உலகின் மிக நீளமான ரயில் என்ற சாதனையைப் படைத்த ரயில் எது தெரியுமா? மேற்கு ஆஸ்திரேலியாவின் ரயில் பயண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான ரயில் இங்கு இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜூன் 21, 2011 அன்று யாண்டி கானில் இருந்து போர்ட் ஹெட்லேண்ட் வரை ஓடியது மற்றும் 170 மைல்கள் அதாவது 273.6 கிலோ மீட்டர் ஒரே ஓட்டுநரால் இயக்கப்பட்டது. முழு பயணமும் முடிவடைய 10 மணி நேரம் 4 நிமிடங்கள் ஆனது. சில முக்கிய விவரங்கள் இங்கே: உலகின் மிக நீளமான ரயில் மேற்கு ஆஸ்திரேலியாவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஜூன் 21, 2011 ஆம் ஆண்டு அன்று யாண்டி கானில் இருந்து போர்ட் ஹெட்லாண்ட் வரை ஓடியது, மேலும் 170 மைல்கள் அதாவது 273.6 கிலோ மீட்டர் ஒரே ஓட்டுநரால் இயக்கப்பட்டது. முழுப் பயணமும் முடிவடைய 10 மணி நேரம் 4 நிமிடங்கள் ஆனது. இந்த ரயிலின் மொத்த நீளம் 7.29 கிலோ மீட்டர் அதாவது 4.53 மைல், இது இதுவரை இருந்ததிலேயே மிக நீளமான ரயிலாகக் கருதப்படுகிறது. இது 682 வேகன்களைக் கொண்டிருந்தது, 82,000 மெட்ரிக் டன் அதாவது 181 மில்லியன் பவுண்டுகள் இரும்புத் தாதுவை சுமந்து சென்றது. இது 402 சுதந்திர தேவி சிலைகளுக்குச் சமமான எடையைக் கொண்டுள்ளது, இதுவே ஒரு சாதனையாகும். இதை இயக்க 8 ஜெனரல் எலக்ட்ரிக் டீசல் என்ஜின்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை கொள்ளளவு 99,734 மெட்ரிக் டன்கள் அதாவது 219.8 மில்லியன் பவுண்டுகள், இது உலகின் மிகப்பெரிய ரயிலுக்கான சாதனையையும் படைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை, ரயில் தொழில்நுட்பம் மற்றும் தளவாடத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மாறியுள்ளது. முக்கிய செய்திகள் மற்றும் நேரடி செய்தி புதுப்பிப்புகளுக்கு, எங்களை Facebook இல் லைக் செய்யவும் அல்லது Twitter மற்றும் Instagram இல் எங்களைப் பின்தொடரவும்.www dot always four u dot in இல் சமீபத்திய பொழுதுபோக்கு,ஜோதிடம்,ஆன்மீகம்,இரயில்வே,மேட்ரிமோனி, பணநிர்வாகம்,மார்கெட்டிங், செய்திகளைப் பற்றி மேலும் படிக்கவும் .
பருத்தி பல வண்ண லுங்கிகளின் முழு விளக்கம் இங்கே: தயாரிப்பு விளக்கம் பருத்தி பல வண்ண லுங்கிகள் என்பது சாதாரண உடைகளுக்கு ஏற்ற பாரம்பரிய இந்திய ஆடைகள். உயர்தர பருத்தியால் செய்யப்பட்ட இந்த லுங்கிகள் மென்மையானவை, சுவாசிக்கக்கூடியவை மற்றும் வசதியானவை. அம்சங்கள்: 1. *பொருள்*: அதிகபட்ச ஆறுதல் மற்றும் நீடித்துழைப்புக்கான 100% பருத்தி. 2. *வண்ணங்கள்*: துடிப்பான பல வண்ணங்கள் உங்கள் உடைக்கு ஒரு வண்ணத்தை சேர்க்கின்றன. 3. *வடிவமைப்பு*: நவீன திருப்பத்துடன் கூடிய பாரம்பரிய லுங்கி வடிவமைப்பு. 4. *அளவு*: வெவ்வேறு இடுப்பு அளவுகளுக்கு ஏற்றவாறு பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. 5. *எடை*: இலகுரக மற்றும் எடுத்துச் செல்ல எளிதானது. நன்மைகள்: 1. *வசதியானது*: மென்மையான பருத்தி துணி நாள் முழுவதும் ஆறுதலை உறுதி செய்கிறது. 2. *பல்துறை*: சாதாரண பயணங்களுக்கு, தினசரி உடைகளுக்கு அல்லது கடற்கரை உடையாக அணியலாம். 3. *பராமரிக்க எளிதானது*: எளிமையான துவைத்து உலர்த்தும் பராமரிப்பு. விவரக்குறிப்புகள்: 1. *துணி*: பருத்தி 2. *நிறம்*: பல வண்ணங்கள் 3. *அளவு*: இடுப்பு அளவுகள் – 28-40 அங்குலம் 4. *நீளம்*: 40 அங்குலம் (நிலையான லுங்கி நீளம்) 5. *எடை*: 200-250 கிராம் பராமரிப்பு வழிமுறைகள்: 1. *துவைத்தல்*: குளிர்ந்த நீரில் இயந்திரம் கழுவுதல் அல்லது கை கழுவுதல். 2. *உலர்ந்த*: குறைந்த வெப்பத்தில் காற்றில் உலர்த்துதல் அல்லது டம்பிள் ட்ரையர். 3. *இரும்பு*: துணி தரத்தை பராமரிக்க குறைந்த வெப்பத்தில் இரும்பு. பேக்கேஜிங்: 1. *பேக்கேஜிங் வகை*: பாலி பைகளில் தனிப்பட்ட பேக்கிங். 2. *பேக்கேஜிங் எடை*: 250-300 கிராம். டெலிவரி: 1. *டெலிவரி நேரம்*: இந்தியாவிற்குள் 3-5 வணிக நாட்கள். 2. *ஷிப்பிங்*: ₹500க்கு மேல் ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங். திருப்பி அனுப்பும் கொள்கை: 1. *திருப்பி அனுப்பும் கால அவகாசம்*: டெலிவரி செய்யப்பட்டதிலிருந்து 7 நாட்கள். 2. *திருப்பி அனுப்புதல்*: முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது வேறு அளவு/வண்ணத்திற்கு மாற்றுதல்.
