திட்டைக்கு வந்தால்… குரு பலம் நிச்சயம்…

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் திட்டைக்கு வந்தால்… குரு பலம் நிச்சயம்… தஞ்சாவூர் மாவட்டம்.பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை. தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது. அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள். பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாகச் சொல்கிறார் தென்னாடுடைய சிவனார். இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.ஒரு கோவிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும்,துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம். அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர். அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோவில் அழைக்கப்படும். கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோவில் குறிக்கப்பட்டிருக்கும்.ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார். அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார். தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம். இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே முதன்மையாக வழிபடப்படுபவராக உள்ளார்.தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டை முக்கியமான தலம் ஆகும்.திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை. ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரிய புராணத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோக நாயகி சமேத ஸ்வயம்பூ தேஸ்வரர் புராணக்குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது. சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம். ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.

திருக்கயிலாயம், காசி, திருக்காஞ்சி, சிதம்பரம் முதலான பல தலங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள். அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார். அப்படியான சிவ தலங்களில் 22 வது திருத்தலம் தென்குடித்திட்டை. தலம், தீர்த்தம், மூர்த்தம்… விசேஷங்கள்!பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம். வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது. எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.வசிஷ்ட முனிவர், கிருதயுகத்தில் பலாசவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார், இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில்… இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றிச் சொல்லியிருக்கிறார்.துவாபர யுகத்தில், வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

வரன்கள் அறிமுக மேடை 52

அடிப்படைத் தகவல், பெயர் : கோட்டேஸ்வரன்.ஜி ,மாத்ரி ஐடி : MS 25264 ,முகவரி : சென்னை ,செல் போன் : 9443385532 ,மின்னஞ்சல் ஐடி : kotteshwaran@gmail.com, வயது : 39 ,பிறந்த தேதி :09-மார்ச்-1986, திருமண நிலை : திருமணமாகாதவர், கல்வி : மருத்துவம், கல்வி விவரங்கள் : MBBS,MD ,தொழில் : மருத்துவர், தொழில் விவரங்கள் : M.R.மருத்துவமனை,சென்னை,பணிபுரியும் இடம் : தனியார்,ஆண்டு வருமானம் : 720000,மதம் : இந்து,சாதி: வன்னியர், மொழி : தமிழ், நட்சத்திரம் : சதயம், ராசி: கும்பம், உயரம் : 5 அடி 7 அங்குலம், 170 செ.மீ. எடை : 70 கிலோ,உடல் வகை :சராசரி, உணவுமுறை : சைவ,சுயவிவரவிளக்கம் : நல்ல குணாதிசயங்கள் மற்றும் நல்ல தோற்றம், நன்கு படித்தவர், நல்ல குடும்பப் பின்னணியுடன் நன்கு செட்டில் ஆனவர். குடும்ப மதிப்புகள் : பாரம்பரியம்,குடும்ப வகை : தனி குடும்பம்,குடும்ப நிலை : பணக்காரர் குடும்பம், தோற்றம் : சென்னை,தந்தை பெயர் : கோவிந்தசாமி, சகோதரர்கள் எண்ணிக்கை : மூத்தவர் – 1, சகோதரிகள் எண்ணிக்கை : மூத்தவர் – 1 ,துணைவர் விருப்பம், வயது : 30 முதல் 38 வயதுக்கு இடையில் ,தேடுவது : திருமணமாகாதவர், மதம் : இந்து ,சாதி : வன்னியர் ,கல்வி : இளங்கலை, வாழும் நாடு : இந்திய ,குடியிருப்பு நிலை : இந்திய குடிமகன்,

