மாத ராசிபலன் கடகம் ராசி அன்பர்களே..!!பிப்ரவரி மாத ராசிபலன் சூரியன் 07ல் இருப்பதால் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். அரசு பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். 13.02.2025முதல் சூரியன் 08ல் இருப்பதால் எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். செவ்வாய் 12ல் இருப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதன் 07ல் இருப்பதால் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 05.02.2025 முதல் புதன் 08ல் இருப்பதால் நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். கொடுக்கல், வாங்கலில் ஆலோசனை பெற்று முடிவு செய்யவும். 26.02.2025 முதல் புதன் 09ல் இருப்பதால் இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் அமையும். சுக்கிரன் 09ல் இருப்பதால் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனதளவில் புதிய விஷயங்களை முடிவு செய்வீர்கள். குரு 11ல் இருப்பதால் உடலில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி உருவாகும். சனி 8ல் இருப்பதால் நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். ராகு 09ல் இருப்பதால் நண்பர்கள் வழியில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கேது 03ல் இருப்பதால் உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வழிபாடு : ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
மாத ராசிபலன் புத்திசாலிதனமாக செயல்படும்மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் ராசிக்கானபிப்ரவரி மாத ராசிபலன்கள் சூரியன் 08ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. 13.02.2025முதல் சூரியன் 09ல் இருப்பதால் தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வருமான வாய்ப்புகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். செவ்வாய் ராசியில் இருப்பதால் வித்தியாசமான கற்பனைகள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதன் 08ல் இருப்பதால் அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும். 05.02.2025 முதல் புதன் 09ல் இருப்பதால் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். 26.02.2025 முதல் புதன் 10ல் இருப்பதால் அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். சுக்கிரன் 10ல் இருப்பதால் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். குரு 12ல் இருப்பதால் புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். சனி 9ல் இருப்பதால் சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். ராகு 10ல் இருப்பதால் அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கேது 4ல் இருப்பதால் குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் ஏற்படும். வழிபாடு : லட்சுமி நரசிம்மரை வழிபட துன்பங்கள் விலகி நன்மைகள் அதிகரிக்கும்.
மாத ராசிபலன் விடாப்பிடியாக செயல்படும் மேஷம் ராசி அன்பர்களே..!! உங்கள் ராசிக்கானபிப்ரவரி மாத பலன்கள் சூரியன் 10ல் இருப்பதால் பெரிய மனிதர்களின் சந்திப்பால் சிக்கலான காரியங்களை சமாளிப்பீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். 13.02.2025 முதல் சூரியன் 11ல் இருப்பதால் தந்தை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு வழியில் காரியங்கள் சாதகமாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். செவ்வாய் 03ல் இருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதன் 10ல் இருப்பதால் வியாபார பணியில் புதிய நடைமுறைகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். 05.02.2025 முதல் புதன் 11ல் இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுகபோக விஷயங்களில் நாட்டம் ஏற்படும். 26.02.2025 முதல் புதன் 12ல் இருப்பதால் பத்திரிக்கை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் பிறக்கும். சுக்கிரன் 12ல் இருப்பதால் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் சாதகமாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பழக்கவழக்கங்களில் கவனம் வேண்டும். குரு 02ல் இருப்பதால் கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். சனி 11ல் இருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ராகு 12ல் இருப்பதால் ஜாமீன் கையெழுத்துக்களை தவிர்க்க வேண்டும். கேது 06ல் இருப்பதால் புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வழிபாடு : முருகப்பெருமானை தீபமேற்றி வழிபட வாழ்வில் வளம் பெருகும்.
மாத ராசிபலன் பக்குவம் நிறைந்த ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் ராசிக்குகான பிப்ரவரி மாத பலன்கள்சூரியன் 09ல் இருப்பதால் நேர்மைக்குண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 13.02.2025முதல் சூரியன் 10ல் இருப்பதால் அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். செவ்வாய் 02ல் இருப்பதால் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாதத் திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதன் 09ல் இருப்பதால் வித்தியாசமான சில சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். 05.02.2025 முதல் புதன் 10ல் இருப்பதால் மனதளவில் இருந்து வந்த இறுக்கங்கள் குறைந்து புதியகண்ணோட்டம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும். 26.02.2025 முதல் புதன் 11ல் இருப்பதால் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் சிந்தித்துச் செயல்படவும். சுக்கிரன் 11ல் இருப்பதால் பொன், பொருட்ச்சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிறு மற்றும் பெருந்தொழிலில் லாபங்கள் மேம்படும். குரு ராசியில் இருப்பதால் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சனி 10ல் இருப்பதால் சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். ராகு 11ல் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கேது 5ல் இருப்பதால் கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வழிபாடு : மகாலட்சுமியை வழிபாடு செய்துவர மங்களங்கள் மேம்படும். தீமைகள் மறையும்.
