கிற   சைவசித்தாந்த கல்வியை  கற்க வேண்டும். 96 தத்துவங்கள் பற்றியும் ,   தசகாரியம் பற்றியும்  கற்க வேண்டும்.       அப்படி  கற்றால்  தான்   அதன் படி வாழ்ந்து   ஸ்தூல தேகம்,  மனோதேகம்  போன்றவற்றில்  இருந்து  எல்லாம்   விடுபட்டுத்தான்   ஜீவன் முக்தி  நிலையை அடைய முடியும்.      இந்த  சைவசித்தாந்தம்  கல்வியை  கற்பது  என்பது முக்தி  பிராப்தத்தை  விரும்பும்   மனிதனுக்கு  இன்றியமையாதது  ஆகும்.        இந்த  சைவசித்தாந்தம்  கல்வியை  கற்பதற்காக  ஒருவன்  பிச்சை எடுத்தாலும்  தவறு  இல்லை  என்று ” வெற்றி வேற்கை  ”  என்ற  நூலின்  மூலம்  உலகுக்கு  சொன்னேன் .   ” கற்கை  நன்றே  கற்கை நன்றே     பிச்சை  புகினும்  கற்கை  நன்றே ” பிச்சை  எடுத்தாவது   சைவசித்தாந்தம்  கல்வியை  படிடா   என்று  சொன்னல் ;  நீ  என்னடா என்றால்   ” கல்லாப் பிழையும்  பொருத்து  அருள்வாய்  ”  என்று  பிரார்திக்கிறாய்.         சொல் பேச்சை  கொஞ்சம் கூட கேட்க மாட்டுங்கிற !!         நீ  அப்படி  குருவை  நாடி  சென்று  கல்வி  கற்றாலும்   அந்த  கல்வி  அவ்வளவு  லேசில்  உன்  மனதில்  தங்கி விடாது .  அது  உலக மயக்கங்களால்   மறைந்து  மறந்து  போய்விடும் .      அதனால்  தான்  சிவ தீட்சை பெற்று சைவசித்தாந்தம் கற்க வேண்டும், தினமும்  கற்ற கல்வியை  அசை போட  வேண்டும்  என்று  அறிவுருத்தினேன் .

” காலையும் மாலையும்  நான்மறை
ஓதா அந்தணர்  என்போர்  அனைவரும் பதரே “

        — வெற்றி வேற்கை

மேலும்  ஒளவையார்   வாக்கின்  வழியாகவும்    கல்வி  என்பது  மனப்பழக்கம்  என்று  அறிவுருத்தினேன்.

”  சித்திரமும்  கைப்பழக்கம் ,   செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு  கல்வி   மனபழக்கம்  “

கற்ற  சைவசித்தாந்தம்  உண்மைகளை  அவ்வப்போது படித்து  வர வேண்டும். அதை  நன்றாக மனதிற்கு  பழக்கப்படுத்திவிட  வேண்டும்.

        அப்போது தான்  அதன்படி  நடக்க, வாழ ,   உன் மனம்  ஆயத்தம்  ஆகும்.

அதனால் தான்  “ஓதா  கல்வி  கெடும் ”  என்றேன்.

      ஒருமுறை  படித்துவிட்டால்   எல்லாம் உன் மனம்   சைவசித்தாந்தம்  நெறிப்படி வாழ   தயாராகிவிடாது.     மீண்டும் மீண்டும்   தொடர்ந்து கற்று  அதனுடனேயே பயணித்து  அதனுடனேயே கலந்து  அதுவாகவே உன் மனம்  மாறிவிட வேண்டும்.

      அப்படி பட்ட  நிலையை  அடைந்த பிறகு  தான்  ஸ்தூல தேகம்,  மனோதேகத்தை எல்லாம்   விட்டு  விலகி சென்று  சத்தான ஆத்மாவை  மகா காரண தேகத்தை  அடைய முடியும்.

     இப்படி  இருக்க  நீ  என்னடா  என்றால்   இந்த  பட்டினத்தாரின்  ஒரு   பாடலை  பிடித்து  கொண்டு    அடிக்கடி  என் முன்  வந்து   ”  கல்லாப் பிழையும்  கருதாப் பிழையும்  .. ”   என்று  வேண்டுகிறாய்.