*எண்ணங்களின் மாறுபாடு – புரிந்து கொள்வது எப்படி

_*Motivation*__*எண்ணங்களின் மாறுபாடு – புரிந்து கொள்வது எப்படி?*_ * 🌹🌹🌹தனித்து இயங்குவதை விட நம்மை புரிந்து கொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது எளிதான வெற்றியை பெற்று தரும். ஆனால் நம்மை எல்லோருக்கும் பிடித்து விடுமா? ஒவ்வொருவரின் குணநலன்களும் வெவ்வேறு என்ற நிலையில் முரண்பாடுகள் எழுவது இயல்பானது. ஒரே வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூட பிடிக்கும், பிடிக்காது என்ற எண்ணம் இருக்கக் கூடும். * அனைவரும் விரும்புபவராக இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என்றாலும் சில வழிமுறைகளைப் பின்பற்றி பெரும்பாலானவர்களுக்கு விரும்பத்தக்கவராக இருக்க நிச்சயம் முடியும், நாம் மனது வைத்தால். சரி எப்படி இருந்தால் மற்றவர்களுக்கு பிடிக்கும்? இங்கு உங்களுக்காகவே சில டிப்ஸ். * எதிராளியின் செயல் குறித்த தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் எதிராளியை குறைத்துப் பேசும் போது உங்களுடைய மதிப்பும் குறைந்து நீங்கள் பேசும் வார்த்தைகள் வலிமையற்று விடும். * நேரத்தை வீணடிக்கும் சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். எதிராளி விவாதிக்கும் நோக்கில் கேள்விகளை வீசினாலும் நகர்ந்து விடுங்கள். *  ஒரு செயலால் கோபம் ஏற்படும் போது அதை எதிராளி மீது காட்டாதீர்கள். அவர் உங்களை கோபப்படுத்தினாலும் நிதானமாக இருங்கள். இல்லையெனில் அந்த இடத்தை விட்டு விரைந்து வெளியேறி விடுங்கள்.* எதைப் பற்றி பேசினாலும் அல்லது யாரைப் பற்றி பேசினாலும் அந்த விஷயம் மற்றும் அவர்களைப் பற்றி ஒரளவு தெரிந்து கொண்ட பின் பேசுங்கள். தவறான தகவல்கள் உங்கள் மீதான நம்பிக்கையைக் குலைத்து விடும். * நல்ல விளைவு தரும் உரையாடலில் முரண்பாடுகளாக தோன்றுவது போல் தோன்றினால் பேச்சுப்பொருளை மாற்றுங்கள். உரையாடலை ஒருபோதும் தேவையற்ற விவாதம் ஆக்கி விடாதீர்கள். * தகுதி, அந்தஸ்து பார்த்து பேசாதீர்கள். அனைவரிடமும் பாரபட்சம் காட்டாத குணத்துடன் சரிசமமாக பழகுங்கள். சிலரை உயர்த்திப் பேசும் போதும் பழகும் போதும் மற்றவர்களுக்கு நீங்கள் போலியானவராக தெரிவீர்கள். * அன்பும் கண்டிப்பும் கலந்தவராக இருங்கள். எது உண்மையானதோ எது நேர்மையானதோ அதை ஆதரிங்கள். சில சமயங்களில் நேர்மை அடுத்தவருக்கு கசப்பாக இருந்தாலும் அதுவே உங்கள் மதிப்பு உயரக் காரணமாகும். * நன்றாக கவனித்துப் பாருங்கள். சிறந்த தலைவராக இருப்பவர்கள் தமது பணியாளர்களுக்கு நல்லது நடக்க தங்கள் சொந்த நலனை கூட விட்டுக் கொடுக்க தயங்குவதில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் என்றும் தாழ்வதில்லை. * எதைச் சொல்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லுங்கள். முடியாததை சொல்லி தர்ம சங்கடத்திற்கு ஆளாகாமல் தவிர்ப்பது நல்லது. * நிறைவேறாத போலி நம்பிக்கைகளை ஏற்படுத்தாதீர்கள். போலி வாக்குறுதிகளின் சாயம் வெளுத்தால் பின்விளைவுகள் உங்களுக்கே. * புறம் பேசுபவர்களை விட்டு விலகி விடுங்கள். அடுத்தவரின் விஷயங்களைப் பற்றி உங்களிடம் சொல்பவர்கள் அடுத்தவரிடம் உங்களைப் பற்றி சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? * அதேபோல் மற்றவரின் செயல்களை கண்காணித்து விமர்சிப்பதும், அவர்களது சொந்த விஷயங்களில் தலையிடுவதும் அறவே கூடாது. – இப்படி பல விஷயங்களில் கவனமாக இருந்தால் நிச்சயம் மற்றவர்கள் நம்மை விரும்பி ஆதரவு தருவார்கள்🌹🌹🌹

கன்னி தெய்வம்  வழிபாடு.