மாசிலாமணீஸ்வரர் கோவில் – வடதிருமுல்லைவாயில் செண்பக வனம் என்று அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது. இது கிருதயுகத்தில் ரத்தினபுரம், திரேதாயுகத்தில் வில்வவனம், துவாபரயுகத்தில் செண்பக வனம் என்று அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. அதுதான்வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம். திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூருக்கு அருகில் இருக்கிறது வட திருமுல்லைவாயில். இத்தல இறைவன், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர், என்று அழைக்கப்படுகிறார். நாயகியின் பெயர் லதாமத்யாம்பாள், கொடியிடை நாயகி, என்பதாகும். தல மரம்: முல்லை கொடி தீர்த்தம் : கல்யாண தீர்த்தம். சுப்பிரமண்ய தீர்த்தம், வழிபட்டோர்:சுந்தரர், சேக்கிழார்,வள்ளலார்,முதலியோர்கள், இது தொண்டை நாட்டுத் தலம் ; வட திருமுல்லைவாயில் ஆகும்; சோழநாட்டில் – தஞ்சை மாவட்டத்தில் தென் திருமுல்லைவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில் முல்லை வனமாகத் திகழ்ந்தது என்பது வரலாறு தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான்.புழல்கோட்டையிலிருந்து கொண்டு, ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள்; எருக்கந்தூண்களும் வெங்கலக்கதவும் பவழத்தூண்களும் போன்றவற்றை கொண்டு கோட்டை அமைத்து, பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர். இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அத்திருக்கோயிலே ஓணகாந்தன்தளி ஆகும். இவர்களைக் காணத் தொண்டைமான் வந்தான்; வரும் வழியில் ‘சோழம்பேடு’ என்னும் கிராமத்தில் தங்கி இரவு உறங்கும்போது வெங்கல மணியோசை கேட்டது. அங்குச் சிவத்தலம் இருக்கவேண்டும் என்று அறிந்து, மன்னன் மறுநாள் காலை யானை மீதேறி வந்தான். அவன் வருவதைக் கண்ட அசுரர்களின் குறு நில மன்னன் ஒருவன் தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்க்கலானான். தனியே வந்த தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளைக்கொண்டுவரத் திரும்பினான். அவ்வாறு திரும்பி இம்முல்லைப்புதர் வழியாக வரும்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக்கொள்ள, மன்னன் யானைமீதிருந்தவாறே தன் உடைவாளால் வெட்ட, ரத்தம் வெளிப்பட்டது. திகைத்த மன்னன் கீழிறங்கிப் பார்க்க அங்குச் சிவலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டான். தன் பிழைக்கு வருந்தி, அவ்வாளால் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றான், அப்போது இறைவன் காட்சி தந்து, “மன்னனே! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை, நான் மாசு இல்லா மணியே! வருந்தற்க, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வெற்றிப் பெற்று வருவாயாக” என்று அருள்புரிந்தார். (இதனால்தான் இத்தலத்தில் நந்தி கிழக்கு நோக்கியுள்ளது என்கின்றனர்.) தொண்டைமான் (நந்தியம்பெருமானுடன்) வருவதையறிந்து, ஓணன், காந்தன் சரணடைந்தனர்.