Here’s a full description of Cotton Multi-Colours Lungies: Product DescriptionCotton Multi-Colours Lungies are traditional Indian garments perfect for casual wear. Made from high-quality cotton, these lungies are soft, breathable, and comfortable. Features:1. *Material*: 100% cotton for maximum comfort and durability.2. *Colours*: Vibrant multi-colours add a pop of colour to your outfit.3. *Design*: Traditional lungi design with a modern twist.4. *Size*: Available in various sizes to fit different waist sizes.5. *Weight*: Lightweight and easy to carry. Benefits:1. *Comfortable*: Soft cotton fabric ensures all-day comfort.2. *Versatile*: Can be worn for casual outings, daily wear, or as a beachwear.3. *Easy to maintain*: Simple wash and dry care. Specifications:1. *Fabric*: Cotton2. *Colour*: Multi-colours3. *Size*: Waist sizes – 28-40 inches4. *Length*: 40 inches (standard lungi length)5. *Weight*: 200-250 grams Care Instructions:1. *Wash*: Machine wash or hand wash in cold water.2. *Dry*: Air dry or tumble dry on low heat.3. *Iron*: Iron on low heat to maintain fabric quality. Packaging:1. *Packaging type*: Individual packing in poly bags.2. *Packaging weight*: 250-300 grams. Delivery:1. *Delivery time*: 3-5 business days within India.2. *Shipping*: Free shipping on orders above ₹500. Return Policy:1. *Return window*: 7 days from delivery.2. *Refund*: Full refund or exchange for a different size/color.
மிதுனம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள்திருக்கணித பஞ்சாங்கம் மங்களகரமான குரோதி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பங்குனி மாதம் 15 ஆம் (29.03.2025) தேதியன்று இயற்கை அசுபரான சனிதேவர், பூரட்டாதி மூன்றாம் பாத நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நான்காம் பாத நட்சத்திமான மீன ராசிக்கு அதாவது, சனி கிழமையில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். கலை ரசனை மிகுந்த, எதையும் நுட்பத்துடன் சிந்திக்கும் மிதுன ராசி அன்பர்களே…!!நவகிரகத்தில் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப தன் சுப மற்றும் அசுப பலன்களை அளிக்ககூடியவரான சனிதேவர், தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியும் பார்க்க இருக்கின்றார்.மிதுன ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியான அயன சயன ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார். பலன்கள் : சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதினால் பயணங்களால் ஒருவிதமான சோர்வும் மந்த தன்மையும் உருவாகும் ரகசியமான செயல்களில் பொறுமை காப்பது நல்லது. சிகை அலங்காரத் தொழிலில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல்கள் உருவாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நபர்களின் தன்மைகளை அறிந்து ஆலோசனை பெற்று மேற்கொள்வது தேவையற்ற பிரச்சனைகளை குறைக்கும். நினைத்த சில பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தாழ்வு மனப்பான்மைகள் அவ்வவ்போது தோன்றி மறையும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் வீட்டு உபயோகப் பொருட்களில் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும்.
இயற்கை மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு சில மாற்றமான சூழல்களும் நெருக்கடிகளும் ஏற்படும். இருக்கும் வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். சிலர் இடம் மாறி செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் இடத்தில் புரிதலும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும். தோற்ற பொலிவுகளில் சில மாற்றங்களை செய்து கொள்வீர்கள். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசும் பொழுது சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர்வது உங்கள் மீதான நன்மதிப்புகளை மேம்படுத்தும். வெகுமதிகள் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதுவிதமான வாசனைப் பொருட்கள் பயன்படுத்துவதில் கவனம் வேண்டும். கண்ணியமான கருத்துக்கள் நன்மதிப்பினை பெற்று தரும். சுப காரிய செயல்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். துணைவரின் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களுடன் இணைந்து செயலாற்றும்போது அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சனி ராசிக்கு 10ஆம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தடையாக இருந்துவந்த எதிரிகளின் வளங்கள் குறையும். திறமையை வெளிப்படுத்தி மேன்மையை உருவாக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். குடும்பத்தினர் மத்தியில் புரிதல்கள் அதிகரிக்கும். துணைவர் வழியில் ஆதரவு பெருகும். வீட்டுப் பணிகளை முடிப்பதற்கான வங்கியில் கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பழைய வாகனங்களை மாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். தம்பதிகள் ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லவும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு தாயிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கிய விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். வாகனப் பழுதுகளை அவ்வவ்போது சரி செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் சாதகமாக முடியும். இரவு நேரங்களில் பயணங்களை தவிர்ப்பது நன்மையை தரும். தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் குறையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சீரமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மாணவர்களுக்கு மாணவர்கள் உடல் ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அலைபாயும் சிந்தனைகளால் மனதளவில் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். புதுமையான செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பு தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பதும் எழுதிப் பார்ப்பதும் நல்லது. ஆசிரியர்கள் இடத்தில் சில புரிதல் இன்மைகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்த கெடுபிடியான சூழல்கள் படிப்படியாக குறையும். தடைப்பட்டு வந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைப்பதற்கான சூழல்கள் சாதகமாகும். சக ஊழியர்கள் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். பணி மாற்றங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஊதிய வரவுகள் கிடைப்பதற்கான சூழல்கள் ஏற்படும். நீதித்துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். வியாபாரிகள் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது வியாபார அபிவிருத்திக்கு சாதகமாகும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்றும் பாசன வசதிகளை அறிந்தும் அதற்கு தகுந்தார் போல பயிர்களை தேர்வு செய்து கொள்வது லாபத்தை மேம்படுத்தும். வாகனம் தொடர்பான தொழில்களில் புதிய அனுபவமும் சில மாற்றமான வாய்ப்புகளும் கிடைக்கும். கைத்தொழிலில் இருப்பவர்களுக்கு அரசு வகையில் ஆதரவான சூழல்களும் உதவிகளும் கிடைக்கும். வெளியூர் வியாபார விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படும். கலைஞர்கள் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைத்தாலும் வரவுகள் கிடைப்பதில் தாமதமும் அலைச்சல்களும் உண்டாகும் ஆகவே சம்பள விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதிர்காலம் சார்ந்து சில திட்டங்களை வகுப்பதற்கான சூழல்கள் அமையும். நீண்ட நாள் முதலீடு மற்றும் அது சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் பரிபூரணமாக கிடைக்கும். தொண்டர்கள் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். சில முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் தாமதமாக கிடைக்கும். எதிலும் நேர்மையுடன் செயல்படுவது முன்னேற்றத்திற்கும் செல்வாக்கிற்கும் வழி வகுக்கும். வரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் ஓரளவு குறையும். பழைய கட்டிடங்கள் மற்றும் சிக்கலில் இருக்கக்கூடிய இடங்களை வாங்குவதற்கான சூழல்கள் சாதகமாக அமையும். நன்மைகள் மிதுன ராசி அன்பர்களுக்கு சேமிப்புகளில் இருந்துவந்த தாமதங்களும் தடைகளும் குறையும். மூத்த உடன் பிறப்புகளிடம் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தயக்கமும் தடைகளும் விலகி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கவனம் மிதுன ராசி அன்பர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது. பிறமொழி மக்களிடம் பயனற்ற விவாதங்களையும் கருத்துகளையும் தவிர்ப்பது உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். தாயிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது ஒற்றுமைக்கு வழிவகுக்கும். சம வயதினரிடம் போட்டி பொறாமைகள் இன்றி அரவணைத்து செல்லவும். வழிபாடு பிரதோஷ விரதத்தை மேற்கொண்டு நந்தியை வழிபட்டு வர தடைகள் யாவும் விலகும். மேல்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.
ரிஷபம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள். திருக்கணித பஞ்சாங்கம் மங்களகரமான குரோதி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பங்குனி மாதம் 15 ஆம் 29.03.2025) தேதியன்று இயற்கை அசுபரான சனிதேவர், பூரட்டாதி மூன்றாம் பாத நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நான்காம் பாத நட்சத்திமான மீன ராசிக்கு அதாவது, சனி கிழமையில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.தன்னலம் கருதாது மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே…!!நவகிரகத்தில் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப தன் சுப மற்றும் அசுப பலன்களை அளிக்ககூடியவரான சனிதேவர், தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியும் பார்க்க இருக்கின்றார்.ரிஷப ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியான ராசி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான புத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார். பலன்கள் : சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிர்பாராத சில நிகழ்வுகள் மூலம் மனதளவில் புதிய பக்குவம் பிறக்கும். நினைத்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு முடிவு பெறும். நிலைத்தன்மை குறித்த எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும். பழைய நிகழ்வுகளால் மனதில் சஞ்சலங்கள் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் மனதில் அமைதி பிறக்கும். சில இடங்களில் பொறுமையை கையாள்வது தெளிவையும் செல்வாக்கையும் மேம்படுத்தும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். ரசனைத் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். இணைய வர்த்தக முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குலதெய்வ வழிபாடுகளில் தாமதம் ஏற்படலாம். கலைத்துறைகளில் உடல் உழைப்புகள் அதிகரிக்கும். கேளிக்கை விஷயங்களில் ஆர்வமின்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் நீண்ட காலமாக நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் நன்மைகள் உண்டாகும். பணி சார்ந்து பயணங்கள் இருந்தாலும் அதனால் சில நன்மைகளும் உண்டாகும். நீண்ட கால முதலீடுகளில் ஆதாயம் அடைவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். சனி ராசிக்கு 11பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் எதிலும் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பாராத சில திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் படிப்படியாக குறையும். அரசாங்க அதிகாரிகள் மூலம் ஆதாயம் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் ஓரளவு குறையும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். கடனால் இருந்துவந்த அவமானம் மற்றும் வருத்தங்கள் படிப்படியாக குறையும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளவும் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும் உணவு விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். குலத் தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். பெண்கள் விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனத்தோடு கையாளவும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த வெளியூர் மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நெருக்கடியான சூழல்கள் மறையும். ஆராய்ச்சி கல்வியில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான கல்வியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதைபொருள் ஆராய்வுத் துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு நெருக்கடியாக இருந்துவந்த பல பிரச்சனைகள் குறைவதற்கான சூழல்கள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். பணி மாற்ற விஷயங்களில் தகுந்த ஆலோசனை பெற்றும், பணி நிமித்தமான சூழல்களையும் அறிந்து முடிவுகள் எடுப்பது நன்மையை உருவாக்கும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மருத்துவம் மற்றும் காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான வாய்ப்புகளும் முயற்சிக்கு உண்டான லாபங்களும் கிடைக்கும். விவசாய பணிகளில் இருந்துவந்த சோர்வு மற்றும் மந்த நிலைகள் படிப்படியாக குறையும். விளைச்சலுக்கு உண்டான ஊதியமும் ஊக்கமும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பாலின மக்கள் விஷயங்களில் விவேகத்தை கையாள்வது நன்மதிப்பை பெற்று தரும். அரசு வகையில் எதிர்பார்த்த ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். சுரங்கப்பாதை தொடர்பான வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இறைச்சி மற்றும் உளவுத்துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்கள் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் படிப்படியாக விலகும். சிந்தனைப் போக்கில் தெளிவுடன் இருப்பது நல்லது. சில அனுபவங்கள் மூலம் மேன்மையான சூழல்கள் பிறக்கும். புதிய முயற்சிகளில் விவேகத்தை கையாளுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகளும், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல்களும் உருவாகும். மறைமுகமாக தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயணங்கள் மூலம் புதிய அத்தியாயங்களை உருவாக்குவீர்கள். எதிர்ப்புகளின் தன்மைகளை அறிந்து சரியான முடிவுகளை தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நன்மைகளை உருவாக்கும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உருவாகும்.