கன்னி தெய்வம்  வழிபாடு. ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது பாரத தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. சக்தி வழிபாடு என்பதுதாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும், கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இன்பத்தை கருவாக்கினாள் பெண். உயிருக்குள் உயிர் சுமந்து மனித குலத்தை விருத்தி அடையச் செய்தவளும் பெண்தான். இந்த காரணத்தினாலேயே பெண்ணை மகாசக்தியாகப் பார்த்திருக்கிறான் ஆதிமனிதன். தன்னைவிட பலம் குன்றிய பெண்ணைப் பார்த்து பயந்திருக்கிறான். அவளைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்கிறான். அந்தப் பழங்கால மரபுக்கும் வரலாறுக்கும் இன்றும் நிலவும் சான்று தான் தமிழர்களின் கன்னி வழிபாடு. ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மணம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது. இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள். சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி பட்டணம் வரை தொடர்ந்து வருகிறது. இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். பெரும்பாலும் செவ்வாய்கிழமை தான் கன்னிக்கு ஏற்ற நாள். எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூஜை வைத்து வணங்குவார்கள். தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்கும் வழக்கம் நம் நாட்டில் காணப்படுகிறது. பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை,ஈசான மூலை,என பிரித்துக் கூறுவதுண்டு. அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை என தனி மூலை இருப்பதே கன்னி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாக உள்ளது. பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன. தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர். குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும்.

ஏன் என்றால் குடும்ப ஒற்றுமை தான் கன்னிக்கு மிக பிடிக்கும். அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும். இறந்த பெண் வயதுக்கு ஏற்ப அவர்களுக்கு உடை எடுத்து வைப்பார்கள். சிறுமிகளுக்கு அதற்கேற்ற ஆடைகளும், இளம் பெண்ணுக்கு பாவாடை சட்டை தாவணியும், அதை விட பெரிய பெண்ணுக்கு சேலை சட்டையும் வாங்கி வைத்து வணங்குவார்கள். அந்திக் கருக்கலில் கன்னியை வணங்க துவங்குகிறார்கள். இளநார்பெட்டி ஒன்றில் மஞ்சள் கிழங்கு, சிற்றாடை அல்லது சேலை, கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து, பிச்சிப்பூ அல்லது மரிக்கொழுந்து படைத்து, சாம்பிராணி மணத்தை வீடு முழுவதும் நிரப்பி, முற்றத்தில் நீர் தெளித்து கன்னியை வரவேற்று வழிபடுகிறார்கள். இந்த நார்ப்பெட்டிக்கு கன்னிப்பெட்டி என்று பெயர். கன்னிப்பெட்டியை வைக்கும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள பூப்படைந்த பெண்ணுக்கு அருள் வந்து மூச்சிரைக்கும். அவரிடம் தங்களது குறைகளை முறையிட்டு தீர்க்குமாறு குடும்பத்தினர் வேண்டுவர். தன்னை மறக்காமல் வழிபட்டால் துயரத்தைப் போக்கி குடும்பத்தை தழைத்தோங்கச் செய்வதாக அவரிடமிருந்து அருள்வாக்கு கும்பிடுபவர்களுககு கிடைக்கும். பின்னர் கன்னி மூலையில் உயரமான இடத்தில் இளநார்பெட்டியை வைத்து விடுவார்கள். முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். கன்னி பெட்டியை அதிகாலையில் எடுக்கும் போது வீட்டை சுத்தம் செய்வார்கள். கன்னிப் பெட்டியைத் திறக்கும் போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. அதற்குள் வைத்திருந்த துணியை குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு உடுத்தக் கொடுப்பார்கள். இந்தக் கன்னிப் பொங்கல் தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர்கள் பாணிக்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகிறது. துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்று விட்டால் வேறு வீட்டு பெண். எனவே அவர்களுக்கு கன்னிக்கும்பிட்ட துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியை கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்த குடும்பத்தின் பெண். தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்று கன்னி தெய்வங்களின் எழுதப்படாத சட்டம். குடும்ப ஓற்றுமைக்கு இந்த கன்னி வழிபாடு ஒரு சான்றாகும். இன்றைய நவீனயுகத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் பொருள் தேட திரைகடல் தாண்டி தேடி ஓடி விடுகிறார்கள். எப்போதாவது கல்யாணம், கோயில் கொடை என்றால் கூட அவர்கள் ஒன்று சேருவது கடினம். ஆனால் கன்னி தெய்வம் குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் வழிபாடாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் படையல் தயார் செய்யவேண்டும். பனியாரம், அதிரசம் என இனிப்பு பலகாரம் கன்னிகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே படையலில் நிச்சயம் பனியாரம், அதிரசம் என இனிப்பு வகைகள் கண்டிப்பாக இடம்பெறும். அதன் பின் வடை பாயாசத்துடன் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். குடும்ப தலைவி அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் ஒரு இடத்தில் இலையை போட்டு அனைவருடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். இந்த சமபந்தி விருந்து கன்னி வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வழிபாட்டிற்காகவே வருடத்துக்கு ஒரு முறை குடும்பத்தினரை ஒன்று சேர்த்துவிடுகிறாள். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உறவை தேடி ஓடி வருகிறார்கள். பெரும்பாலுமே ஒரு பெண்ணுக்கு எப்போதுமே தான் பிறந்த வீட்டின் மீது பற்று உண்டு. இதுபோன்ற கன்னிகளுக்கும் அதுபோலதான் ஆசை. தன் வீட்டில் அண்ணன் தம்பி என்று உறவு முறைகள் அனைவரும் ஒன்றாக நின்று தம்மை வணங்க வேண்டும் என ஆசைபடுவாள். அப்படி வணங்கும் போது மனம் குளிர்ந்து அவர்களுக்கு வேண்டும்வரம் கொடுப்பார். இப்போது பல மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் இடத்துக்கே கன்னியை கொண்டு சென்று வைத்து வணங்கி வருகிறார்கள். பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினை கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடிர் திடிரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்லுவதை தற்போதும் காணலாம். கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது. குழந்தைகளுக்கு கல்வி செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து. கன்னிகளில் கதை பலவாறாக பேசப்பட்டு வருகிறது. அதில் பல கதை மனதை உருக்குவதாகவே உள்ளது. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த சிறுமி ஒருவர் இறந்து விட்டாள். வருடம் தோறும் இறந்த அந்த பெண்ணுக்கு பாவடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.