        கல்லாப் பிழையை   எல்லாம்  ஈஸ்வரனாகிய  நான் பொறுத்துக் கொண்டு   திடீர்  என்று  உனக்கு  முக்தி நிலையை  கொடுத்தாலும், அது  முக்தி  என்று  உனக்கு  தெரியாது.   உன்னால்  அதை  உணர  முடியாது.

       அதனால்  முட்டாள் தனமாக என் முன்  வந்து  கல்லா பிழையும்   கருதாப் பிழையும் ..   பொறுத்து அருள்வாய்   என்று  வேண்டாதே.

      2010 ம்  ஆண்டு  என்  கோவிலுக்கு  வந்து   கல்லா பிழையும்  கருதாப் பிழையும் என்று  பிரார்த்தனை  செய்தாய்.  சரி காலம்  போக போக நீ கல்வி  கற்றுக்கொள்ளலில்  ஆர்வம்  செலுத்துவாய்   என்று  பார்த்தேன் ;

         ஆனால்   நீயோ   2015 ம்  ஆண்டும்   கோவிலுக்கு  வந்து  மறுபடியும்   கல்லா பிழையும்  கருதாப் பிழையும் என்று  பிரார்த்தனை செய்தாய் .

        சரி போகட்டும்  இனியாவது   சைவசித்தாந்தம்  உண்மைகளை  கற்பதில்  கவனம்  செலுத்துவாய்  என்று  பார்த்தால்  நீயோ   2024 ம்  ஆண்டும்   என்   கோவிலுக்கு  வந்து  மறுபடியும்  கல்லா பிழையும் கருதாப் பிழையும்    என்று பிரார்த்தனை செய்கிறாய் .

ஒரே பல்லவியையே   ஆயுள்  முழுவதும்  பாடுகிறாய்.   அதனையும்  உன்னை போல்   அறிவிலியாட்டம்   என்னையும்  கேட்க சொல்கிறாய். இது நியாயமா  என்று  சற்று  யோசித்துப் பார்.

      இந்த  ஆண்டு  கற்க வில்லையா  என் கோவிலில் வந்து  இந்த  பாடலை பாடிவிட்டு  அடுத்த  முறை  வரும் போது   கற்றுகொண்டு  வருகிறேன்  இறைவா   என்று  நீ  சொன்னால்  அது  நல்ல பிள்ளைக்கு  அழகு . 

        அதனால   சும்மா  ஓப்பி அடிச்சு  ,   இந்த  பாடலை பாடியே   பஜனை  பண்ணிட்டு  போய்டலாம்   கடவுள்  நமக்கு  முக்தி  கொடுத்து விடுவார்  என்று  என்னுகிறாயா !!

          நாட்டில்  நிறைய  அடியார்கள்  இப்படித்தான்  திரிகிறார்கள் . 

         நீயாவது  பரவாயில்லை   வேறு  ஒரு   முருகன் அடியார்    இருக்கிறான் .  அவன்   அடிக்கடி  முருகன் கோவிலுக்கு  சென்று 

” ஏது பிழை  செய்தாலும்  ஏழையனுக்கு இறங்கி  தீது  புரியாத தெய்வமே  “

என்று  பாடுகிறான்.

          பக்தர்களாகிய  உங்களுக்கு  எல்லாம்  ஒன்றை  தெளிவாக  சொல்லி கொள்கிறேன்.   ஏது பிழை  செய்தாலும்   பொருத்து கொண்டு  தீது செய்யாதவர்கள்  மூவர்  மட்டும்  தான்.

     1.  அம்மா
     2.  அப்பா
     3.  குரு
இந்த   மூவர்  மட்டும் தான்  தீது புரிய மாட்டர்கள். 

