கும்பம் ராசி..!! 2024…!! குரு பெயர்ச்சி பலன்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே..!! இதுவரை சகோதர ஸ்தானமான மூன்றாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது 01.05.2024 முதல் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். சுக ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான அஷ்டம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான தொழில் ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான போக ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயலையும் மேற்கொள்ளும்பொழுது சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். மறைமுகமான வருமானங்களால் கையிருப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் மீதான கோபங்களை குறைத்துக் கொள்வது உங்கள் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும். குரு ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரங்களில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் தெளிவுகள் ஏற்படும். எந்தவொரு செயலையும் நேர்மறை சிந்தனையுடன் அணுகி வெற்றியடைவீர்கள். குரு ஒன்பதாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். மற்றவர்கள் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை அறிவதில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த நெருக்கடிகளை குறைப்பீர்கள்.

குரு நின்ற பலன்: குரு சுக ஸ்தானத்தில் நிற்பதால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வர்த்தகம் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நறுமண பொருட்களின் விஷயத்தில் சற்று கவனம் வேண்டும். உறவுகளின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும். குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்கவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே புரிதல்கள் ஏற்படும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனை மீதான கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உடன் பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை கையாளுவதில் கவனம் வேண்டும்.குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். கால்நடை வளர்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், ஆதாயமும் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பதற்கான சூழல் ஏற்படும். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.நெருக்கமானவர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவமும், அனுகூலமும் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயணங்களால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். காப்பீடு விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு : மாணவர்களுக்கு பாடங்களில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பெற்றோர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மனதிற்கு அமைதியை கொடுக்கும். எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு : உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் அமையும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில இடமாற்றங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு : வியாபாரப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பதற்கான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் மறைமுக ஆதரவுகளால் சில புரிதல்கள் ஏற்படும். அபிவிருத்தி தொடர்பான இலக்குகள் பிறக்கும். கலைஞர்களுக்கு : கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி சார்ந்த விஷயங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். உணவுத்துறைகளில் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வருமான வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். அரசியல்வாதிகளுக்கு : அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் ஆதரவுகளை மேம்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை, உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும், பயணங்கள் தொடர்பான விஷயங்களிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வழிபாடு: வியாழக்கிழமைதோறும் மகான்களை வழிபாடு செய்துவர குடும்பத்தில் ஒற்றுமையும், சேமிப்பும் அதிகரிக்கும். கும்ப ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 40/100 மதிப்பெண்களை பெற்றிருப்பதால் எதிர்பாராத சில திருப்பங்களின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

மகரம் ராசி..!! 2024 குரு பெயர்ச்சி பலன்கள்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை எதிலும் நிதானத்துடனும்.. பொறுமையுடனும் செயல்பட்டு வெற்றி காணக்கூடிய மகர ராசி அன்பர்களே..!! இதுவரை சுக ஸ்தானமான நான்காம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம்  நாள் அதாவது  01.05.2024 முதல் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான லாப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான ராசி ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் வழக்கு சார்ந்த விஷயங்களில் தெளிவான முடிவு கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணங்கள் செல்வதற்கான தருணங்கள் உண்டாகும். குரு ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த பணிகளை திட்டமிட்டு செய்து வெற்றி அடைவீர்கள். செயல்பாடுகளில் அனுபவமும், புத்திக்கூர்மையும் வெளிப்படும். குரு ஒன்பதாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால்குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறைந்து தெளிவு பிறக்கும். சிறு சிறு விஷயங்களிலும் மன நிறைவு ஏற்படும்.