23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்த பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவடை சட்டைதானா… போதவில்லையே’ என கண்ணீர் மல்க கேட்க அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை சட்டை வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னிதெய்வம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மறைந்து வாழும் குழந்தையாகவே வணங்கப்படுகிறது. ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்து விட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுது கொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள் எல்லாம் சரியாகி விடும் என கூற, கன்னியை வணங்கி கன்னிமூலையில் குழந்தையை கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம். இதுபோல் கன்னி தெய்வங்கள் இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறது. பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து கொண்டிருக்கிறது. தற்போது பனை தொழில் முழுவதும் குன்றி விட்டது. நார் பெட்டி போன்ற பொருள்கள் காட்சி பொருளாக மாறிவிட்டது. நவீன யுகத்தில் கன்னி நார் பெட்டி மட்டும் தாயரிக்கும் பணி நடந்து வருகிறது. பல கிராமங்களில் பல வீடுகளில் இந்த நார் பெட்டி பல வண்ணத்தில் தொங்கி கொண்டிருப்பதை நாம் இப்போதும் காணலாம். பழமையை பறைசாற்றும் இந்த வழிபாடு, பல வரலாறுகளை சுமந்து கொண்டு தமிழரின் பண்பாட்டை இன்றும் பறைசாற்றிக் கொண்டு தான் இருக்கிறது. ஓம்நமசிவாய