மற்றபடி  தெய்வங்கள்  எல்லாம்   நீதி  பரிபாலனம்  செய்யும்  அதிதேவதைகள்  ஆகும்.        அந்த  நீதி படி  அவரவர்களுக்கு  தண்டனையும்  நன்மையும்  கிடைக்கும் படி  நவகிரகங்களுக்கு    கட்டளை இட்டு   உலகை  பரிபாலனம் செய்து  வருகிறோம் .        எனவே   ஏது பிழை  செய்தாலும்  எல்லாம்   தண்டனை  கொடுக்காமல்  விட்டு விட முடியாது.           சிவ பக்தனான   ராவணன்   நிறைய  பிழைகள்  செய்தான் .  தேவர்களோ   சிவனான  என்னிடம்  வந்து  முறையிட்டனர்.   நானோ  என் பக்தனை நானே  தண்டித்தல்   முறையாகாது .    அதனால்  விஷ்ணு விடம்  சென்று  பிராத்தியுங்கள் .    அவரால்  ராவணனை  தண்டிக்க முடியும்   என்று  நான்  ஐடியா  கொடுத்தேன் .          ராவணன்  என் பக்தன்  என்பதற்காக  அவனை தண்டிக்காமலா  விட்டேன்  !!  சற்று  யோசித்துப் பாருங்கள்.          நாளாயினி  போன ஜென்மத்தில்  சூரியனையே  உதிக்காதபடி  செய்தால் ;   அதற்கு  தண்டனையாக  மறு ஜென்மத்தில்   பாஞ்சாலியாக  பிறந்து  கஷ்டப்பட்டால்.     அவள்  என்னை  கும்பிட்டால்  என்பதற்காக  அவளது  தவரை மூடி மறைத்து  தண்டிக்காமல்  விட்டேனா  என்ன !           திருதிராஷ்டிரன்  போன ஜென்மத்தில்   100   அன்ன பறவைகள்  கறியை  சாப்பிட்டான்  அந்த  பாவம்  பலனாக  அடுத்த  ஜென்மத்தில்  கண் தெரியாத  திருதிராஷ்டிரனாக   பிறந்தான் .     அவன்   என்னை  கும்பிட்டான்  என்பதற்காக  அவனை தண்டிக்காமலா  விட்டேன்.         தசரதன்   ஒரு  அப்பாவி  மனிதனை  கொன்றான்  .  அந்த  பாவத்துக்கு   தண்டனையாக  தான்  சாபம்  பெற்று  மாண்டான்.   என் பக்தன்  என்பதற்காக  அவனது  சாபம்  பலிக்காமல் போகும் படியா  செய்தேன்  ;  இல்லையே .         இதில் இருந்து  எல்லாம்  நீங்கள்  தெரிந்து கொள்ள  வேண்டியது  என்ன ?   சர்வேஸ்வரனாகிய   நான்   நீதி தவறாதவன்  ஆவேன். என் பக்தனே ஆனாலும் தண்டிப்பேன் .        அதனால்   மனிதர்களாகிய  நீங்கள்   தெய்வங்களாகிய   எங்களிடம்  வந்து      ”  ஏது  பிழை செய்தாலும்  தீது  புரியாத  தெய்வம் ”   என்று  சொல்லி  எங்களுக்கு  ஐஸ்  வைக்காதீர்கள் .    இதற்கு  எல்லாம்  மயங்குகிறவர்கள்   அல்ல  தெய்வங்கள்.       ”  எல்லா பிழையும்  பொருத்து  அருள்வாய்  ”   என்று  பிழை செய்யும்  மனிதர்களாகவே  இருப்போம்  நீ தான்  பிழையை  பொருத்து  அருள வேண்டும்    என்பது போல   பிரார்த்தனை    செய்யாதீர்கள்.       தெய்வங்களின்  இயல்புகளையும் ,  அவர்களின் கடமைகளையும்  புரிந்து கொள்ளுங்கள் .     அப்போது  தான்  சரியான  முறையில்  நியாயமான முறையில்  பிரார்த்தனை  செய்வீர்கள் .       எப்போதும்  தெய்வங்களிடம்  இவ்வாறு  பிரார்த்தனை  செய்யுங்கள்  :-     ” பிழை செய்யாமல்  தடுத்தருள்வாய்  ”  என்று  பிரார்த்தனை  செய்யுங்கள் .       ” நண்பனாய்  இருந்து  பிழைகளை  சுட்டி காட்டி  திருத்துவாய்  ”  என்று  பிரார்த்தனை  செய்யுங்கள்.     ” அகத்தூய்மை  செய்வதில்  பேர் உதவி புரிவாய் ”  என்று  பிரார்த்தனை செய்யுங்கள்.         இவ்வாறு   ஈஸ்வரன்  என்னுள்  இருந்து   எனக்கு  உணர்த்தினார்.  