நன்மைகள் உபரி வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக உருவாகும். கால்நடை மற்றும் கல்வித் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். தடைப்பட்டு வந்த சுபகாரிய முயற்சிகள் கைகூடி வருவதற்கான சூழல்கள் ஏற்படும். கவனம் சஞ்சலமான சிந்தனைகளால் மனதளவில் குழப்பங்களும் நெருடல்களும் உருவாகும். குழந்தைகள் மற்றும் பூர்வீக சொத்துக்கள் செயல்களில் அலட்சியமின்றி செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது தவிர்ப்பது நன்மையை தரும் வழிபாடு திருச்செந்தூரில் உள்ள முருகபெருமானை வழிபட்டு வர காரிய சித்தி உண்டாகும். மேல்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.
மேஷம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள்திருக்கணித பஞ்சாங்கம் மங்களகரமான குரோதி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் பங்குனி மாதம் 15 ஆம் (29.03.2025) தேதியன்று இயற்கை அசுபரான சனிதேவர், பூரட்டாதி மூன்றாம் பாத நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நான்காம் பாத நட்சத்திமான மீன ராசிக்கு அதாவது, சனி கிழமையில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். மேன்மை பொருந்திய மேஷ ராசி அன்பர்களே…!!நவகிரகத்தில் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப தன் சுப மற்றும் அசுப பலன்களை அளிக்ககூடியவரான சனிதேவர், தான் நின்ற ராசியில் இருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியும் பார்க்க இருக்கின்றார்.மேஷ ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து பனிரெண்டாம் இடமான போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியான குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான சத்ரு ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.பலன்கள் : சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதினால் பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். சொத்துக்கள் விற்பனையில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். அரசு செயல்களில் அலைச்சலுக்கு பின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதார விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். காலம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட மக்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் ஓரளவு குறையும். உற்பத்தி பணிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ளவும். கால்நடை வளர்ப்புகள் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உருவாகும்.
சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் தந்தை வழியில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதுமையான சிந்தனைகள் பிறக்கும். வெளிநாட்டு பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்கல்வியில் சில தெளிவுகள் ஏற்படும். திருப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். முன் யோசனை இன்றி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும்.சனி ராசிக்கு 12-ஆம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் ராசிக்கு 12-ஆம் இடம் என்பது ஏழரை சனியின் ஆரம்பமாகும். இது விரைய சனியாகும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். மறைமுக தடைகளால் செயல்பாடுகளில் சோர்வும் தாமதமும் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. பிற மொழி பேசும் மக்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. நெருக்கமானவர்கள் பற்றிய சில புரிதல்கள் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் பொறுமை காக்கவும் பயனற்ற விவாதங்களையும் பேச்சுக்களையும் தவிர்ப்பது நன்மை தரும். பெண்களுக்கு எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்புகள் குறையும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நன்மை தரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தந்தையிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும் சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி சில தெளிவுகளும் பக்குவங்களும் பிறப்பதற்கான சூழல்கள் உருவாகும். மாணவர்களுக்கு மாணவர்கள் பாடங்களின் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேல்நிலைக் கல்வியில் முன்னேற்றமான ஊழல்கள் உருவாகும் கல்லூரி பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கான சூழல்கள் சாதகமாக அமையும். எனினும் ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்கள் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிலும் கால தாமதம் இன்றி பணிகளை நிறைவு செய்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். பணி சார்ந்த பயணங்களால் அலைச்சலும் ஒரு விதமான சோர்வும் ஏற்பட்டாலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கி தரும் வேலை மாற்ற விஷயங்களில் பொறுமையை கையாள வேண்டும். சில இடங்களில் திறமைக்கான மதிப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களை உடன் இருப்பவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வதற்கான சூழல்கள் அமையும். அபிவிருத்தி விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். கூட்டாளிகள் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். கமிஷன் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் தொடர்பான துறைகளில் ஆதாயம் மேம்படும். நம்பிக்கையான வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். கலைஞர்கள் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உருவாகும். வரவுகள் மூலம் சேமிப்பும் கையிருப்பும் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் இருக்கும் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். சக கலைஞர்களிடம் இருந்துவந்த போட்டிகளும் தடைகளும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த ஒருவிதமான குழப்பங்கள் அவ்வவ்போது ஏற்பட்டு நீங்கும். நிதி ஆலோசகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளுக்கு வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கட்சி பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவரிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் ஆதரவின்மையும், ஒருவிதமான அலைச்சலும் ஏற்பட்டாலும் கட்சியில் உங்கள் செல்வாக்கு மேம்படும். சக தொண்டர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நன்மைகள் மேஷ ராசி அன்பர்களே இதுவரை சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் மேஷ ராசி அன்பர்களே பேச்சுக்களில் கண்ணியத்தையும் கவனத்தையும் கொள்ள வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களை பொறுமையை கையாள வேண்டும். வெளிநாடு வர்த்தக விஷயங்களில் அரசு நிலைப்பாடுகளை அறிந்து செயல்படுவது நன்மை தரும். வழிபாடு திருவானைக்காவல் சென்று ஜம்புகேஸ்வரரை வழிபாடு செய்து வர மன அமைதி உண்டாகும். மேல்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.