இந்த சுயம்பு மூர்த்தியானவர், ஆலயத்தின் கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேல்புறம் வெட்டுப்பட்ட வடு உள்ளது. வெட்டுப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும். ஆதலால் அபிஷேகங்கள் லிங்கப்பகுதிக்குக் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். சுவாமிக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் என்பதால், லிங்கத்தின் மீதிருக்கும் சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீதே மீண்டும் சந்தனம் சாத்தப்படும். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு முழுமையாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத்திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவனின் மீது சந்தனக்காப்பு இருந்து கொண்டே இருக்கும். இறைவன் கட்டளைப்படி நந்தியம்பெருமான், தொண்டைமான் அரசனுடன் போருக்குப் போனதால், இத்தலத்தில் நந்தி கருவறைக்குப் பின்புறம் காட்டி அமர்ந்துள்ளார். தொண்டைமான், நந்தியுடன் வந்ததால் ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சன்னிதியின் முன்னால் பொருத்தப்பட்டுள்ளது. என்பது ஆலய வரலாறு சொல்லும் செய்தி. அவ்வளவு பெரிய வெள்ளெருக்குத் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று. இந்த வெள்ளெருக்கன் தூண்கள் சிவாம்சமாகக் கருதப்படுகிறது, அதேபோல் வெங்கலக்கதவும், பவழத்தூண்களும் திருவொற்றியூரில் வைக்கப்பட்டதாகவும், அவை காலப்போக்கில் வெள்ளத்தின் வாய்ப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சுவாமிக்கு முன்பு வெளிப்புறத்தில் தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார்,ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு,ரச லிங்கம் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பரிவாரத்தில் வீரபத்திரர், நால்வர், விநாயகர்,நாகலிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், பைரவரும், அருணகிரியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் கணபதி,தட்சிணாமூர்த்தி,மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேசுவரர் சன்னிதி உள்ளன. நடராஜ சபைக்கு அருகில் தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார். சென்னை- பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ளமேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை – திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியிடை அம்மை, ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட திருவுருக்களாகும். இவர்கள் மூவரும் இச்சா சக்தி, கிரியா சக்தி,ஞான சக்தி என்று அழைக்கப்படுகின்றனர் வெள்ளிக்கிழமை பெளர்ணமி சேர்த்து வரும் நாளில் மேலூரிலுள்ள ‘திருவுடையம்மனை’ காலையிலும், சென்னை திருவொற்றியூரிலுள்ள ‘வடிவுடை அம்மனை’ மத்தியத்திலும் வடதிருமுல்லை வாயில் ‘கொடியிடை நாயகி’ அம்மனை மாலையிலும் விரதமிருந்து வழிபட்டால் காசி ராமேஸ்வரம் சென்று வந்த பலனாகும்.
தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அருகில் தீர்த்தக்குளம். ராஜகோபுரத்தில் நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் அருள்கிறார். உள்ளே கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சன்னிதியும், சோமாஸ்கந்தர் சன்னிதியும், சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன வெளிப்பிரகாரத்தில் வில்வமரம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். திருவிழாகள் வைகாசி பிரமோற்சவம், மாசி தெப்பத் திருவிழா, ஆனியில் வசந்தோற்சவம், ஆகும்.இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில், பரகேசரிவர்மன், உத்தமசோழன், முதலாம் இராசேந்திர சோழன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களிலும்; பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பாண்டியதேவன் காலத்திலும்; விஜயநகர வேந்தர்களில் ஹரிஹரராயர் , இரண்டாம் தேவராயருடைய தம்பி பிரதாப தேவராயர், வீரப்பிரதாபபுக்க ராயர், வீரப்பிரதாப மல்லிகார்ச்சுன தேவமகாராயர் இவர்கள் காலங்களிலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளன்றி, பார்த்திவேந்திரவர்மன் காலத்திலும் பொறிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உண்டு. மழவரையர் மகளாரும், கண்டராதித்த பெருமாள் தேவியாரும், ஆகியசெம்பியன்மாதேவியார், புழற்கோட்டத்து அம்பத்தூர் நாட்டு அம்பத்தூர் ஊராரிடமிருந்து நிலம் வாங்கி, இத்திருமுல்லை வாயில் கோயிலுக்கு உத்தமசோழ தேவரின் ஆட்சியில் பதினான்காம் நூற்றாண்டில் கொடுத்துள்ளனர். மண்டபத்துத் தூணில் உள்ள முதலாம் இராசேந்திரசோழ தேவன் கல்வெட்டுல் உள்ளது, அந்த மண்டபம் கட்டப் பட்டதையும் குறிப்பிடுகின்றது. வட திருமுல்லைவாயில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக் கானப்பேரூர் நாட்டுக்கு உட்பட்டிருந்தது என்பதை ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவனின் பத்தாம் நூற்றாண்டு ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. அம் மன்னனது 18ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு புழற்கோட்டம் விக்கிரம சோழவளநாடு என்னும் பெயர் எய்தியதைப் புலப்படுத்துகின்றது. சிறப்பு அம்சங்கள் இத்தலத்து நந்தி இறைவனுடைய ஆணையை ஏற்றுக்கொண்டமையால் மன்னனுக்கு போருக்கு துணையாகச் சென்றதால் இறைவனை நோக்காது கிழக்கு முகமாக திரும்பி இருக்கும்.