விழிப்புணர்வோடுவணக்கம்”நண்பர்களே, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை எடுத்துக்கொள்ளுங்கள் 8050 ரூபாய் சரி, ஒரு பவுன் என்றால் 8 கிராம் தானே? அதாவது 64400 ரூபாய் ஆனா இப்ப நாம வாங்குற தங்கம் முழுக்க தங்கமா? இல்ல.அதில 6.5 கிராம் தங்கம், 1.5 கிராம் செம்பு. 6.5 கிராம் தங்கத்தின் விலை 52325 ரூபாய்1.5 கிராம் செம்பு 7.20 ரூபாய் ஆக மொத்தம் 52,332.20 ரூபாய் ஆனா நமக்கு வசூலிக்கப்படுவது 64,400 ரூபாய் இதுல வியாபாரிக்கு லாபம் என்ன தெரியுமா?64,400 ரூபாய்ல் இருந்து 52,332.20 ரூபாய்ஐ கழித்தால் மீதி 12067.80 ரூபாய் ஆனா இதைவிட பெரிதா சொல்றாங்க, சேதாரம்… அதாவது வீணாகச் செய்கிற எடுப்புக்கூலி, வேலைக்கூலி, GST எல்லாம் சேர்த்து 12,075 ரூபாய் அதாவது ஒரே ஒரு பவுனுக்கு வியாபார லாபம் மட்டும் 24,142.80 ரூபாய் இதெல்லாம் கேட்டு தலை சுத்துதா? ஆனா இது தான் உண்மை.இந்த உண்மை தெரிஞ்சு மக்கள் விழிப்புணர்வு அடையுற நாளில்தான் தங்க விலை ஒரே நேரத்தில் நியாயமாகும்! நண்பர்களே, இது உங்கள் வாழ்விலும் உங்கள் பணத்திலும் முக்கியமான விஷயம்.
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தா, லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. மீண்டும் சந்திப்போம் அடுத்த வீடியோவில்… சந்திக்கும் வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி. நன்றி, வணக்கம்!
மீனம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மீன ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து ராசி ஸ்தானமான ஜென்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான முயற்சி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான கர்ம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதினால் உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தனிமை சார்ந்த சிந்தனைகள் மனதளவில் அதிகரிக்கும். ஒப்பந்த விஷயங்களில் பத்திரங்களை படித்து பின்பு கையெழுத்திடவும். விலங்குகள் குறித்த சில அச்சங்களும் தடுமாற்றங்களும் ஏற்படும். சங்கீத துறைகளில் இடைதரகர்களை நம்பி ஈடுபட வேண்டாம். உடற்பயிற்சி துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நன்மை தரும்.சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால்,நண்பர்கள் இடத்தில் விதண்டாவாத பேச்சுகளை தவிர்க்கவும். விரும்பிய செயல்களால் கையிருப்புகள் குறையும்.
புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நன்மையை தரும். அலங்கார விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சட்ட திட்டங்களை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவது தேவையற்ற விரயங்களை குறைக்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான கர்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் வியாபார பணிகளில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்ப்பாலின மக்கள் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். செயல்பாடுகளில் அனுபவங்கள் வெளிப்படும். யோக பயிற்சிகளில் தனிப்பட்ட கவனம் உண்டாகும். வெளிவட்டத்தில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். தொண்டு நிறுவனங்கள் தேவையான ஆவணங்களை கொண்டிருப்பது பயனற்ற விரயத்தை தவிர்க்கும்.சனி ராசிக்கு ஜென்ம பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் ராசியில் சனி சஞ்சாரம் செய்வதால் ஜென்ம சனி ஆகும். மனதளவில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பமும் அச்சமும் உண்டாகும். உறவுகள் இடத்தில் சில புரிதல்கள் ஏற்படும். நண்பர்களாக இருந்தவர்களும் எதிராக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறுகிய வழியில் செல்வத்தை மேம்படுத்துவதற்கான எண்ணங்களும், அதனால் சில விரயங்களும் உண்டாகும்.
தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு புதிய ஊர்களுக்கு செல்வீர்கள். சிந்தனைப் போக்கில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்களும் அலைச்சலும் ஏற்படும். நடந்து முடிந்த நிகழ்வுகளை குறித்து சிந்திப்பதை குறைத்துக் கொள்ளவும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் கூடும். தாய்மாமன் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். துணைவர் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர்வது நன்மை தரும். குறுந்தொழில் விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் சிறு தாமதமும் அலைச்சலும் ஏற்படும்.மாணவர்களுக்கு அடிப்படை கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பேச்சுக்களில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். மேல்நிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் இருந்துவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி எதிர்பார்த்த முடிவுகள் ற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் சாதகமாக முடியும். நிர்வாகம் தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த கெடுபிடியான சூழல்கள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பணி சார்ந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வதில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுக்கான சூழல்கள் உருவாகும். வரி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சில மாறுபட்ட அனுபவங்களும் புதிய பக்குவமும் பிறக்கும். சந்தை நிலவரங்கள் மூலம் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவசாயம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். இருப்பினும் இலாபத்திலும் வரவுகளிலும் தடுமாற்றம் ஏற்படாது. கால்நடைகள் மூலம் ஆதாயத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களையும், கருத்துக்களை கூறுவதையும் தவிர்ப்பது நன்மை தரும். ஆன்மீக வியாபார விஷயங்களில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
இதுவரை தடைப்பட்டு வந்த தன வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். எதிர்பாலின மக்கள் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். வழக்கு விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் நீங்கி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், மாறுபட்ட அனுபவங்களும் கிடைக்கும். பேச்சுக்களில் நினைத்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக தடையாக இருந்தவர்களை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கட்சி உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். பழைய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான சூழல்கள் சாதகமாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். நன்மைகள் மீன ராசி அன்பர்களே! இதுவரை தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் விலகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகளும் சூழலும் உருவாகும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கவனம் மீன ராசி அன்பர்களே! புதிய துறை மற்றும் அறிமுகம் இல்லாத சில பணிகளை மேற்கொள்ளும் போது ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும்.
நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் எண்ணங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். வியாபார விஷயங்களில் கணக்கு வழக்குகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வழிபாடு குச்சானூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபட்டு வர மனதளவில் தெளிவுகள் பிறக்கும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி நன்றி வணக்கம்