குஷியில் அரசு ஊழியர்கள், ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியத்துடன் இதுவும் கிடைக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதில் கிடைக்கும் பிரத்யேக நன்மைகள் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம். • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? • மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்? • எவ்வளவு காலம் பணிபுரிந்த பின்ஓய்வூதியம் கிடைக்கும்? Unified Pension Scheme: ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஓய்வூதியத் திட்டம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகிய இரு ஓய்வூதியத் திட்டங்களிலும் உள்ள முக்கிய அமசங்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது UPS மூலமும் ஊழியர்களுக்கும் அதே சலுகைகள் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்? இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். அரசாங்கமும் 18.5 சதவீதத்தை பங்களிக்கும். இது தவிர, UPS இன் கீழ் ஒரு தனி இருப்பு நிதியும் அமைக்கப்படும். இதில் அரசாங்கம் கூடுதலாக 8.5 சதவீத பங்களிப்பை வழங்கும். மத்திய அரசு ஊழியர்களின் கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். Pension எவ்வளவு காலம் பணிபுரிந்த பின் ஓய்வூதியம் கிடைக்கும்? இந்தத் திட்டத்தின் கீழ், 10 முதல் 25 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு விகிதாசார ஓய்வூதியம் வழங்கப்படும். துரதிர்ஷ்டவசமாக ஒரு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் வழங்கப்படும். இது தவிர, பணியாளரின் ஓய்வு நேரத்தில் பணிக்கொடையுடன் ஒரு மொத்தத் தொகையும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூபாய் 10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Pensioners UPS செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும் சலுகைகளைப் பெறலாம் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூபாய் 10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு ஓய்வு பெறும் ஊழியர்கள் மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய வயதிலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாவார்கள். இது தவிர, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களும் இதன் சலுகைகளைப் பெறலாம். பொது வருங்கால வைப்பு நிதியின் PPF) வட்டி விகிதங்களின் அடிப்படையில் கணக்கிட்டு, முந்தைய காலகட்டத்தின் நிலுவைத் தொகையுடன் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது youtube channel ஐ பதிவிறக்குங்கள்!!
2025 உலக விஸ்கி விருதுகளில் பாராட்டுகளைப் பெற்ற 1,000–30,000 ரூபாய்க்கு இடைப்பட்ட 15 இந்திய விஸ்கிகள் – அம்ருத் முதல் இந்திரி வரை உலக விஸ்கி விருதுகள் 2025 (உலகின் பிற பகுதிகளில்) விழாவில் 15 உள்நாட்டுத் தேர்வுகள் பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம், இந்திய விஸ்கி உலக அரங்கில் தொடர்ந்து பிரகாசிக்கிறது. அம்ருத், இந்திரி மற்றும் பால் ஜான் முதல் லெகசி மற்றும் ஸ்டெர்லிங் ரிசர்வ் வரை, இந்த விருது பெற்ற வெளிப்பாடுகள் ரூ.1,000 முதல் ரூ.30,000 வரை உள்ளன, இது பிரீமியம் விஸ்கி கைவினைத்திறனில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை நிரூபிக்கிறது. இந்தியர்களின் உலகளாவிய ஈர்ப்புவிஸ்கிதொடர்ந்து உயர்ந்து வருகிறது, பல உள்நாட்டு லேபிள்கள் மதிப்புமிக்க உலக விஸ்கி விருதுகள் 2025 (உலகின் பிற்பகுதி) விழாவில் உயர் விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த வருடாந்திர நிகழ்வு உலகளவில் விஸ்கியின் சிறப்பைக் கொண்டாடுகிறது, நிறுவப்பட்ட டிஸ்டில்லரிகள் மற்றும் வளர்ந்து வரும் சுயாதீன உற்பத்தியாளர்கள் இரண்டையும் அங்கீகரிக்கிறது. ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் (RoW) பிரிவின் வெற்றியாளர்கள் இப்போது மார்ச் மாதம் அறிவிக்கப்படும் இறுதி “உலகின் சிறந்த” பட்டத்திற்காக ஸ்காட்லாந்து, அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற விஸ்கி பவர்ஹவுஸ்களின் சகாக்களுடன் போட்டியிடுவார்கள். இறுதிப் போட்டிக்கு முன், இந்த ஆண்டு ரூ.1,000 முதல் ரூ.30,000 வரை விலையில் விற்பனையான 15 இந்திய விஸ்கி தேர்வுகளைப் பார்ப்போம். அம்ருத் டிஸ்டில்லரீஸ் அம்ருத் பீட்டட் சிங்கிள் மால்ட் கேஸ்க் வலிமை (தங்கம்) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.7,500 முதல் ரூ.8,500 வரை போர்ட் எலனில் மால்ட் மற்றும் பீட் செய்யப்பட்ட ஸ்காட்டிஷ் பார்லியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த பீப்பாய்-வலிமை கொண்ட விஸ்கி, வெண்ணிலா, கேரமல், ஓக், பழம், புகை மற்றும் மசாலா ஆகியவற்றின் சுவை குறிப்புகளுடன் ஒரு வலுவான வெளிப்பாடாகும்.