ஆன்மீகவாதிகளான  ,  பக்தர்களான   நாம்   இந்த  புரிதல் உடன்  இருந்தால் தான்   வருங்காலத்தில்   நாம்   பிறருக்கு  உபதேசிக்கும் போது சரியான  பாதையை  காட்ட முடியும்.               எனவே  இதனை மனதில்  கொண்டு  ஆக்க பூர்வமாக  பிரார்த்தனையை  செய்து  இறை அருளை  பெற முயல வேண்டும்.        கல்லாப் பிழையும்   என்று  இருக்கிறதா ;   இனி மேலாவது   சைவசித்தாந்தம்  கல்வியை  படிக்க  முயல வேண்டும்.             அதனால்  இனி  கல்லா பிழையும்  என்ற  பேச்சே  நம்  வாழ்வில்  இருக்க கூடாது.       கருதா பிழையும்   என்று  இருக்கிறதா ;                நம்முள்ளே  ஆன்மாவான சத்து சித்து ஆனந்தமான  சச்சிதானந்தம்  இருக்கிறது.   அதனை அடிக்கடி  கருத வேண்டும்.  நினைக்க வேண்டும்.   அதற்கு  வழி  என்ன  என்றால் ;    ஆன்மீக வாதிகள்  அடிக்கடி” சச்சிதானந்தம்  ”  என்று  சொல்லுங்கள்.         இப்படி   சச்சிதானந்தம்  என்று  சொல்லி  சிந்தித்து  கொள்கிற  முறையை  கடைபிடித்தோம்  என்றால்  தானாக  ஆன்மாவானது ஈஸ்வரனை  கருத ஆரம்பித்துவிடுவோம் .    இதனால்  கருதா பிழை  நம் வாழ்வில்  செய்ய மாட்டோம்.     ஐந்து எழத்தை  சொல்லா  பிழையும் என்று  இருக்கிறதா ;    உணவு  சாப்பிடும்  போதும்  “நமசிவாய வாழ்கநமசிவாய வாழ்க  ”   என்று  சொல்லி விட்டு  சாப்பிடுகிற  பழக்கத்தை  ஏற்படுத்திக் கொள்ளுங்கள் . மற்ற அடியார்களிடம் பேசும்போதும் நமசிவாய வாழ்க என்று சொல்லி விட்டு பேசுங்கள்          இதனால்  நமசிவாய  என்ற  பஞ்சாட்சரத்தை   சொல்லாத  பிழை  நம்  வாழ்வில்  செய்ய  மாட்டோம்.    துதியா பிழையும்  என்று  இருக்கிறதா ;       சர்வேஸ்வரனை  துதிக்க  நமக்கு  தெரியவில்லையா   அல்லது  துதிக்க  நேரம்  இல்லையா   இதற்கு  தீர்வாக  நமது  செல்போனில்   சர்வேஸ்வரனை  துதிக்கின்ற     பாடலை  பதிவேற்றிக் கொள்ள வேண்டும்  .    அதனை  அலாரம்  டோனாக  வைத்து கொள்ள வேண்டும் .        காலையில்  எழும் போது   இந்த  அலாரம்  டோனை  கேட்டு கொண்டே  எழுந்து கொள்ள வேண்டும்  . இதனால்   தானாக  நமது  உள்மனமானது  துதியை   உள்வாங்கிக் கொள்ளும்   தன்மையை  பெற்றுவிடும் .       இதனால்   துதியா பிழை  என்ற  தவறு  நம்  வாழ்வில்  நடக்காது .       தொழா பிழை  என்று  இருக்கிறதா :-            நமது  வீட்டு வாசலின் மேல் பகுதியில்  ஜோதிர் லிங்கம்  புகைப்படத்தை  மாட்டி வைத்து  விடுங்கள்.   அல்லது  உங்களுக்கு  பிடித்த  சதாசிவ மூர்த்தி  புகைப்படத்தை  மாட்டி  வைத்து  விடுங்கள்.       தினமும்  வீட்டில்  இருந்து  வெளியே  கிளம்பும் போது    வாசலுக்கு  மேல் உள்ள  சதாசிவ மூர்த்தி படத்தை  தொட்டு   தலைக்கு மேல் கை வைத்து தொழுது விட்டு  செல்லுங்கள்.   இதனை  ஒரு  பழக்கமாக  வைத்து  கொள்ளுங்கள்.             இதனால்  நமது  கைகள் தலைக்கு  மேல் தூக்கி சாமியை  தொழுத  பலன் கிடைக்கும்.   இதனை  கடைபிடிப்பதால்    தொழா பிழை    என்ற  தவறில்  இருந்து  நாம்  விடுபட்டு  விடுவோம்.             இப்படியாக  ஆன்மீகவாதிகளான ,   பக்தர்களான  நாம்  அனைவரும்  இனி              1.  கல்லா பிழை ,               2.  கருதா  பிழை ,            3.   ஐந்து எழத்தை  சொல்லா பிழை,             4.   துதியா பிழை ,            5.   தொழா பிழை . ஆகிய  ஐந்து  பிழைகளை  செய்யாது  வாழ்ந்து   சிறந்த  பக்தர்களாக திகழ்ந்து  இறையருளை  பூரணமாக பெற்று  வாழ்வோம்  .             சர்வேஸ்வரன்   எதிர்பார்ப்பதும்   இதைத்தான்.   ஏதாவது  ஒருவகையில்   இந்த  பிழைகளை  செய்யாது  வாழ  முயற்சி  எடுத்து கொள்கிறானா  என்று  தான்   பார்க்கிறார். *நமசிவாய வாழ்க* துரைவேலு கிருஷ்ணசாமி

இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!

2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க! சமீப காலமாக தங்கத்தின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், தங்கத்தின் விலை 13 % அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு சிறந்த தேர்வாகவே கருதப்படுகிறது. CNBC-இல் சமீபத்திய உரையாடலில், Vighnaharta Gold-இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூபாய். 1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார். அப்படியானால் 1 கிராம் தங்கத்தின் விலை 16,800 ரூபாயாக இருக்கும்.

9இது பெரும்பாலானோரை திடுக்கிட வைத்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு, சர்வதேச அரசியலில் நிலவும் பிரச்சனைகள் முதல் உலகப் பொருளாதார மந்தநிலை வரை அனைத்தும் இந்த விலை உயர்வுக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன. மேலும், பணவீக்கம், அதிகரித்த தேவை, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர காரணமாகிறது. முதலீட்டிற்கு, உங்கள் பணத்தை எங்கு சேமிக்கலாம்?: சந்தை கணிக்க முடியாததாக இருக்கும் என்பதால், தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாறாக, தங்கத்தின் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதில் முதலீடு செய்வது சாலச் சிறந்தது. தங்கம் உங்கள் பணத்தை பணவீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் உங்கள் முதலீடுகளில் இருக்கும் ஆபத்தைக் குறைப்பதற்கான சிறந்த வழியாக உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் கவனமாக மதிப்பீடு செய்து, ஒரு பகுதியை, பொதுவாக சுமார் 10 சதவிகிதம் வரை அல்லது அதற்கும் குறைவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டம் (Sovereign Gold Bond Plan – SGB) என்பது ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. SGBகள், அல்லது இறையாண்மை தங்கப் பத்திரங்கள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழங்கும் அரசாங்கப் பத்திரங்கள். அவை தங்கத்தை கிராம் கணக்கில் அளவிடப்படுகின்றன. மேலும் நீங்கள் அவற்றை 1 கிராம் முதல் வாங்கலாம். ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு நடத்தும் ஏலங்கள் மூலம் நீங்கள் SGB களைப் பெறலாம். அவற்றை வாங்க, உங்களிடம் பான் கார்டு இருக்க வேண்டும். வங்கிகள், தபால் அலுவலகங்கள் அல்லது பங்கு தரகு நிறுவனங்களில் இருந்து SGBகளை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம். இந்தப் பத்திரங்களின்ஒவ்வொரு யூனிட்டும் ஒருகிராம் தூய தங்கத்தின்மதிப்புடையது. நீங்கள்ஒரு தனிநபராகஇருந்தால் 4 கிலோகிராம்SGBகள் வரையிலும்,நீங்கள்அறக்கட்டளைகளுக்குவாங்கினால் 20கிலோகிராம்கள்வரையிலும் வாங்கலாம். இந்த பத்திரங்கள் உங்களுக்கு 2.5% வட்டியை செலுத்துகின்றன, மேலும் நீங்கள் வருடத்திற்கு இரண்டு முறை பணம் பெறுவீர்கள். இந்த பத்திரங்களிலிருந்து நீங்கள் சம்பாதிக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரிக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். ஆனால், அவை முதிர்ச்சியடையும் போது நீங்கள் பெறும் எந்த லாபத்திற்கும் வரி இல்லை. இந்த பத்திரங்கள் சந்தை நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன. தங்கத்தின் விலைக்கான நம்பிக்கைக்குரிய கண்ணோட்டத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