சிம்மம் 2025 சனிபெயர்ச்சி பலன்கள்

சிம்மம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சிம்ம ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியான கர்ம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான புத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக கர்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் வியாபாரம் நிமித்தமான சில புதிய மாற்றங்கள் உருவாகும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். செய்யும் பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். மாமியார் வழி உறவுகள் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்ப்பது சிறப்பு. முழங்கால்களில் சிறு சிறு வலிகள் அவ்வவ்போது ஏற்பட்டு நீங்கும். செயல்திறனில் ஒரு விதமான சோர்வும் ஆர்வமின்மையும் உண்டாகும். உரம் விற்பனை பணிகளில் ஒரு விதமான மந்த நிலைகள் ஏற்படும். சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதினால் பேச்சுக்களில் பொறுமையை கையாள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நேரத்திற்கு அளவான உணவினை எடுத்துக் கொள்வது செயல்பாடுகளின் வேகத்தை அதிகப்படுத்த உதவும். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனம் வேண்டும். மற்றவர்கள் இடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சலும் தாமதமும் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வவ்போது ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய அளவிலான முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் வித்தியாசமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும். குறும்படம் விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உல்லாச வாழ்க்கை மற்றும் பயணம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சில விஷயங்களில் அனுபவங்கள் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வமின்மை உண்டாகும். சிறு சிறு விஷயங்களாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவீர்கள். எதிர் பாலின மக்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சனி ராசிக்கு எட்டாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்யும் காலம் அஷ்டமத்து சனி ஆகும். இக்காலங்களில் உங்களைப் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றமும் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் ஆர்வம் இன்மை உண்டாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். வசதி வாய்ப்புகளில் மாற்றம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களால் சில விரயங்கள் ஏற்படும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் சில தாமதங்கள் ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பக்குவமாக அரவணைத்து செல்வது நன்மை தரும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு சுய தொழில் நிமித்தமான விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். துணைவர் இடத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் குறித்த நிலைப்பாடுகளில் ரகசியம் காக்கவும்.

மாணவர்களுக்கு மாணவர்களுக்கு மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். அடிப்படைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு விதமான சோர்வும் மறதியும் அவ்வவ்போது ஏற்பட்டு நீங்கும். விளையாட்டுப் பணிகளில் திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்க பெறுவீர்கள். அரசு வகை உதவிகள் கிடைப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். நிர்வாகம் சார்ந்த கல்வியில் சில மாற்றங்களும் அனுபவங்களும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் அதிகரிக்கும். நுட்பமான சில விஷயங்களையும் புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகளும் பதவி உயர்வுக்கான சூழல்களும் ஏற்படும். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவது தவிர்ப்பது நன்மை தரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நிமித்தமான புதிய செயல் திட்டங்களும் ஆர்வங்களும் உருவாகும் சூழ்நிலைகளையும் சந்தை நிலவரங்களையும் அறிந்து முதலீடுகளும் மேற்கொள்வது நல்லது. ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும் கால்நடை மற்றும் தேக நலன் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். உணவு தொழில்களில் தரமான பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் வரவினை மேம்படுத்தும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகளும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மூத்த கலைஞர்களிடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். அரசு வகையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களில் ஒரு விதமான மந்த நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு சமூக பணிகளில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஒரு சோர்வு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிக்கல்கள் ஓரளவு குறையும். கட்சி நிமித்தமான மூத்த தலைவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பினை பெற்று தரும். தொண்டர்கள் இடத்தில் விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ள வேண்டும். கவனம் சிம்ம ராசி அன்பர்களே தந்தையிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழல் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். புதிய வீடு மற்றும் மனை அமைவதில் இருந்துவந்த சிக்கல்கள் விலகும். வழிபாடு சனிக்கிழமை தோறும் சிவபெருமானை வழிபட்டு வர இன்னல்கள் ஒரளவு குறையும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.