அம்ருத் பகீரா, அம்ருத் ஃபியூஷன் சிங்கிள் மால்ட், அம்ருத் சிங்கிள் மால்ட் & அம்ருத் சிங்கிள் மால்ட் காஸ்க் வலிமை (வெள்ளி) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) • அம்ருத் பகீரா: டார்க் சாக்லேட், மிட்டாய் பழங்கள் மற்றும் ஓக் ஆகியவற்றால் நிறைந்தது. (ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை) • அம்ருத் ஃப்யூஷன்: சிட்ரஸ் பழங்கள், மசாலாப் பொருட்கள், கிரீமி இனிப்பு, பீட், காபி மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றின் சமநிலை. (ரூ. 4,500 முதல் ரூ. 5,500 வரை) • அம்ருத் சிங்கிள் மால்ட்: தேன், மசாலா, பாதாமி மற்றும் ரம் ஆகியவற்றின் இணக்கமான கலவை. (ரூ. 3,500 முதல் ரூ. 4,500 வரை) • அம்ருத் சிங்கிள் மால்ட் கேஸ்க் வலிமை: பிஸ்கட், பழம், சிட்ரஸ், மால்ட் மற்றும் டாஃபி குறிப்புகள். (ரூ. 6,000 முதல் ரூ. 7,500 வரை) இந்திரி-ட்ரினி விஸ்கிகள் இந்திரி ரீஃபில் ஒலோரோசோ ஷெர்ரி கேஸ்க் சிங்கிள் கேஸ்க் 03 (தங்கம்) வகை: ஒற்றை காஸ்க் ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை 58.5% ABV இல் பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த விஸ்கி, ஷெர்ரி பீப்பாய் செல்வாக்கிலிருந்து உலர்ந்த பழங்கள், டார்க் சாக்லேட், டாஃபி மற்றும் சூடான மசாலா ஆகியவற்றின் வளமான சமநிலையை வழங்குகிறது. இந்திரி எக்ஸ் சாட்டர்ன் ஒயின் கேஸ்க் சிங்கிள் கேஸ்க் 47050 (வெள்ளி) வகை: ஒற்றை காஸ்க் ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சிட்ரஸ் பழத்தோல் அடுக்குகள், வெண்ணிலா மற்றும் சிறிது ஓக் சாறுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட விஸ்கி, மது போன்ற இனிப்புடன் நிறைவுற்றது. இந்திரி ஹவுஸ் ஆஃப் பிளாக் & ஹவுஸ் ஆஃப் கிரீன் (வெள்ளி & வெண்கலம்) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஹவுஸ் ஆஃப் தி டிராகன் ரசிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த வரையறுக்கப்பட்ட பதிப்புகள் தனித்துவமான சுவை சுயவிவரங்களை வழங்குகின்றன: • ஹவுஸ் ஆஃப் பிளாக்: இனிப்பு சாக்லேட், டாஃபி மற்றும் வெண்ணிலாவின் குறிப்புகள். • ஹவுஸ் ஆஃப் கிரீன்: நட்டு நிறத்துடன் கூடிய பழம் நிறைந்த, மலர் சுவை கொண்ட விஸ்கி. இந்திரி 2024 தீபாவளி கலெக்டர் பதிப்பு (வெள்ளி) வகை: சிறிய தொகுதி ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை 50% ABV இல் பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த பண்டிகை பதிப்பு, பீட் செய்யப்பட்ட ஆறு-வரிசை பார்லியிலிருந்து வடிவமைக்கப்பட்டு, பாரம்பரிய செப்பு பானை ஸ்டில்களில் காய்ச்சி வடிக்கப்படுகிறது, இதில் லேசான பழங்கள், மென்மையான மலர்கள் மற்றும் நுட்பமான மசாலாப் பொருட்கள் உள்ளன.
இந்திரி நிறுவனர் ரிசர்வ் ஒயின் கேஸ்க் 11 வயது (தங்கம்) வகை: ஒற்றை மால்ட் (12 வயது & அதற்குக் குறைவானது) விலை: ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை 11 வருடங்கள் பழமையான இந்த விஸ்கி, கருப்பட்டி, நெல்லிக்காய், அன்னாசி மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றின் துடிப்பான கலவையைக் காட்டுகிறது. கலந்த இந்திய விஸ்கிகள் லெகசி பிரீமியம் கலந்த விஸ்கி (தங்கம்) வகை: கலப்பு (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை தேன், உலர்ந்த பழங்கள் மற்றும் சிறிது காரச் சுவையுடன் கூடிய மென்மையான, நன்கு உருண்டையான விஸ்கி. ஸ்டெர்லிங் ரிசர்வ் B10 பிரீமியம் பிளெண்டட் & ரவுலட் அன்பீடட் பிரீமியம் (வெண்கலம்) வகை: கலப்பு (வயது அறிக்கை இல்லை) • ஸ்டெர்லிங் ரிசர்வ் பி10: தேன், வெண்ணிலா, ஓக் மற்றும் பெர்ரி. (ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை) • ரவுலட் அன்பீட்டட் பிரீமியம்: பழம், தேன் மற்றும் மால்ட் ஆகியவற்றின் இனிப்பு கலவை. (ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை) பால் ஜான் விஸ்கி பால் ஜான் சிங்கிள் மால்ட் விஸ்கி மதேரா (வெண்கலம்) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை ஆரஞ்சு தோல், வெண்ணிலா மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றின் ஆழமான குறிப்புகளுடன், கிறிஸ்துமஸ் கேக்கை நினைவூட்டும் ஒரு பணக்கார, வரையறுக்கப்பட்ட பதிப்பு விஸ்கி. உலக அரங்கில் இந்திய விஸ்கியின் எழுச்சி இந்திய விஸ்கி தொடர்ந்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது, பிரீமியம் எக்ஸ்பிரஷன்கள் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் சில சிறந்தவற்றுடன் போட்டியிடுகின்றன. இந்த ஆண்டு வேர்ல்ட் விஸ்கிஸ் விருதுகள் ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் பிரிவின் வெற்றியாளர்கள் புதுமை, பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் துடிப்பான கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்திய டிஸ்டில்லரிகள் விஸ்கி தயாரிப்பின் எல்லைகளைத் தாண்டிச் செல்வதால், ஆர்வலர்கள் வரும் ஆண்டுகளில் உலக அரங்கில் இன்னும் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் “உலகின் சிறந்த” இறுதி வெற்றியாளர்களுக்காக காத்திருங்கள்!