குரு நின்ற பலன்: குரு புத்திர ஸ்தானத்தில் நிற்பதால் மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பதற்கான தருணங்கள் உண்டாகும். காப்பீட்டுத் துறைகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். எந்தவொரு செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகளும், சம்பவங்களும் நடைபெறும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சூழல் படிப்படியாக குறையும். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், திறமைக்குண்டான மதிப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான எண்ணங்களும், அதற்கான சூழல்களும் உண்டாகும். குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பரமான விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு : மாணவர்களுக்கு சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். விளையாட்டுப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முயற்சிக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். முதுநிலை கல்வியில் எதிர்பார்த்த தருணங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு : பணி நிமிர்ந்தமான சில விஷயங்களில் ரகசியம் காப்பது நல்லது. திறமைக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். மற்றவர்கள் செய்யும் செயல்களால் உங்கள் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த சில விஷயங்களுக்கு பொறுமையை கையாளுவது நல்ல முடிவினை அளிக்கும். வியாபாரிகளுக்கு : வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. கலைஞர்களுக்கு : கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நினைத்ததை முடிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். திறமைக்குண்டான மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியும், புதிய விஷயங்கள் சார்ந்த தேடல்களும் அதிகரிக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு : அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் பணிபுரியும் இடத்திலும், குடும்பத்திலும் மதிப்பும், மரியாதையும் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் புதுமையான சில விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது தேவையற்ற விரயத்தை தவிர்க்கும். வழிபாடு: செவ்வாய்க்கிழமைதோறும் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர சிந்தனைகளில் தெளிவும், சுபிட்சமும் ஏற்படும். மகர ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 90/100 மதிப்பெண்களை பெற்றிருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்புடனும், சிந்தனைகளில் தெளிவுடனும் செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி..!! 2024 குரு பெயர்ச்சி பலன்கள்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை இறை நம்பிக்கையும்.. கம்பீரமான தோற்றமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே..!! இதுவரை புத்திர ஸ்தானமான ஐந்தாம் ராசியில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது 01.05.2024 முதல் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான தொழில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான போக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடிவரும். கௌரவ பொறுப்புகளின் மூலம் வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். குரு ஏழாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் உடலில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் படிப்படியாக குறையும். எந்தவொரு செயலையும் ரகசியமாக செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். பழக்கவழக்கங்களில் சற்று கவனம் வேண்டும். வெளிநாடு செல்வது தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குரு ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

குரு நின்ற பலன்: குரு புத்திர ஸ்தானத்தில் நிற்பதால் தந்தை வழி உறவினர்களிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். எதிலும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதுமனஅமைதியை ஏற்படுத்தும். இழுபறியான சில விஷயங்களை செய்து முடிப்பதற்கான சூழல் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு தேக்க நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், குழந்தைகளிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கைகூடி வருவதற்கான சூழல் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : தனவரவில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு உண்டான ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு : மாணவர்களுக்கு சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் வேண்டும். தொழில் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்கவும். பிறமொழி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு : அலுவலகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிலும் திறமையோடு செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய வேலை சார்ந்த தேடலில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களின் மூலம் அனுகூலமும், லாபமும் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வியாபாரிகளுக்கு : வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் நீங்கி முன்னேற்றமான சூழல் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு சில மாற்றங்களை செய்வீர்கள். கலைஞர்களுக்கு : கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் படிப்படியாக குறையும். பேச்சுத் திறமைகளின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு : நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளின் மூலம் எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் தொழில் சார்ந்த அபிவிருத்தியும், அதற்கான தனவரவுகளும், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மேன்மையும் உண்டாகும். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் சஞ்சலமான சிந்தனைகளால் நெருக்கமானவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வழிபாடு: நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், கல்வியில் முன்னேற்றமும் ஏற்படும். தனுசு ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 50/100 என்ற மதிப்பெண்களை பெற்றிருப்பதால் எந்தவொரு செலவையும் செய்வதற்கு முன்பு சிந்தித்துச் செயல்படுவது தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்கும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம் ராசி..!! 2024 குரு பெயர்ச்சி பலன்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை எதிலும் துடிப்புடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இதுவரை சத்ரு ஸ்தானமான ஆறாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது 01.05.2024 முதல் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான ராசி ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சகோதர ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் சார்ந்த துறைகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். இணையம் தொடர்பான துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குரு ஏழாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும்.

