
நாம் தூங்கும் போது கனவுகள் வருவது வழக்கம். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவோ இருக்கலாம். நாம் காணும் கனவுக்கும், நமது நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில சமயங்களில், உங்களுக்கு திருமணம் நடப்பதை போலவோ அல்லது உங்க வீட்டில் திருமணம் நடப்பதை போலவோ இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என தெரியாமல் தவித்திருப்போம். ஸ்வப்ன சாஸ்த்திரப்படி, திருமணம் குறித்த கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என இங்கே பார்க்கலாம்.

2 . நீங்கள் திருமணம் செய்வது போல கனவு வந்தால்… கனவில் உங்களுக்கு திருமணம் நடப்பது போல கண்டால், உங்களுக்கு திருமண ஆசை வந்து விட்டது என பொருள். அதுமட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என அர்த்தம். ஒருவேளை, உங்கள் காதலனை நீங்கள் திருமணம் செய்வதை போல கனவு வந்தால், உங்கள் காதல் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லப்போகிறது என கூறப்படுகிறது. மேலும், வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்க போகிறது.
3. திருமண அழைப்பிதழ் பற்றிய கனவு… நீங்கள் திருமண அழைப்பிதழைப் பெறுவது போல் கனவு வந்தால், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம். இது ஒரு நல்ல அறிகுறி, எல்லோரும் உங்களை விரும்புகிறார்கள் என்பதையும் குறிக்கிறது. உங்கள் கனவில், ஒரே ஒருவருக்கு மட்டும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதை போல கனவு வந்தால், நீங்கள் உங்கள் அன்புகூறியவர் ஒருவரை மிஸ் செய்கிறீர்கள் என அர்த்தம்.
4 . திருமண ஆடைகளைப் பற்றிய கனவு… திருமண ஆடை பற்றிய கனவு அசுப அறிகுறியாக பார்க்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படப்போவதாகவும், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை நீங்கள் இழக்க போகிறீர்கள் என்பதை குறிக்கும். எதுவும் நிரந்தரம் அல்ல, அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்.
5 . திருமண ஏற்பாடு குறித்த கனவு… உங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு நடப்பது போல கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றமும், அமைதியும் வரப்போகிறது என அர்த்தம். அது மட்டும் அல்ல, விரைவில் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வரப்போகிறது என்றும் ஸ்வப்ன சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 . திருமண சம்பந்தம் பேசுவது… திருமணத்திற்கு சம்மந்தம் பேசுவதை போல கனவு கண்டால், அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் சந்திக்க இருக்கும் கெட்ட விஷயங்களை எதிர்கொள்ள உங்கள் நண்பன் துணை நிற்பார் என்பதை கூறுகிறது. எனவே, நீங்கள் எதற்கும் பயப்படாமல் இருக்கலாம். ஒரு திருமணத்திற்கு திட்டமிடுவது போல கனவு வந்தாலும் இதே பலன்களை பெறலாம்.
7 . திருமண விருந்து குறித்த கனவு… நீங்கள் ஒரு திருமண விருந்தில் இருப்பது போல கனவு கண்டால், அது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நீங்க ஒரு தீவிர உறவில் இருந்தால், கூடிய சீக்கிரம் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என அர்த்தம். இதுவே, தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்வது போல கனவு கண்டால் அது நல்லது அல்ல. உங்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆனால், அது உங்கள் காதலன்/காதலியுடன் அல்ல என்பதை மனதில் வைக்கவும்.
8 . கோயிலில் திருமணம் செய்வது போல கனவு… ஒரு தேவாலயம், மசூதி அல்லது பிற வழிபாட்டுத் தலங்களில் திருமணம் செய்வது போல கனவு வந்தால், அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே திருமணம் மாணவராக இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையப்போகிறீர்கள் என அர்த்தம். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் லாபகரமான முடிவுகளைப் பெறுவீர்கள். இதுவே வழிப்பாட்டு தளங்களில் வேறு ஒருவர் திருமணம் செய்வதை போல கனவு கண்டால், உங்களுக்கு வெற்றி வரப்போகிறது. ஆனால், அதை அடைய நீங்கள் தொடந்து முயற்சி செய்ய வேண்டும்.

9 . திருமணம் கடற்கரையில் நடப்பதை போல கனவு… ஒரு கடற்கரையில் திருமணம் நடப்பதை போல நீங்கள் கனவு கண்டால், அதிக நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான முன்னறிவிப்பாகும். நீங்களும் உங்கள் கூட்டாளியும் நிதி ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படப்போகிறது என அர்த்தம். அதே நேரத்தில், நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இணக்கமாக இருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.
10 . நண்பருக்கு திருமணம் நடப்பது போல கனவு… உங்கள் நண்பருக்கு திருமணம் நடப்பதை போல கனவு கண்டால், அது சுப அறிகுறியாகும். மற்றவர்களின் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள். நீங்கள் திட்டமிட்டதை நிறைவேற்ற போகிறீர்கள் என கூறப்படுகிறது. உங்கள் நண்பர் திருமணம் செய்து கொள்வதைக் காணும் போது நீங்கள் கனவுகளில் காணும் உணர்வுகள் நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதன் பிரதிபலிப்பாகும்.
11 . உங்க வீட்டில் திருமணம் நடப்பதை போன்ற கனவு… உங்கள் சொந்த வீட்டில் திருமணம் நடப்பது போல கனவு கண்டால், அது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கப்போகிறது என்று அர்த்தம். ஆனால், அது உங்களுக்கு கிடைக்கும் வரை நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் திருமணத்தில் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த வாய்ப்பு சிறந்ததாக இருக்கும், சோகமாக இருந்தால் ஏமாறபோகிறீர்கள் என்று அர்த்தம்.

12 .யாரோ ஒருவருக்கு திருமணம் நடப்பதை போல கனவு… யாரென்றே தெரியாத ஒருவருக்கு திருமணம் நடப்பதை போல நீங்கள் கனவு கண்டால், அது நல்ல சகுனமாகும். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நபர் வரப்போகிறார் அல்லது நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என அர்த்தம். அல்லது, உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு திருமணம் நடக்க போகிறது அல்லது குழந்தை குறித்த நல்ல விஷயங்கள் வரப்போகிறது என்பது அர்த்தம்.