பால் போல வெந்நிறத்தில் சிலரது சிறுநீர் இருப்பது ஏன்? சிறுநீரின் 6 நிறங்களும் காரணங்களும்… நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி சிறுநீரை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள்,ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.அப்படி அல்லாமல் சிவப்பு உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான நிறங்களில் இருப்பது ஆபத்தின் அறிகுறி என்கிறார், சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்.தீவிர பிரச்னைகளை சிறுநீரின் நிறம் உணர்த்தினாலும், நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை பொருத்தும் அதன் நிறம் சில சமயங்களில் அசாதாரணமானதாக இருக்கிறது. குறிப்பாக, நாம் அருந்தும் தண்ணீரை பொருத்தும் அதன் நிறம் மாறுபடும். 1. சிவப்பு நிறம், சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுவது என்பது பெரும்பாலும் ஆபத்தின் அறிகுறியாகத்தான் இருக்கும். சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது என்றால் அது ரத்தத்தைத் தான் பெரும்பாலும் குறிக்கும். சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுவது, சிறுநீரக புற்றுநோய், சிறுநீரகக் கல் ஆகியவற்றின் அறிகுறியாகும்.எனவே, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறினால் அதனை அவசர அழைப்பாகக் கருதி உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் வரும்போது, தண்ணீர் குடித்த பின்னர் சாதாரணமாக சிறுநீர் வருகிறதென நினைத்து அப்படியே விட்டுவிடக் கூடாது.எனினும், பீட்ரூட், பிளாக் பெர்ரி போன்றவற்றை உட்கொண்டாலும் சில சமயங்களில் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது உண்டு. அதேபோன்று, விபத்துகளில் சிக்கியவர்களுக்கும் சில சமயங்களில் சிவப்பு நிற சிறுநீர் வெளியேறலாம். 2. அடர் மஞ்சள் நிறம் மற்றும் ஆரஞ்சு நிறம் வெவ்வேறு அடர்த்தியில் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது பல நேரங்களில் சாதாரணமானதுதான். என்றாலும், அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது அதிகப்படியான நீரிழப்பை குறிக்கும். நீரிழப்பை அதாவது dehydration னை கண்டுகொள்ளாமல் இருந்தால், சிறுநீர் எரிச்சலுடன் வெளியேறும். உடற்பயிற்சி, அதிகப்படியான வேலை, வெப்பமான பகுதியில் வாழ்தல் போன்ற காரணங்களால் அதிகமான நீரிழப்பு ஏற்படும்.நீரிழப்பை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே சிறுநீரக கற்கள் தோன்றும்.மேலும், பைரிடியம், ஃபெனாசெட்டின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போதும் சில சமயங்களில் ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.காசநோய்க்கு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம். உடலுக்குத் தேவையான நீரை எடுத்துக்கொள்ளும் போது மீண்டும் வெளிரிய மஞ்சள் நிறத்துடன் சாதாரணமாக சிறுநீர் வெளியேறும். இதன்மூலம் நீரிழப்பைத் தடுக்கலாம்.தேனின் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்பதை உணர்த்துவதாக, அமெரிக்கன் யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது. 3.பால் போன்ற வெண்மை நிறம் அதிகப்படியான கொழுப்புடன் கூடிய பால் போன்ற வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, யானைக்கால் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வெளியேறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.அதேபோன்று, துர்நாற்றத்துடன், தெளிவற்ற பால் போன்ற வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறும். அப்படி வெளியேறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். அதேபோன்று, துர்நாற்றத்துடன், தெளிவற்ற வெள்ளை நிறத்துடன் சிறுநீர் வெளியேறினால், ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இ-கோலி பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ் தொற்றை இது குறிக்கிறது.குறிப்பாக, அது சிறுநீர்ப்பாதை தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். 4. காபி நிறம் மற்றும் கருப்பு நிறம் காபி நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அது, யூரோபிலினோஜென் எனப்படும் மருத்துவ நிலையை குறிக்கும். இது, கல்லீரல் சம்பந்தமான நோய்களின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஃபாவா பீன்ஸ் எனப்படும் ஒருவகை பீன்ஸ்-ஐ அதிகப்படியாக உண்டாலும் இப்படி காபி நிறத்தில் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு.மலேரியாவுக்கு எடுத்துக்கொள்ளப்படும் குளோரோகுயின், பிரைமாகுயின் போன்ற மாத்திரைகளாலும் சில ஆண்டிபயாடிக் மருந்துகளாலும் காபி நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.காபி நிறம் கலந்த கருப்பு நிறமாக சிறுநீர் வெளியேறுவது, மூலநோய் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.இவைதவிர, மிக அரிதாக, அசாதாரண வண்ணங்களிலும் சிறுநீர் வெளியேறுவதுண்டு. அவை மிக அரிதானது எனக்கூறும் மருத்துவர்கள், அவை அதிக ஆபத்தும் நிறைந்ததல்ல என்கிறார்கள். அவற்றில் சில: 5. இளஞ்சிவப்பு நிறம் ரத்தம் நீர்த்துபோனால் இத்தகைய இளஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பீட்ரூட் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வதாலும் சில சமயங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம். 6. பச்சை நிறம் – நீல நிறம் பச்சை மற்றும் நீல நிறம் சார்ந்த உணவுப்பொருட்களை உண்ணும்போது இம்மாதிரி பச்சை, நீல நிறங்களில் சிறுநீர் வெளியேறுவது அரிதாக நிகழ்கிறது. அந்த உணவுப்பொருட்களை அதிகளவில் உட்கொள்ளும்போது அவ்வாறு வெளியேறலாம். பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம் என அமெரிக்க யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது.இவை தவிர அதிகப்படியான செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும்போது, சிறுநீர் பச்சை அல்லது நீல நிறத்தில் வெளியேறலாம் என, அமெரிக்கன் யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது. எனினும் இது அரிதாகவே நிகழ்கிறது. இந்த வீடியோ பிடித்து இருந்தால் லைக் பன்னுங்க, சேர் பன்னுங்க, கமன்ட் பன்னுங்க, மற்றும் சப்ஸ்கிரைப்பன்னவும், மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி, நன்றி வணக்கம்,
தினம் ஒரு திருத்தலம் மூன்று கண்களைக் குறிக்கும்.. மூன்று தீபங்கள்.. அருவ வடிவ சிவன்..!! அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்…!! இந்த கோயில் எங்கு உள்ளது? புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு எப்படி செல்வது? புதுக்கோட்டையிலிருந்து சுமார் 48 கிலோ மீட்டர். தொலைவில் ஆவுடையார்கோயில் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கிருந்து இத்திருக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. இந்த கோயிலின் சிறப்புகள், மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இதுவாகும். ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர். மற்ற கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை. சூரிய, சந்திர கிரகணங்களின்போது மற்ற கோயில்களில் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகண நாட்களிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதால் ஆத்மநாதர்” என்ற பெயர் ஏற்பட்டது. வேறென்ன சிறப்பு? இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போன்ற கொடுங்கைகள் அதாவது தாழ்வாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கம்பிகள் இணைக்கப்பட்டு, அதில் ஆணி அடிக்கப்பட்டது போல இவை காட்சியளிக்கின்றது. பெரிய மண்டபத்தில் உள்ள இரண்டு தூண்களில், ஆயிரம் சிறிய தூண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் அம்பாள் கழுத்தில் சங்கிலி, கையில் சுருள் வளையல் அணிந்து, பையுடன் காட்சியளிக்கிறாள். என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது? ஆனித் திருமஞ்சனம் 10 நாட்கள்,மற்றும் மார்கழி திருவாதிரை, ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணி மூலம், முதலான நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது? தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை பாக்கியம், ஆகியவற்றுக்காக இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது? சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி வழங்கியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