குரு நின்ற பலன்: குரு களத்திர ஸ்தானத்தில் நிற்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். பேச்சுக்களில் கனிவு உண்டாகும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தாமதமாக கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், சுபகாரியங்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கடன் சார்ந்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும். குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: சுபகாரிய செயல்களில் அலைச்சலும், தாமதமும் ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் பக்குவங்கள் பிறக்கும். வியாபார ரீதியான பயணங்களால் சில விரயங்களுக்குப் பின்பு ஆதாயம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.

குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைக்குண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகளும், உயர்வும் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு : மாணவர்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கட்டுரை மற்றும் இலக்கியம் சார்ந்த பிரிவுகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் புரிதலும், தெளிவும் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு : உத்தியோகத்தில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட ஊதிய உயர்வுகள் சிலருக்கு சாதகமாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அலுவலகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வெளியூர் சென்று வேலை செய்வதற்கான எண்ணங்கள் கைகூடிவரும். வியாபாரிகளுக்கு : வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மறைமுகப் போட்டிகளால் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பொருட்களின் தேக்கம் உண்டானாலும் லாபங்களில் குறைவு ஏற்படாது. வேலையாட்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். கலைஞர்களுக்கு : கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். திறமைக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் புதிய படைப்புகளை வெளிப்படுத்தி ஆதரவுகளை பெருக்கிக் கொள்வீர்கள். நுட்பமான சில கலை சார்ந்த விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு : பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கட்சி நிமிர்த்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சில எதிர்ப்புகளால் நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகளும், சிந்தனைகளில் தெளிவும், ஒத்துழைப்பான சூழல்களும் உண்டாகும். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் தம்பதிகளுக்கிடையே மனம் விட்டு பேசுவது புரிதலையும், அன்யோன்னியத்தையும் ஏற்படுத்தும். தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். வழிபாடு: திங்கட்கிழமைதோறும் வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் கைகூடிவரும். விருச்சிக ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 70/100 மதிப்பெண்களை பெறுவதால் புதுமையான சில விஷயங்களில் ஆர்வமும், தேடலும் உண்டாகும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.

