
RRB GROUP D: ரயில்வேயில் 32,438 காலிப்பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்.. வந்தது அறிவிப்பு இந்தியன் ரயில்வேயில் ஆர்ஆர்பி குரூப் டி பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதவியாளர், டிராக் மெயிண்டனர், மெக்கானிக்கல் அஸிஸ்டண்ட உள்பட மொத்தம் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. இதனால் ரயில்வேயில் இருந்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் காத்திருந்து படித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் ரயில்வேயின் ஆர் ஆர் பி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்களானது ரயில்வே ஆட்சேர்பு வாரியமான ஆர்ஆர்பி நிரப்பி வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட குரூப் – டி பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிராபிக் பாயிண்ட்ஸ்மேன், டிராக் மெயிண்டனர், மெக்கானிகல் அஸிஸ்டண்ட் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 35,438 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம்:டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி – 5058என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) – 799டிராக் மெயிண்டர்ன (குரூப் – 4)- 13,187அஸிஸ்டண்ட (P-Way) – 247மெக்கானிக்கல் அஸிஸ்டன் (C&W) – 2587அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) – 420அஸிஸ்டண்ட் ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) – 3077எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி – 1381அஸிஸ்டன் லோகோ (எலக்ட்ரிக்கல்) – 950அஸிஸ்டன் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்) – 744உள்பட மொத்தம் 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18,200 வழங்கப்படும். அலவன்ஸ் எல்லாம் சேர்த்து மாதம் ரூ. 22,500 – ரூ.25,380 வழங்கப்படும். வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு வயது உச்ச வரம்பு சலுகையின் படி 18 முதல் 36 வயதுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைனில் தேர்வானது நடைபெறும். முதலில் கணினியில் கொள்குறி தேர்வு (சிபிடி), உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு எழுதிய பிறகு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வு எழுதி பிறகு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும். எப்போது விண்ணப்பிக்க முடியும்?: விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கும் நாள் வரும் ஜனவரி 23 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள் பிப்ரவரி 22 ஆம் தேதி ஆகும். தேர்வு நடக்கும் தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.