பயணிகள் ரயிலை விட மோசமானது…, இந்தியாவின் புதிய வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே தேவையற்ற சாதனையைப் படைத்தது, மக்கள் இந்த ரயிலைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில்… சோதனை ஓட்டங்களில் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். ஆனால் இந்தியாவின் தண்டவாளங்கள் இன்னும் போதுமானதாக இல்லை, எனவே ரயில்கள் பொதுவாக மிகவும் மெதுவாக இயக்கப்படும். கோரக்பூர் மற்றும் பாட்னாவின் பட்லிபுத்ரா நிலையத்திற்கு இடையே இயங்கும் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது வந்தே பாரத் படையில் சமீபத்திய சேர்க்கை என்றாலும், இது ஏற்கனவே தேவையற்ற சாதனையைப் பெற்றுள்ளது, அதாவது இது நாட்டின் மிக மெதுவான வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் கோரக்பூர் மற்றும் பட்லிபுத்ரா இடையேயான 384 கிலோமீட்டர் பயணத்தை 7 மணி நேரத்தில் கடக்கிறது.
அதாவது இதன் சராசரி வேகம் மணிக்கு 54 கிலோ மீட்டர் மட்டுமே. முன்னதாக, மும்பை சி எஸ் எம் டி மற்றும் ஷீர்டி இடையே மணிக்கு 64 கிலோ மீட்டர், வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில் தான் மிகவும் மெதுவான ரயில். கோரக்பூர் பாடலிபுத்ரா வந்தே பாரத் ரயிலுக்கு இதுவரை வரவேற்பு மிகவும் மோசமாக உள்ளது. அதன் இருக்கைகளில் பாதி கூட நிரம்பவில்லை. மற்ற ரயில்களுடன் ஒப்பிடும்போது அதன் மெதுவான வேகம் மற்றும் அதிக டிக்கெட் விலைகள் ஒரு காரணமாக இருக்கலாம். ஏ சி சேர் காரில் ஒரு இருக்கைக்கு ரூபாய். 925, எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ஒரு இருக்கைக்கு ரூபாய். 1820. இந்த ரயில் பட்லிபுத்ராவிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோரக்பூரை அடைகிறது. வழியில், ஹாஜிபூர், முசாபர்பூர், மோதிஹரி, சுகௌலி, பெட்டியா, நர்கடியாகஞ்ச், பகாஹா, மற்றும் கப்தங்கஞ்ச், உள்ளிட்ட பல நிலையங்களில் இது நிற்கிறது. இது சனிக்கிழமை தவிர, வாரத்தின் ஒவ்வொரு நாளும் இயக்கப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயிலை பயணிகள் ஏன் தவிர்க்கிறார்கள்? வேகமான, மலிவான வழி ஏற்கனவே உள்ளது, பட்லிபுத்ரா, லக்னோ எக்ஸ்பிரஸ் அதே பட்லிபுத்ரா-கோரக்பூர் பயணத்தை 4 மணி 55 நிமிடங்களில் கடந்து செல்கிறது மற்றும் ரூபாய். 520 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இது வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படுகிறது, பட்லிபுத்ராவிலிருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு கோரக்பூரை அடைகிறது. மற்றொரு உள்ளூர் ரயிலின் நேரம் சரியில்லை : வந்தே பாரத், பட்லிபுத்ராவிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படுகிறது. 15 நிமிடங்களுக்குப் பிறகு, பாட்னா-ஜெய்நகர் ரயில் புறப்பட்டு ஹாஜிபூர் மற்றும் முசாபர்பூரில் நிற்கிறது. அந்த நகரங்களுக்குச் செல்லும் பயணிகள் மலிவான பாட்னா-ஜெய்நகர் ரயிலைத் தேர்வு செய்கிறார்கள் குறுகிய பயணங்களுக்கு அதிக டிக்கெட் விலைகள். பாதை நிர்வாக சேர்கார் வகுப்பு பட்லிபுத்ரா – ஹாஜிபூர் 21 கிலோ மீட்டர் , ரூபாய். 380ரூபாய். 715பாடலிபுத்ரா – முசாபர்பூர்ரூபாய் 440,ரூபாய். 840, எதிர்பார்த்ததை விட மெதுவாகச் செல்வதாலும், குறைந்த வசதியான நேரத்தில் புறப்படுவதாலும், மற்ற ரயில்களை விட அதிக செலவாகும் என்பதாலும், புதிய வந்தே பாரத் சேவை இந்தப் பாதையில் பயணிகளை ஈர்க்க சிரமப்படுகிறது. வேகமான வந்தே பாரத் ரயில்கள் சோதனை ஓட்டங்களில் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர், வேகத்தை எட்டும்.ஆனால் இந்தியாவின் தண்டவாளங்கள் இன்னும் போதுமானதாக இல்லாததால், ரயில்கள் பொதுவாக மிகவும் மெதுவாக இயக்கப்படுகின்றன. தினசரி சேவைக்காக, அதிகாரிகள் ரயில்களை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்குகிறார்கள். நிறுத்தங்கள் மற்றும் மெதுவான பகுதிகள் காரணமாக, சராசரி வேகம் மணிக்கு 83 கிலோ மீட்டர் ஆகும்.
வந்தே பாரத் ரயில்கள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் I C F R D S O ரயில்வேயின் ஆராய்ச்சி குழு ஆல் வடிவமைக்கப்படுகின்றன. இதுவரை சென்ற வேகமான வழிகள் • புது தில்லி – வாரணாசி பாதை 2019 இல் தொடங்கப்பட்டது: சராசரி வேகம்: மணிக்கு 95 கிலோ மீட்டர். • ராணி கம்லாபதி ஹபீப்கஞ்ச் – ஹஸ்ரத் நிஜாமுதீன் பாதை : சராசரி வேகம்: மணிக்கு 94 கிலோ மீட்டர். முக்கிய செய்திகள் மற்றும் நேரடி செய்தி புதுப்பிப்புகளுக்கு, எங்களை Facebook இல் லைக் செய்யவும் அல்லது you tube, Twitter மற்றும் Instagram இல் எங்களைப் பின்தொடரவும், இந்த வீடியோ பிடித்து இருந்தால் லைக் பன்னுங்க, சேர் பன்னுங்க, கமன்ட் பன்னுங்க, மற்றும் சப்ஸ்கிரைப்பன்னவும், மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி, நன்றி வணக்கம்,
