துலாம் ராசி..!! 2024 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை அனைவரையும் சமமாக கருதும் துலாம் ராசி அன்பர்களே..!! இதுவரை களத்திர ஸ்தானமான ஏழாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் ஆதாவது 01.05.2024 முதல் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். பலதரப்பட்ட மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தூரதேச பயணம் தொடர்பான முயற்சிகள் சிலருக்கு கைகூடும். குரு ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான தனவரவுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மகிழ்ச்சியான தருணத்தை உண்டாக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குரு ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பழைய சிந்தனைகளால் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குரு நின்ற பலன்: குரு அஷ்டம ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்பாராத சில திடீர் வரவுகள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இனம்புரியாத சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. சகோதரர்களின் வழியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில இடமாற்றங்களால் தடுமாற்றம் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், குடும்ப உறுப்பினர்களிடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். கூட்டாளிகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் தாமதமாக கிடைக்கும். குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும். தடைபட்ட பணிகளை மேற்கொள்வதற்கு சாதகமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மனதளவில் புதுவிதமான பக்குவமும், தெளிவும் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : பெண்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் சாதகமாகும். மாணவர்களுக்கு : மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். மறதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். தாய்வழியில் சரியான வழிகாட்டுதல் மூலம் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த கல்வியில் தனிப்பட்ட ஈர்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு : உத்தியோகத்தில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். சில பணிகளில் மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை உண்டாக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளால் மனதில் ஒருவிதமான குழப்பமும், தடுமாற்றமும் ஏற்படும். வியாபாரிகளுக்கு : வியாபாரப் பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஆதரவுகள் மேம்படும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சிலருக்கு சாதகமாகும். கலைஞர்களுக்கு : கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு : அரசியல்வாதிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளை சாமர்த்தியமாக வெற்றிக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கு தகுந்த விதத்தில் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும்.

நன்மைகள்: குரு பெயர்ச்சியால் பேச்சுக்களின் மூலம் உறவினர்களின் ஒத்துழைப்பையும், புதிய அனுபவ அறிவால் முன்னேறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவீர்கள். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் உடன் பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதும், விவேகமான அணுகுமுறைகளை மேற்கொள்வதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வழிபாடு: வெள்ளிக்கிழமைதோறும் அய்யனாரை வழிபாடு செய்துவர நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் விலகும். துலாம் ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 50/100 மதிப்பெண்களை பெறுவதால் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும்பொழுது சரிவிகித தன்மைகளை புரிந்து விழிப்புணர்வோடு நடந்து கொள்ளவும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி ..!!2024குரு பெயர்ச்சி பலன்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை கனிவும்.. கனவுகளும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இதுவரை அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது 01.05.2024  முதல் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான ராசி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான புத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். முகத்தில் புதுவிதமான புத்துணர்ச்சி ஏற்படும். குரு ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் சகோதரர் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் காணப்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்களும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். குரு ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். குலதெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குரு நின்ற பலன்: குரு பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது நன்மதிப்பை உண்டாக்கும். பிரபலமானவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வமும், தேடலும் ஏற்படும்.

குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் சற்று சிந்தித்துச் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மதிப்பை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபகாரியங்கள் கைகூடிவரும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டார தொடர்புகளால் ஆதாயம் அதிகரிக்கும். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: ஆதரவாக இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எந்தவொரு செயலையும் பலமுறை சிந்தித்து மேற்கொள்வது நல்லது. வியாபாரத்தில் மந்தமான சூழல் உண்டாகும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு : மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மேற்படிப்புகளுக்கு தேவையான வழிகாட்டிகள் அமைவார்கள். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு திறமையும், பாராட்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மையும், புரிதலின்மையும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்கவும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிமாற்றத்தால் குழப்பங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு : வேலையாட்களின் ஒத்துழைப்பால் ஆதாயம் மேம்படும். வெளியூர் தொடர்புகளின் மூலம் வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். சிறு சிறு வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசு சார்ந்த உதவிகளில் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு : கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தனவரவுகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அவ்வப்போது உங்கள் மீது விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். இசை தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள்.அரசியல்வாதிகளுக்கு : சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மேடை பேச்சுக்களில் நிதானத்தை கையாளவும். பதவிக்கான புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கட்சி சார்ந்த பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பு மேம்படும். நன்மைகள்: குரு பெயர்ச்சியானது மனதில் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும், புதிய இலக்குகளை அடைவதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்கக் கூடிய நல்ல பொற்காலமாக அமையும். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் தந்தைவழி உறவுகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வழிபாடு: திருச்சிக்கு அருகில் உள்ள பூலோக நாதருக்கு அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர வீடு மனை அமைவதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கன்னி ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 90/100 மதிப்பெண்களை பெறுவதால் நினைத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பதற்கான சூழல்கள் உண்டாகும். மேலும் தொட்டதெல்லாம் ஜெயம் ஆகும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

மிதுனம் ராசிகுரு பெயர்ச்சி பலன்கள்..!!2024

மிதுனம் ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை கலகலப்பு நிறைந்த மிதுன ராசி அன்பர்களே..!! இதுவரை லாப ஸ்தானமான பதினொன்றாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது  01.05.2024 முதல் போக ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். போக ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான சுக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான சத்ரு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக நான்காம் ஸ்தானத்தை பார்ப்பதினால் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். சொகுசு வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணம் சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகளும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும். குரு ஏழாம் பார்வையாக ஆறாம் ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிராக இருந்தவர்கள் பற்றி புரிதல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கால்நடை பணிகளில் ஒரு விதமான ஈர்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. குரு ஒன்பதாம் பார்வையாக எட்டாம் ஸ்தானத்தை பார்ப்பதினால் சிந்தனைகளில் சற்று கவனம் வேண்டும். மனத்திற்கு பிடிக்காத சில விஷயங்களை செய்வதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணியில் உயர்வு ஏற்படும். மருத்துவ பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். காப்பீட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்

குரு நின்ற பலன்: குரு விரய ஸ்தானத்தில் நிற்பதால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரிய விஷயங்களில் பொறுமை வேண்டும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான வளர்ச்சிகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். மனதில் நினைத்த பணிகளை முடிப்பதில் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு காரியங்களில் எதிர்பார்த்த சில பணிகள் தாமதத்திற்கு பின்பு நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். குரு பகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், நினைத்த சில பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் திருப்தியற்ற சூழல் உண்டாகும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. ஜாமீன் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல் இருப்பது மன அமைதியை கொடுக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் சிறு சிறு மந்தநிலையும், தேக்கமும் ஏற்படும். வெளியூர் பயணங்களால் கையிருப்புகள் குறையும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வமின்மை உண்டாகும். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்ல மதிப்பை உருவாக்கும்.நெருக்கமானவர்களிடத்தில் புரிதல் அதிகரிக்கும். நினைத்த செயல்களை செய்வதில், செயல்களின் தன்மை அறிந்து முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடிவரும். மனதிற்கு விருப்பமான செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த முடக்க நிலையில் சில மாற்றங்கள் உண்டாகும். இறை சார்ந்த பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : நெருக்கமானவர்களின் தேவைகளுக்காக கடன் வாங்குவதை குறைக்கவும். அலட்சியமின்றி செயல்படுவது காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். தடைபட்ட காரியம் விரைவில் நடைபெறும். சில அனுபவத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். குறித்த நேரத்திற்குள் பணிகளை முடிப்பது பல சிக்கல்களை தவிர்க்கும். எதிர்பாலின மக்களுடன் பழக்கவழக்கத்தை குறைத்து கொள்ளவும். மாணவர்களுக்கு : மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்தோடு இருப்பது நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். நண்பர்களின் தன்மை அறிந்து நட்புகளை தேர்ந்தெடுக்கவும். விளையாட்டு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசு சார்ந்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் சிலருக்கு கைகூடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு : உத்தியோகத்தில் திறமைக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். அலுவலகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வெளிநாடு சென்று பணி புரிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். சக பணியாளர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரிகளுக்கு : வியாபாரத்தில் கிடைக்கும் சிறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உயர்வை உருவாக்கும். கூட்டாளிகள் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலைகள் மாறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையோடு செயல்படவும். கலைஞர்களுக்கு : கலைத்துறையில் இருப்பவர்கள் எதிர்காலம் சார்ந்து தெளிவான சில முடிவுகளை எடுப்பீர்கள். புதுமையான படைப்புகளுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். அரசு வழியில் மதிப்புகள் உயரும். சாமர்த்தியமாக செயல்பட்டு பழைய பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு : எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைப்பதில் சிரமங்களும், சிறு சிறு விரயங்களும் ஏற்படும். மறைமுகமான வருமான வாய்ப்புகளில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் பயணங்களால் அனுகூலங்களும், எதிர்பார்த்த சில உதவிகளும், பல நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகளும் ஏற்படும். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துகள் கூறுவதையும், அதிக உரிமை கொள்வதையும் குறைத்துக் கொள்வது நல்லது. வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில், வராகியம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கிவர காரிய அனுகூலமும், வெற்றியும் கிடைக்கும். மிதுன ராசி அன்பர்களே.. வருகின்ற குரு பெயர்ச்சியில் 40/100 மதிப்பெண் மட்டும் பெற்று இருப்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் நெருக்கடிகள் குறையும். அதேசமயம் மன நிம்மதியும் ஏற்படும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

