
மீனம் ராசி அன்பர்களே..!! சனிப்பெயர்ச்சி பலன்கள் 29.03.2025 முதல் 23.02.2028 வரை திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் மீன ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இருந்துவந்த சனி பகவான் பெயர்ச்சி அடைந்து ராசி ஸ்தானமான ஜென்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். சனி தான் நின்ற ராசியிலிருந்து, மூன்றாம் பார்வையாக ரிஷப ராசியான முயற்சி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனுசு ராசியான கர்ம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி தன்னுடைய மூன்றாம் பார்வையாக முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதினால் உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். தனிமை சார்ந்த சிந்தனைகள் மனதளவில் அதிகரிக்கும். ஒப்பந்த விஷயங்களில் பத்திரங்களை படித்து பின்பு கையெழுத்திடவும். விலங்குகள் குறித்த சில அச்சங்களும் தடுமாற்றங்களும் ஏற்படும். சங்கீத துறைகளில் இடைதரகர்களை நம்பி ஈடுபட வேண்டாம். உடற்பயிற்சி துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நன்மை தரும்.சனி தன்னுடைய ஏழாம் பார்வையாக கன்னி ராசியான களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால்,நண்பர்கள் இடத்தில் விதண்டாவாத பேச்சுகளை தவிர்க்கவும். விரும்பிய செயல்களால் கையிருப்புகள் குறையும்.

புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நன்மையை தரும். அலங்கார விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சட்ட திட்டங்களை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவது தேவையற்ற விரயங்களை குறைக்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். சனி தன்னுடைய பத்தாம் பார்வையாக தனுசு ராசியான கர்ம ஸ்தானத்தை பார்ப்பதினால் வியாபார பணிகளில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்ப்பாலின மக்கள் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். செயல்பாடுகளில் அனுபவங்கள் வெளிப்படும். யோக பயிற்சிகளில் தனிப்பட்ட கவனம் உண்டாகும். வெளிவட்டத்தில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். தொண்டு நிறுவனங்கள் தேவையான ஆவணங்களை கொண்டிருப்பது பயனற்ற விரயத்தை தவிர்க்கும்.சனி ராசிக்கு ஜென்ம பாவகத்தில் அமர்ந்திருப்பதினால் ராசியில் சனி சஞ்சாரம் செய்வதால் ஜென்ம சனி ஆகும். மனதளவில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பமும் அச்சமும் உண்டாகும். உறவுகள் இடத்தில் சில புரிதல்கள் ஏற்படும். நண்பர்களாக இருந்தவர்களும் எதிராக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறுகிய வழியில் செல்வத்தை மேம்படுத்துவதற்கான எண்ணங்களும், அதனால் சில விரயங்களும் உண்டாகும்.

தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு புதிய ஊர்களுக்கு செல்வீர்கள். சிந்தனைப் போக்கில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்களும் அலைச்சலும் ஏற்படும். நடந்து முடிந்த நிகழ்வுகளை குறித்து சிந்திப்பதை குறைத்துக் கொள்ளவும். குடும்பம் மற்றும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் கூடும். தாய்மாமன் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். துணைவர் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர்வது நன்மை தரும். குறுந்தொழில் விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் சிறு தாமதமும் அலைச்சலும் ஏற்படும்.மாணவர்களுக்கு அடிப்படை கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பேச்சுக்களில் இருந்துவந்த தடுமாற்றங்கள் விலகும். மேல்நிலைக் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டி தேர்வுகளில் இருந்துவந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி எதிர்பார்த்த முடிவுகள் ற்றும் வெளிநாடு சென்று படிப்பது தொடர்பான எண்ணங்கள் சாதகமாக முடியும். நிர்வாகம் தொடர்பான கல்வியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த கெடுபிடியான சூழல்கள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். பணி சார்ந்த நுணுக்கங்களை புரிந்து கொள்வதில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சக ஊழியர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுக்கான சூழல்கள் உருவாகும். வரி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சில மாறுபட்ட அனுபவங்களும் புதிய பக்குவமும் பிறக்கும். சந்தை நிலவரங்கள் மூலம் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விவசாயம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். இருப்பினும் இலாபத்திலும் வரவுகளிலும் தடுமாற்றம் ஏற்படாது. கால்நடைகள் மூலம் ஆதாயத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களையும், கருத்துக்களை கூறுவதையும் தவிர்ப்பது நன்மை தரும். ஆன்மீக வியாபார விஷயங்களில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களது திறமைகளை மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.

இதுவரை தடைப்பட்டு வந்த தன வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். எதிர்பாலின மக்கள் விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். வழக்கு விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் நீங்கி எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், மாறுபட்ட அனுபவங்களும் கிடைக்கும். பேச்சுக்களில் நினைத்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக தடையாக இருந்தவர்களை அறிந்து வெற்றி கொள்வீர்கள். கட்சி உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். பழைய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான சூழல்கள் சாதகமாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். நன்மைகள் மீன ராசி அன்பர்களே! இதுவரை தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழல்கள் விலகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த சாதகமான வாய்ப்புகளும் சூழலும் உருவாகும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கவனம் மீன ராசி அன்பர்களே! புதிய துறை மற்றும் அறிமுகம் இல்லாத சில பணிகளை மேற்கொள்ளும் போது ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும்.

நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட ரகசியங்கள் மற்றும் எண்ணங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். வியாபார விஷயங்களில் கணக்கு வழக்குகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வழிபாடு குச்சானூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபட்டு வர மனதளவில் தெளிவுகள் பிறக்கும். மேற்கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப்பலன்களே. அவரவர்களின் தசாபுத்திக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் உண்டாகும். இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி நன்றி வணக்கம்