ஏசி ஈ எம் யூ உள்ளூர் ரயில் இரயில்வே அமைச்சகம் நாட்டின் முதல் வந்தே பாரத் போன்ற குளிர்சாதன E M U மின்சார மல்டிபிள் யூனிட் ரயிலை தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு ஒதுக்கியுள்ளது.தயாரித்தது ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைஅதாவது I C F, இந்த ரயில் ஏற்கனவே SR மண்டலத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 20 வியாழக்கிழமை அன்று I C F இலிருந்து அனுப்பப்பட்டது. RAIL NEWS இடம் பேசிய மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தெற்கு ரயில்வேக்கு ஒரு ஏசி E M U ரயில் அனுப்பப்பட்டது. பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை ரயில் ICF-லிருந்து புறப்பட்டது, என்று அந்த அதிகாரி கூறினார். SR மண்டலத்திற்கான இதுபோன்ற முதல் ரேக் இதுவாகும். இந்த 12 பெட்டிகள் கொண்ட ஏ சி ஈ எம் யூ ரேக், வரவிருக்கும் கோடை மாதங்களில் ரயில் பயணத்தில் மேலும் புரட்சியை ஏற்படுத்தும். இந்தியன்ரயில்வே’ சென்னைக்கானA C E M U ரயிலில் 12 பெட்டிகள் கொண்ட ரேக்குகள் இருக்கும்.ICF மொத்தம் இரண்டு இதுபோன்ற ரேக்குகளை உற்பத்தி செய்கிறது. அவை — DMC + TC + MC + TC + NDMC + TC + MC + TC + TC + MC + TC + DMC DMC-டிரைவர் மோட்டார் கோச், TC – டிரெய்லர் கோச், MC- மோட்டார் கோச், NDMC-டிரைவர் அல்லாதமோட்டார் கோச். சென்னையின் புதியஏ சி E M U ரயில் மெட்ரோ பெட்டிகளுக்கு இணையானது, ஆனால் அதிக சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ரயிலில் 1116 பயணிகள் இருக்கை வசதி உள்ளது DMC-78, TC-96, MC-96, NDMC-96. இருப்பினும், 3798 பயணிகள் நிலையான பயணிகளாக பயணிக்க முடியும். சென்னை ஏ சி ஈ மு உள்ளூர் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகம் வரை இயக்க முடியும். சென்னையின் புதியE M U ரயிலில், முழுமையாக இடைநிறுத்தப்பட்ட இழுவை மோட்டார்கள், சக்கரத்தில் பொருத்தப்பட்ட டிஸ்க் பிரேக்குகள் மற்றும் இரண்டாம் நிலை கட்டத்தில் ஏர் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் கொண்ட புதிய தலைமுறை போகி பொருத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் தமிழ்நாட்டின்
முதல் ஏ சி E M U உள்ளூர் ரயிலின் முதல் 10 அம்சங்களைப் பாருங்கள்: • இந்த E M U ரயில் பெட்டியில் நேரான பக்கவாட்டு சுவர்களுடன் கூடிய ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாடி கோச் உள்ளது. • அனைத்து ரயில் பெட்டிகளிலும் 3 இருக்கைகள் கொண்ட ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் இருக்கைகள் உள்ளன. • மின்சாரத்தால் இயக்கப்படும் இரட்டை இலை தானியங்கி நெகிழ் கதவுகள் – 4 கதவுகள் பக்கவாட்டில். • பரந்த காட்சிக்காக அகலமான மற்றும் பெரிய இரட்டை-சீல் செய்யப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள். • சீல் செய்யப்பட்ட அகலமான வெஸ்டிபுல் கேங்வேக்கள் – முனை முதல் முனை வரை இணைக்கப்பட்டுள்ளன. • அலுமினியத்தால் செய்யப்பட்ட வெளியேற்றப்பட்ட மாடுலர் லக்கேஜ் ரேக். • மறைக்கப்பட்ட திருகுகள் மற்றும் மூட்டுகளில் வெளியேற்றங்களுடன் உட்புற பேனலிங்கிற்கான அலுமினிய கூட்டு பேனல்கள் / FRP. • அணிய-எதிர்ப்பு ரப்பர் தரை மேல். • பயணிகள் தகவல் மற்றும் அறிவிப்பு அமைப்புக்கான ஜி பி எஸ் அடிப்படையிலானஎல் இ டி காட்சிகள். • அவசர தேவைக்காக ஒவ்வொரு வாசலிலும் பயணிகள் மீண்டும் பேச வசதி. • அனைத்து பெட்டிகளிலும் LED இலக்கு பலகைகள் மற்றும் CCTV கேமராக்கள். • மீளுருவாக்கம் EP (மின்-நியூமேடிக்) பிரேக்.• மீளுருவாக்கம் காரணமாக 35% வரை மின் ஆற்றலைச் சேமிக்கிறது. • முந்தைய 3 கட்ட EMU ரேக்குகளில், இழுவை உபகரணங்கள் உள் இடத்தை ஆக்கிரமித்தன, மேலும் சிறந்த இட பயன்பாட்டிற்காக, 2019 ஆம் ஆண்டில் IR இல் முதல் முறையாக ICF ஒரு அண்டர்ஸ்லங் மின்சார உந்துவிசை அமைப்புடன் கூடிய குளிரூட்டப்பட்ட EMU ஐ வடிவமைத்துள்ளது.
கோடை காலம் தொடக்கமான , வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான லோக்கல் ரயில் பயணம் இன்னும் சிறப்பாக – கூலாக இருக்கும்.*
*ஆம்… 12 ரேக்குகள் கொண்ட, 1,320 இருக்கைகள் கொண்ட,…. மற்றும் ,ஒரு பயணத்திற்கு [ TRIP ] 5,700 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஏசி ரயில் “சோதனை ஓட்டம்” பிப்ரவரி நடுப்பகுதியில் நடத்தப்பட்டது .மார்ச் மாதத்தில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும்.*இது சென்னை ICF-ல் தயாரிக்கப்பட்டது சென்னை கடற்கரை முதல் -தாம்பரம் வரை மொத்தம் 28.6 கி.மீ பயணத்திற்கான தற்காலிக கட்டணம் – ₹ 95 மட்டுமே
கோவில்கள் வரலாறு அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் ஒரு சமயம் கைலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரியன் மற்றும் சந்திரனின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், “”விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,” என்றார். அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அப்படி தேவி பார்வதி தவம் செய்த அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் “அருந்தவநாயகி’ எனப்படுகிறாள். பழு என்றால் ஆலமரம். எனவே சுவாமி ஆலந்துறையார் எனப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் இந்த பகுதி திருப்பழுவூர் என பெயர் பெற்றது.