இந்தியாவில் 2,600 ஆண்டுகள் பழமையான டெரகோட்டா பைப்லைன்கள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் 2,600 ஆண்டுகள் பழமையான டெரகோட்டா பைப்லைனை கண்டுபிடித்துள்ளனர் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய நாகரிகத்தின் மேம்பட்ட நீர் மேலாண்மை நடைமுறைகளை எடுத்துக்காட்டும் வகையில், இந்தியாவின் தமிழ்நாட்டின் பழங்காலத் தளமான கீழடியில் தொல்பொருள் ஆய்வுகளின் சமீபத்திய கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் டெரகோட்டா பைப்லைனைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் வசித்த சங்க கால மக்கள் கல்வியறிவு மட்டுமின்றி நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பொறியியலில் அதிக திறன் பெற்றவர்கள் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு வளர்ந்து வரும் சான்றுகளை சேர்க்கிறது. மதுரையிலிருந்து தென்கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழடி, முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் (ASI) கே. அமர்நாத் ராமகிருஷ்ணனால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்து, சங்க காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு மையப் புள்ளியாக இது மாறியுள்ளது, இது கிமு 300 முதல் கிபி 300 வரை நீடித்தது. கடந்த தசாப்தத்தில், 20,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது செங்கல் தயாரிப்பு, மணி வேலைப்பாடு மற்றும் டெரகோட்டா கைவினைத்திறன் உட்பட அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு அதிநவீன சமூகத்தை வெளிப்படுத்துகிறது. கீழடியில் மிக சமீபத்திய கண்டுபிடிப்பு, உருளை வடிவ டெரகோட்டா பைப்லைன், குறிப்பாக குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் (டி என் எஸ் டி ஏ) அதிகாரியின் கூற்றுப்படி, இந்த குழாய் ஆறு கவனமாக வடிவமைக்கப்பட்ட உருளை உறைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 36 சென்டிமீட்டர் நீளமும் 18 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இந்த உறைகள் மிக நுணுக்கமாக சீரமைக்கப்பட்டு, ஒன்றாகப் பொருத்தப்பட்டு, 174 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு தொடர்ச்சியான பைப்லைனை உருவாக்கி, ஒரு அகழியிலிருந்து மற்றொரு அகழிக்கு ஊடுருவிச் செல்லும். இந்த குழாய் பாதுகாக்கப்பட்ட நீரை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, இது அக்காலத்தின் மேம்பட்ட ஹைட்ராலிக் பொறியியல் திறன்களுக்கு சான்றாகும். கீழடியில் வசிப்பவர்கள் திறமையான நீர் மேலாண்மைத் திறன்களைக் கடைப்பிடித்ததை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து உள்ள அகழியைத் தொடர்ந்து தோண்டும்போது அவர்களின் நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். டெரகோட்டா பைப்லைன் கண்டுபிடிப்பானது சங்க கால நாகரீகத்தின் தொழில்நுட்ப புத்தி கூர்மைக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது அதன் வளமான இலக்கிய பாரம்பரியம், செழிப்பான வணிக நெட்வொர்க்குகள் மற்றும் ஈர்க்கக்கூடிய நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. பைப்லைன் கட்டப்பட்ட துல்லியமானது, ஹைட்ராலிக் இன்ஜினியரிங்கில் உயர் மட்ட அறிவைக் குறிக்கிறது, இது கீழடியில் வசிக்கும் பெரிய நகர்ப்புற மக்களைத் தக்கவைக்க முக்கியமானதாக இருந்திருக்கும். தளத்தில் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வளைய கிணறு. கீழடியில் வசிப்பவர்கள் திறமையான நீர் மேலாண்மைத் திறன்களைக் கடைப்பிடித்ததை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து உள்ள அகழியைத் தொடர்ந்து தோண்டும்போது அவர்களின் நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். மேம்பட்ட நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவை முதன்மையாக சிந்து சமவெளி போன்ற வட இந்திய நாகரிகங்களின் அம்சங்களாக இருந்தன என்ற முந்தைய அனுமானங்களையும் இந்த கண்டுபிடிப்பு சவால் செய்கிறது. கீழடி கண்டுபிடிப்புகள் அதே காலகட்டத்தில் தென்னிந்திய கலாச்சாரங்களின் அதிநவீனத்தை எடுத்துக்காட்டுகின்றன, முன்பு நினைத்ததை விட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பண்டைய இந்தியாவை பரிந்துரைக்கிறது. அகழ்வாராய்ச்சிகள் தொடங்கிய பின்னரே கீழடியின் முக்கியத்துவம் ஒரு தொல்பொருள் தளமாக வளர்ந்துள்ளது. முந்தைய கண்டுபிடிப்புகளில் ‘தா’ என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு பானை ஓடு, உடைந்த செம்புப் பொருட்கள், மணிகள் மற்றும் சுழல் சுழல்கள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் கல்வியறிவு மற்றும் தொழில் ரீதியாக செயல்படும் சமுதாயத்தை சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு கலைப்பொருட்களின் கார்பன் டேட்டிங் சங்க காலத்தின் காலவரிசையை 300 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளியது, முன்பு நம்பப்பட்ட கிமு 300 ஐ விட அதன் தோற்றம் கிமு 600 இல் அமைந்தது. மேலும், தமிழகத்தின் மற்றொரு தலமான சிவகாலையில் உள்ள புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட நெற்கதிர்கள் 3,200 ஆண்டுகள் பழமையானவை.

Always4u
× How can I help you?