தபால் அலுவலகத்திட்டம் 71 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?

தபால் அலுவலகத் திட்டம்: ஆண்டுக்கு ரூ.250 முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மகளுக்கு 21 வயதில் ரூ.71 லட்சம் கிடைக்கும். இந்த திட்டம் மகள்களுக்காக திறக்கப்பட்டுள்ளது மற்றும் நாட்டின் எந்தவொரு குடிமகனும் 10 வயது அல்லது அதற்கும் குறைவான தனது மகளுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ₹ 250 டெபாசிட் செய்யலாம். நவீன காலத்தில் முதலீடு செய்வதற்கான மாற்று வழிகளை மக்கள் தேடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. வங்கி FD மற்றும் அரசு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக பங்குச் சந்தையை மாற்று வழியாக மக்கள் பார்க்கின்றனர். இருப்பினும், அரசு திட்டங்களில் முதலீடு செய்வது உங்களுக்கு பல நன்மைகளைத் தருகிறது. வரிச் சலுகைகளுடன் அதிகத் தொகையின் பலனைப் பெறும் அத்தகைய அரசாங்கத் திட்டத்தைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். • திருத்துகிறது. வட்டி அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது முதிர்ச்சியின் போது பெறப்படும் தொகை பாதிக்கப்படும். • SSY கணக்கில் முதலீட்டுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு முன் டெபாசிட் செய்யப்பட வேண்டும், இதனால் மகள் அதிகபட்ச வட்டியைப் பெற முடியும். • கணக்கைத் திறக்கும் போது உங்கள் மகளின் வயது 0 வயதுக்கு மேல் இருந்தால், உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது அல்ல, கணக்கு 21 ஆண்டுகள் நிறைவடையும் போது உங்கள் மகளுக்கு முதிர்வுத் தொகை கிடைக்கும். 71 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி? இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் 15 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம், அதில் உங்களுக்கு அதிகபட்ச பலன் வழங்கப்படும். SSA விலும், ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு முன் இந்தத் தொகையை கணக்கில் டெபாசிட் செய்தால் மட்டுமே அதிகபட்ச வட்டியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்தத் தொகையை 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், மொத்த வைப்புத் தொகை ₹22,50,000. முதிர்ச்சியின் போது, ​​71,82,119 ரூபாய் கிடைக்கும். இதில், வட்டியில் கிடைத்த மொத்தத் தொகை 49,32,119 ரூபாய். முதிர்வு காலத்தில் பெறப்படும் இந்தத் தொகை முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும்.

Always4u
× How can I help you?