Milton Rapid Electric Kettle” பற்றி எளிய தமிழில்: “Milton Rapid Electric Kettle” பற்றி பேசுறோம்… “நம்ம வீட்லயும், ஆபிஸ்லயும் டீ, காபி, சூடான நீர் வேணும்னா உடனே வைக்க இது ரொம்பவே சூப்பரான கெட்டில். இது 1.8 லிட்டர் தண்ணீரை ஒரே சமயத்தில் சூடாக்கி விடும். அதுக்காக 1500 வாட்ஸ் power இருக்கு. அதனால் அதி சீக்கிரம் வெந்நீரா ஆகிடும். உள்ளே Stainless Steel னால பாதுகாப்பா இருக்கு. Auto cut-off option இருக்கு, தண்ணீர் காய்ந்துடுச்சுனா, தானாகவே power off ஆகும். அதனால பாதுகாப்பும் இருக்கு, current-க்கும் சேமிப்பு. Cool-touch handle இருக்கு, அதான் கையில் பிடிக்க வெப்பம் தெரியாம safe-a எடுக்கலாம். மேலும் ஒரே touch-ல மூடிய திறக்கலாம்னு Single-touch lid lock கூட இருக்கு. Wide mouth என்பதால தண்ணீர் ஊற்றவோ, சுத்தம் செய்வதோ easy-a இருக்கும். இதை வீட்லயும், office-லயும், even travel-லயும், easy-a பயன்படுத்தலாம்.” சுருக்கமாக சொன்னா 1.8 லிட்டர் கொள்ளளவு, 1500 வாட்ஸ், சீக்கிரம் வெந்நீரா ஆகும், Stainless Steel பாதுகாப்பானது, Auto Cut-Off – பாதுகாப்பு, Cool-touch கைப்பிடி, Single-touch மூடிய திறப்பு, Easy clean, Wide mouth,இந்த Kettle பிடித்து இருந்தால் டிஸ்கிர்ப்சனில் உள்ள லிங்கை பயன்படுத்தி வாங்கவும், இந்த வீடியோ பிடித்து இருந்தால் லைக் பன்னுங்க, சேர் பன்னுங்க, கமன்ட் பன்னுங்க, மற்றும் சப்ஸ்கிரைப்பன்னவும், மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள், துரைவேலு கிருஷ்ணசாமி, நன்றி வணக்கம்,
Retro ரெட்ரோ சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ (Retro) திரைப்படம், 2025 மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் கலந்த எதிர்வினைகளை பெற்றுள்ளது. கதை சுருக்கம் பாரிவேல் கண்ணன் சூர்யா, ஒரு கும்பல் தலைவரின் தத்தெடுத்த மகன், தனது கடினமான கடந்தகாலத்தை விட்டு வெளியேறி, தனது காதலியான ருக்மினியுடன் பூஜா ஹெக்டே புதிய வாழ்க்கையை தொடங்க முயல்கிறார். ஆனால், அவரது பயணம், ஒரு பின்விளைவான கலாச்சார குழுவினரால் தடைக்கப்படுகிறது. இந்த கதை, காதல், துரோகம் மற்றும் துரோகத்தின் பின்னணியில் அமைந்துள்ளது. நடிப்பு சூர்யாவின் நடிப்பு, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பூஜா ஹெக்டே, ருக்மினி என்ற கதாபாத்திரத்தில், அவரது நடிப்பும் பாராட்டுக்குரியது. ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நடிகர்கள், தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இசை மற்றும் தொழில்நுட்பம் சந்தோஷ் நாராயணனின் இசை, திரைப்படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கனிமா பாடல், அதன் நடனத்துடன், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, காலத்திற்கும் பொருந்தும் வகையில், திரைப்படத்தின் காட்சிகளை அழகாக காட்டியுள்ளது. விமர்சனம் இந்த திரைப்படம், துவக்கத்தில் வலுவான கதை மற்றும் நடிப்புகளால் ரசிகர்களை ஈர்த்தாலும், இரண்டாம் பாதியில் கதை சீரற்றதாக மாறியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ், பல்வேறு கதாபாத்திரங்களை ஒரே கதையில் இணைக்க முயன்றார், ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. இதனால், திரைப்படம் முழுவதும் ஒரே தாளத்தில் இருக்கவில்லை. இந்த குறைகளை பொருட்படுத்தாமல், சூர்யாவின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பாராட்டுக்குரியது. முடிவுரை ‘ரெட்ரோ’ திரைப்படம், சூர்யாவின் நடிப்புக்கு முக்கியமான திரும்புவதாக இருந்தாலும், கதை மற்றும் இயக்கத்தில் சில குறைகள் உள்ளன. அதனால், இது ஒரு கலந்த விமர்சனங்களை பெற்றது. சூர்யாவின் ரசிகர்கள், அவரது நடிப்பை ரசிப்பார்கள், ஆனால் கதை மற்றும் இயக்கத்தில் சிறிய மாற்றங்கள் இருந்தால், திரைப்படம் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.