வரன்கள் அறிமுக மேடை 51

அடிப்படைத் தகவல் MATRI ஐடி : MS25263 பெயர் : ARATHI V வயது :30 பிறந்த தேதி : 23-ஜனவரி-1980 திருமண நிலை : திருமணமாகாதவர் கல்வி : அறிவியலில் முதுகலைப் பட்டம் கல்வி விவரங்கள் : MS(BIO-SCIENCE),B TECH (BIO-TECHNOLOGY தொழில் : தனியார் தொழில் விவரங்கள்: மருத்துவ குறியீட்டு முறை EPI.CHENNAI  ஆண்டு வருமானம் : 600000 மதம் : இந்துசாதி : வன்னியர், மொழி : தமிழ் நட்சத்திரம் : கேட்டை ராசி : விருச்சிகம் உயரம் : 5 அடி 4 அங்குலம் (162 செ.மீ) எடை : 60 கிலோ உடல் வகை : சராசரி உணவு : சைவம் சுயவிவர விளக்கம் நல்ல தோற்றம், நல்ல குணாதிசயம், நல்ல கல்வி, நல்ல குடும்பப் பின்னணி. குடும்ப நிலை : நடுத்தர வர்க்கம் தந்தை பெயர் :எஸ் வடிவேல் தந்தை தொழில் : BHEL(RTD) தாய் பெயர் : இந்து ரோமா தாய் தொழில் : SUPTD CEO அலுவலகம்,வேலூர் கூட்டாளிவிருப்பம் வயது : 30 முதல் 35 வயதுக்கு இடையில் தேடுகிறேன் திருமணமாகாதவர் துணைவர் விருப்பம் மதம் : இந்து சாதி : வன்னியர்கல்வி : முதுநிலை

Basic InformationMATRI ID : MS25263Name :AARTHI V  Age :45Date of Birth :23-January-1980Marital Status :UnmarriedResident Status :CitizenReference by :AdvertisementsCreated by :FranchiseeEducation and OccupationEducation :Masters in ScienceEdu Details :MS(BIO-SCIENCE),B TECH (BIO-TECHNOLOGYOccupation :Private Occupation Details:MEDICAL CODING EPI.CHENNAIEmployed in :Private Annual Income :600000Socio Religious BackgroundReligion :HinduCaste/Division :Vanniyar ,Language :TamilStar :Jyesta/KettaiMoonsign :Vrischika (Scorpio)Physical Status and LifestyleHeight :5ft 4in ( 162cm )Weight :60 kgBody Type:AverageComplexion :Very FairDiet :VegProfile DescriptionGOOD LOOKING,GOOD CHARACTERED,WELL EDUCATED, GOOD FAMILY BACKGROUND.Family Details:Family Values :TraditionalFamily Type :Separate FamilyFamily Status :Middle ClassFather Name :S VADIVELFather Occupation :BHEL(RTD)Mother Name :INDHU ROMAMother Occupation :SUPTD CEO OFFICE, VELLURCONTACT:Mobile:9443385532Partner PreferenceAge :30 Between 35Looking For :UnmarriedComplexion :Fair Partner Preference :Religion :HinduCaste :VanniyarEducation : MASTERS

கடகம் ராசி…!! 2025..!! சனிப்பெயர்ச்சி பலன்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கடக ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து மூன்றாம் பார்வையாக ரிசப ராசியான லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான முயற்சி ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான ரண ரோக ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதினால் பொருளாதார விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். புதிய ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிநாட்டு விஷயங்களில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சேவை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதளவில் சில தெளிவுகள் உருவாகும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதினால் உடன் பிறந்தவர்கள் இடத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். இனம் புரியாத சில சஞ்சலங்கள் விலகும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். இடப்பெயர்ச்சி முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்கள் சாதகமாக முடியும். அக்கம் பக்கம்இருப்பவர்களிடத்தில் ஒத்துழைப்புகள் மேம்படும்.

சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான ரண ரோக ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பணி சார்ந்த சுபசெய்திகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். இழுபறியான சில வழக்குகள் சாதகமாக முடியும். கொடுக்கல் வாங்கலில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். தடைப்பட்ட சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் விலகும்.சனி ராசிக்கு 09ஆம் பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் பலதரப்பட்ட சிந்தனைகளால்மனதளவில் போராட்டங்கள் அதிகரிக்கும். ஆன்மிக விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கால தாமதமாக கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு வர்த்தக விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்வது மேன்மை தரும். தம்பதிகளுக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் படிப்படியாக குறையும். எதிர்காலம் குறித்து சில முதலீடுகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் பக்குவம் பிறக்கும். எதிர்பாராத சில திடீர் வாய்ப்புகள் மூலம் வாழ்வில் மாற்றங்கள் உருவாகும். முன் யோசனை இன்றி செயல்படுவதை தவிர்ப்பது நெருக்கடிகளை குறைக்கும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி அமைதி பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் கூடும். கணவன் மனைவி இடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். குழந்தைகள் இடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் இருந்துவந்த பின்னடைவுகள் படிப்படியாக குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும்.