சிறப்பம்சங்கள் : சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். இறைவன், இறைவி இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், தாயார் அருந்தவ நாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக ஆலமரமும், தீர்ததமாக பரசுராம தீர்த்தம், மற்றும் பிரம்ம தீர்த்தம், ஆகியவை உள்ளன. நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயிலை அடுத்து சிறிய கோபுரம் உள்ளது. அதனைத் தொடர்ந்து விநாயகர், கொடி மரம், பலி பீடம், நந்தி, ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் இடது புறமாக அருந்தவ நாயகி அம்மன் சன்னதி உள்ளது.
சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் வாயிலில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் உள்ளனர். வலப்புறம் இச்சா சக்தியின் அருகே விநாயகர் உள்ளார். அர்ந்த மண்டபத்தில் சந்திரன், சூரியன், 63 நாயன்மார்களின் உற்சவமூர்த்திகள்,திருமணகோலத்தில்மீனாட்சிசுந்தரேசுவரர், கங்காலமூர்த்தி, பைரவர் ஆகியோர் உள்ளனர். இங்கு சிவகாமசுந்தரியுடன் நடராசர் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறையின் முன்பாக நந்தி உள்ளது. மூலவர் உள்ள கருவறைக்கு வெளியே இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோட்டங்களில் கஜசம்காரமூர்த்தி, சபாபதி நடராசர், கமல கணபதி, தென்முக பரமன், அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீசுவரர், ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது. கருவறைத் திருச்சுற்றில் வலப்புறம் விநாயகர்,உமைமங்கைபாகன், காத்தீயாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர்,மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரவை மகரிஷி, ஞானதட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி,பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, விநாயகர், பிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். அடுத்து அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்கம் ஆகிய மூவரின் சன்னதிகள் உள்ளன. அதற்கடுத்து கஜலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.
இக்கோயிலின் வெளியே வலப்புறத்தில் சற்று தூரத்தில் இடிந்த நிலையிலான ஒரு சிறிய கோயில் காணப்படுகிறது. அக்கோயிலின் உள்ளே ஒரு லிங்கத் திருமேனி உள்ளது. வழிபாட்டில் இல்லாத நிலையிலும் உள்ளே விளக்கு எரிந்துகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. உள்ளே போகமுடியாத அளவு வௌவால்கள் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயில் அமைப்பிற்கு முன்பாக இரு நந்திகள் தரையில் பதிந்தவகையில் காணப்படுகின்றன. அந்த சிறிய கோயிலைச் சுற்றி வரும்போது பல சிற்பங்களைக் காணமுடிந்தது. குடமுழுக்கு 5 ஏப்ரல் 1974, 18 சூன் 2003 மற்றும் 10 திசம்பர் 2014 ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.மூலவர் : ஆலந்துறையார்(வடமூலநாதர்) அம்மன்/தாயார்: அருந்தவ நாயகி தல விருட்சம்: ஆலமரம் தீர்த்தம்: பிரம, பரசுராம தீர்த்தம் ஆகமம்/பூஜை: சிவாகமம் புராண பெயர்: திருப்பழுவூர் ஊர்: கீழப்பழுவூர் மாவட்டம்: அரியலூர் மாநிலம்: தமிழ்நாடுமுகவரி: அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம். போன்: +91- 99438 82368 அமைவிடம்: அரியலூர் – திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் கோவில் வளைவு உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்தேவாரப்பதிகம்கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மான்திடம் என்பர் மாடமலி சூளிகை யிலேறி மடவார்கள் பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே. திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 55வது தலம் திருவிழா:பங்குனி உத்திரம். பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். மேலப்பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் (பசுபதீஸ்வரம்) ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
துயர்கண்டு துவண்டு விடாதீர்கள். வாழ்க்கை எதிர்மறைகளைக் கொண்டது.பிச்சைக்காரன் அமைதியுடன் பாதுகாப்பற்று உறங்குவான். பேரரசன் பாதுகாப்புடன் இருப்பான் ஆனால் அமைதியாக உறங்க மாட்டான். உனது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமான, அமைதியானதாக, மௌனமானதாக, சந்தோஷமானதாக எது ஆக்குகிறது என்று மட்டும் கண்டுபிடித்துக்கொள். சாதாரணக் கணக்குதான் உனது வாழ்க்கை ஒரு புனிதமான வாழ்க்கையாக ஆக்கும். என்னைப் பொறுத்த வரையில் நீ மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நீ ஒரு புனிதமான மனிதன். எவரையும் எக்கணமும். எதற்காகவும் சார்ந்திருக்காதே. வெளிச்சம் இல்லையேல். நிழல் கூட துணைக்கு வராது. பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது. கஷ்டங்கள் கதவைத் தட்டத்தான் செய்யும். அவற்றைத் திருப்பி அனுப்புவதும். அல்லது அழைத்து உள்ளே அமர வைத்து அழகு பார்பதும் உங்களிடம் தான் உள்ளது. சில நேரம் உடைந்து போவது கூடபுதிய மாற்றத்திற்காகத் தான், கவலையை விட்டொழியுங்கள். புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும் ஒடிக்க முடியாது. துயர்கண்டு துவண்டு விடாதீர்கள். விழிப்பதற்கே வாழ்க்கை, வெல்வதற்கே தோல்வி. எழுவதற்கே வீழ்ச்சி, வாழ்வதற்கே வாழ்க்கை. வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும் சிரித்து கொண்டே இருங்கள் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும். தேவைகள், எதிர்பார்ப்புகள், இவைகளைக் குறைத்துக் கொண்டால், வாழ்க்கையில் மன அமைதியும், நிம்மதியும் நிச்சயமாகக் கிடைக்கும். பிறர்க்கு நலம் கொடுத்து, அதனால் அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் நீ என்றால் நீ கடவுள்! கொடுப்பவர் இறைவன் என்பதை உணர்ந்தாலே, கிடைப்பது அனைத்தும் உயர்வாகத் தெரியும்.