முழு ஹைட்ரஜன் எஞ்சின் இரயில்வேயில்

வந்தே பாரத் ரயிலின் அடுத்த கட்டம் அறிவிக்கப்பட்டது. முழு ஹைட்ரஜன் எஞ்சின் இரயில்வே சிறந்த அனுபவத்தை தருகிறது.ஒரு அற்புதமான முயற்சியில், இந்திய ரயில்வே மற்றும் ஐஐடி கான்பூர் ஆகியவை இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இன்ஜினை உருவாக்க ஒத்துழைக்கின்றன. இந்த திட்டம் இந்திய ரயில்வே அமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கிறது. இன்ஜின் தொழில்நுட்பத்திற்கான அதிநவீன லேப்: • ஐஐடி கான்பூர் என்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட “ரயில்வே ஆராய்ச்சி மையம்” என்ற அதிநவீன ஆய்வகத்தை நிறுவியுள்ளது. *இந்த ஆய்வகத்தில் மேம்பட்ட ஆராய்ச்சி வசதிகள் மற்றும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் குழு இருக்கும். எஃப் எம் ஜி டி யில் என்ஜின் உற்பத்தி: • ஹைட்ரஜனில் இயங்கும் எஞ்சின் கான்பூரில் உள்ள எலெக்ட்ரிக் லோகோ ஷெட், எஃப் எம் ஜி டி (ஃபசல்கஞ்ச்) இல் தயாரிக்கப்படும். •  *இந்த வசதி இத்தகைய சிக்கலான திட்டங்களை கையாளும் நிபுணத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: • 500 கோடி பட்ஜெட்: இந்திய இரயில்வே இந்த திட்டத்திற்காக 500 கோடி (5 பில்லியன் ரூபாய்கள்) குறிப்பிடத்தக்க பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது, இது புதுமை மற்றும் நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. • இன்ஜின் கூறுகளில் சுய-சார்பு: ஐ ஐ டி கான்பூரின் ஸ்டார்ட்அப்கள் ரயில்வேயுடன் இணைந்து அத்தியாவசிய என்ஜின் பாகங்கள் மற்றும் உதிரி பாகங்களை உருவாக்கி வழங்குகின்றன. • எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பம்: எதிர்கால ரயில்களுக்கான ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குதல், ஆற்றல் நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும். • ஐ ஐ டி கான்பூருடனான ஒத்துழைப்பு:  ஐ ஐ டி கான்பூரின் மின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சியின் நிபுணத்துவம் இன்ஜினின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் அதன் வெற்றியை உறுதி செய்வதற்கும் கருவியாக இருக்கும்.   திட்ட காலவரிசை: • உத்தியோகபூர்வ காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த திட்டம் வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் தாக்கம்: • இந்த திட்டம் இந்திய ரயில்வே அமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டது: • கார்பன் உமிழ்வைக் குறைத்தல்:  ஹைட்ரஜனால் இயங்கும் ரயில்கள் நீராவியை மட்டுமே வெளியிடுகின்றன, அவை டீசல் அல்லது மின்சார ரயில்களை விட கணிசமாக தூய்மையானவை. • எரிபொருள் செலவுகளைக் குறைத்தல்:  ஹைட்ரஜன் மிகவும் நிலையான மற்றும் செலவு குறைந்த எரிபொருள் மூலமாகும், இது ரயில்வேயின் குறைந்த இயக்கச் செலவுக்கு வழிவகுக்கிறது. • தன்னம்பிக்கையை அதிகரிப்பது:  இந்தியாவில் என்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும். ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் வளர்ச்சியானது இந்திய ரயில்வேயின் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். ஐ ஐ டி கான்பூர் மற்றும் இந்திய ரயில்வேயின் ஒத்துழைப்புடன் இயங்கும் இந்தத் திட்டம், போக்குவரத்துத் துறையை மாற்றியமைத்து தூய்மையான சூழலுக்கு.பங்களிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

Always4u
× How can I help you?