மாணவர்களுக்கு தடைப்பட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடருவதற்கான சூழல்கள் உருவாகும். அரசு வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விளையாட்டுப் போட்டிகளில் சில அனுபவங்கள் மூலம் மாற்றமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். கல்வி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிதி மற்றும் கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்தோடு செயல்படுவது நல்லது. அரசு பணி சார்ந்த முயற்சிகள் சாதகமாக முடியும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சில திருப்பங்கள் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் கைகூடி வரும் அரசு வகையில் சில உதவிகள் சாதகமாக அமையும். விவசாய பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமும் விளைச்சலும் அதிகரிக்கும். பாசனம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிநாட்டு வணிகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். வர்த்தக முதலீடுகளில் சற்று கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்பட்டு நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் அலட்சியம் இன்றி கவனத்தோடு செயல்படுவது முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளை பெற்று தருவதற்கான சூழல்களை உருவாக்கி தரும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் மனதை விட்டு அகலும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.தன வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல்கள் ஏற்படும். தொண்டர்கள் இடத்தில் புரிதல்கள் அதிகரிக்கும்.வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். நேர்மையான வருமானங்கள் நன்மதிப்பினை பெற்று தரும். நன்மைகள் கடக ராசி அன்பர்களுக்கு சில அனுபவங்கள் மூலம் மனதளவில் புதிய புரிதல்களும் பக்குவங்களும் பிறக்கும்.தன வரவுகளில் இருந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கவனம் கடக ராசி அன்பர்கள் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர்வது நன்மை தரும். வழிபாடு வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர ஆதரவுகள் அதிகரிக்கும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும்.

வரன்கள் அறிமுக மேடை 50

மணமகனின் அடிப்படைத் தகவல் பெயர் : வி பாலாஜி   வயது : 42 பிறந்த தேதி : 13-நவம்பர்-1982 திருமண நிலை : திருமணமாகாதவர் பிறந்த நேரம் : காலை 06:41:00 கல்வி : எம்.எல்.எம் தொழில்: வணிகம் ஆண்டுவருமானம்:1200000 மதம் : இந்து சாதி: முதலியார், பிரிவு:செங்குந்தர் மொழி : தமிழ் நட்சத்திரம் :சித்ரை ராசி : விருச்சிகம் உயரம் : 5 அடி 8 அங்குலம் அல்லது 172 சென்டிமீட்டர் எடை : 70 கிலோ சுயவிவர விளக்கம் நல்ல தோற்றம் மற்றும் நல்ல குணாதிசயம், நல்ல குடும்ப பின்னணியுடன் நன்கு அமைந்தவர், நல்ல கல்வியறிவு பெற்றவர்.  தந்தை பெயர் : பி.எஸ். வாசுதேவன் தாய் பெயர் : வி. நிர்மலா சகோதரர்களின் எண்ணிக்கை : மூத்தவர்-1 சகோதரிகளின் எண்ணிக்கை : மூத்தவர்-2 துணைவர் விருப்பம் வயது : 30 முதல் 36 வயதுக்கு இடையில் மதம் : இந்து சாதி : முதலியர்

படுக்கை அறையில்

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்… திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பல வீடுகளில் கணவன் மனைவி சேர்ந்து உறங்குவது கிடையாது ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே குழந்தைகளுடன் உறங்குவார்கள் இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்… 1. நெருக்கம் குறைகிறது… கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே, இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்… 2. எளிதில் சலித்துப் போய்விடும்… படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும், உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது, 3. உடலுறவில் நாட்டமின்மை… நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடு்ம், 4. வேறு ஒருவர் மீது காதல்/ஆசை உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல்வயப்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்… 5. சண்டைகள் & சந்தேகங்கள்… ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம், எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது… ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும். 6. இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்… அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவர்கள் ஆகவே நண்பர்களே… உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்…

Always4u
× How can I help you?