தொண்டை மான் மன்னனுக்கு இறைவன் அவசரக்காட்சி தந்தனால் சுவாமியும், அம்பாளும் இடமாறி இருப்பர் அதாவது எப்போதும் இடப்புறம் இருக்கும் அம்பாள் இந்த தலத்தில் வலது புறம் இருபாள் இருவருமே கிழக்கு நோக்கி இருப்பது மற்று மொரு சிறப்பு அம்சமாகும். திருவாரூரில் பிறக்க முக்தி,திருவண்ணாமலையை நினைக்க முக்தி, தில்லையை தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, என்பது வழக்கு. இத் தலத்தைப் பற்றி கேட்டாலே முக்தியாகும்,வெள்ளிக்கிழமை பெளர்ணமி சேர்த்து வரும் நாளில் மேலூரிலுள்ள ‘திருவுடையம்மனை’ காலையிலும், சென்னை திருவொற்றியூரிலுள்ள ‘வடிவுடை அம்மனை’ மத்தியத்திலும் வடதிருமுல்லை வாயில் ‘கொடியிடை நாயகி’ அம்மனை மாலையிலும் விரதமிருந்து வழிபட்டால் காசி ராமேஸ்வரம் சென்று வந்த பலன்கள் உண்டாகும். ஸ்ரீ பைரவர், சூரியன், நக்ஷத்தி ரங்கள், நவக்கிரகங்கள், வீரபத்திரர், இவர்களுக்கு இவ்வாலயத்தில் தனி வழிபாடு கிடையாது. ஏனெனில் சூரியன் பைரவர், நக்ஷத்திரங்கள், வீரபத்திரர், நவக்கிரகங்கள், அனைவரும் தம்வினை நீங்க இத்தலத்து பெருமானை வழிபட்ட காரணத்தால் இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது. அனைவரும் இறைவனிடம்-ஐக்கிய மாவர். அமைவிடம் மாநிலம்: தமிழ் நாடு சென்னை – ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயிலை அடைந்து 1-கி. மீ. சென்று கோயிலை அடையலாம். மெட்ரோ ட்ரெயின் மார்க்கமும் உள்ளது.
மீனம் ராசி அன்பர்களே..!! குரு பெயர்ச்சி பலன்கள்..!! வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை எதிலும் விவேகத்துடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே..!! இதுவரை குடும்ப ஸ்தானமான இரண்டாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது 01.05.2024 முதல் சகோதர ஸ்தானமான மூன்றாம் வீட்டில் இருந்து சுப மற்றும் அசுப பலன்களை வழங்குகிறார். சகோதர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். அயல்நாட்டு வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குரு ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் அமையும். தனவரவுகளின் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். மருத்துவம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குரு ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். எதிர்பார்த்த சில விஷயங்கள் கைகூடிவரும். நிபுணர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கௌரவப் பொறுப்புகளால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
குரு நின்ற பலன்: குரு சகோதர ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வீக சொத்துக்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். எதிர்பாராத சில உதவிகளால் கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்: குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், நினைத்த சில பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் பதற்றமின்றி கவனத்தோடு செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்களை நீங்களே செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதால் நெருக்கடிகள் குறையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், மனதளவில் திருப்தியற்ற சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிவட்டார தொடர்புகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்: குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்: உறவுகளின் வழியில் புரிதல் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்: பெண்களுக்கு : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையும், நெருக்கமும் அதிகரிக்கும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய துறை சார்ந்த தேடல்கள் பிறக்கும். தந்தை வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு : மாணவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு : பணிபுரியும் இடத்தில் சில சிக்கலான சூழ்நிலைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுகொடுத்துச் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதில் விரயமும், தாமதமும் ஏற்படும். வேலை மாற்றம் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வியாபாரிகளுக்கு : வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தால் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மறைமுக தடைகளால் கிடைக்க வேண்டிய சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கலைஞர்களுக்கு : கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். திறமைக்குண்டான பாராட்டுகளும், மதிப்புகளும் கிடைக்கும்.அரசியல்வாதிகளுக்கு : அரசியல்வாதிகளுக்கு கட்சி தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். உயர்மட்ட அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தினரிடையே ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மைகள்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும், சேமிப்புகளின் மூலமாகவும் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். கவனம்: நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியால் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது பயனற்ற விரயங்களை தவிர்க்கும். வழிபாடு: வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகளும், மனக்குழப்பமும் நீங்கி தெளிவுகள் பிறக்கும். மீன ராசி அன்பர்களே.. இந்த குரு பெயர்ச்சியில் 70/100 மதிப்பெண்களை பெற்றிருப்பதால் நீண்ட நாட்களாக புரியாத சில விஷயங்களில் தெளிவு ஏற்படும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும்.