சிறுநீரின் 6 நிறங்களும் காரணங்களும்…

பால் போல வெந்நிறத்தில் சிலரது சிறுநீர் இருப்பது ஏன்? சிறுநீரின் 6 நிறங்களும் காரணங்களும்… நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி சிறுநீரை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள்,ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.அப்படி அல்லாமல் சிவப்பு உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான நிறங்களில் இருப்பது ஆபத்தின் அறிகுறி என்கிறார், சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்.தீவிர பிரச்னைகளை சிறுநீரின் நிறம் உணர்த்தினாலும், நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை பொருத்தும் அதன் நிறம் சில சமயங்களில் அசாதாரணமானதாக இருக்கிறது. குறிப்பாக, நாம் அருந்தும் தண்ணீரை பொருத்தும் அதன் நிறம் மாறுபடும். 1. சிவப்பு நிறம், சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுவது என்பது பெரும்பாலும் ஆபத்தின் அறிகுறியாகத்தான் இருக்கும். சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது என்றால் அது ரத்தத்தைத் தான் பெரும்பாலும் குறிக்கும். சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுவது, சிறுநீரக புற்றுநோய், சிறுநீரகக் கல் ஆகியவற்றின் அறிகுறியாகும்.எனவே, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறினால் அதனை அவசர அழைப்பாகக் கருதி உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் வரும்போது, தண்ணீர் குடித்த பின்னர் சாதாரணமாக சிறுநீர் வருகிறதென நினைத்து அப்படியே விட்டுவிடக் கூடாது.எனினும், பீட்ரூட், பிளாக் பெர்ரி போன்றவற்றை உட்கொண்டாலும் சில சமயங்களில் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது உண்டு. அதேபோன்று, விபத்துகளில் சிக்கியவர்களுக்கும் சில சமயங்களில் சிவப்பு நிற சிறுநீர் வெளியேறலாம். 2. அடர் மஞ்சள் நிறம் மற்றும் ஆரஞ்சு நிறம் வெவ்வேறு அடர்த்தியில் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது பல நேரங்களில் சாதாரணமானதுதான். என்றாலும், அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது அதிகப்படியான நீரிழப்பை குறிக்கும். நீரிழப்பை அதாவது dehydration னை கண்டுகொள்ளாமல் இருந்தால், சிறுநீர் எரிச்சலுடன் வெளியேறும். உடற்பயிற்சி, அதிகப்படியான வேலை, வெப்பமான பகுதியில் வாழ்தல் போன்ற காரணங்களால் அதிகமான நீரிழப்பு ஏற்படும்.நீரிழப்பை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே சிறுநீரக கற்கள் தோன்றும்.மேலும், பைரிடியம், ஃபெனாசெட்டின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போதும் சில சமயங்களில் ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.காசநோய்க்கு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம். உடலுக்குத் தேவையான நீரை எடுத்துக்கொள்ளும் போது மீண்டும் வெளிரிய மஞ்சள் நிறத்துடன் சாதாரணமாக சிறுநீர் வெளியேறும். இதன்மூலம் நீரிழப்பைத் தடுக்கலாம்.தேனின் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்பதை உணர்த்துவதாக, அமெரிக்கன் யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது. 3.பால் போன்ற வெண்மை நிறம் அதிகப்படியான கொழுப்புடன் கூடிய பால் போன்ற வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, யானைக்கால் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வெளியேறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.அதேபோன்று, துர்நாற்றத்துடன், தெளிவற்ற பால் போன்ற வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறும். அப்படி வெளியேறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். அதேபோன்று, துர்நாற்றத்துடன், தெளிவற்ற வெள்ளை நிறத்துடன் சிறுநீர் வெளியேறினால், ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இ-கோலி பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ் தொற்றை இது குறிக்கிறது.குறிப்பாக, அது சிறுநீர்ப்பாதை தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். 4. காபி நிறம் மற்றும் கருப்பு நிறம் காபி நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அது, யூரோபிலினோஜென் எனப்படும் மருத்துவ நிலையை குறிக்கும். இது, கல்லீரல் சம்பந்தமான நோய்களின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஃபாவா பீன்ஸ் எனப்படும் ஒருவகை பீன்ஸ்-ஐ அதிகப்படியாக உண்டாலும் இப்படி காபி நிறத்தில் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு.மலேரியாவுக்கு எடுத்துக்கொள்ளப்படும் குளோரோகுயின், பிரைமாகுயின் போன்ற மாத்திரைகளாலும் சில ஆண்டிபயாடிக் மருந்துகளாலும் காபி நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.காபி நிறம் கலந்த கருப்பு நிறமாக சிறுநீர் வெளியேறுவது, மூலநோய் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.இவைதவிர, மிக அரிதாக, அசாதாரண வண்ணங்களிலும் சிறுநீர் வெளியேறுவதுண்டு. அவை மிக அரிதானது எனக்கூறும் மருத்துவர்கள், அவை அதிக ஆபத்தும் நிறைந்ததல்ல என்கிறார்கள். அவற்றில் சில: 5. இளஞ்சிவப்பு நிறம் ரத்தம் நீர்த்துபோனால் இத்தகைய இளஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பீட்ரூட் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வதாலும் சில சமயங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம். 6. பச்சை நிறம் – நீல நிறம் பச்சை மற்றும் நீல நிறம் சார்ந்த உணவுப்பொருட்களை உண்ணும்போது இம்மாதிரி பச்சை, நீல நிறங்களில் சிறுநீர் வெளியேறுவது அரிதாக நிகழ்கிறது. அந்த உணவுப்பொருட்களை அதிகளவில் உட்கொள்ளும்போது அவ்வாறு வெளியேறலாம். பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம் என அமெரிக்க யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது.இவை தவிர அதிகப்படியான செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும்போது, சிறுநீர் பச்சை அல்லது நீல நிறத்தில் வெளியேறலாம் என, அமெரிக்கன் யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது. எனினும் இது அரிதாகவே நிகழ்கிறது. இந்த வீடியோ பிடித்து இருந்தால் லைக் பன்னுங்க, சேர் பன்னுங்க,  கமன்ட் பன்னுங்க, மற்றும் சப்ஸ்கிரைப்பன்னவும், மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி, நன்றி வணக்கம்,

எங்கே, எப்போது, எப்படி முடியும்!!!

தினம் ஒரு குட்டிக்கதை : யாருக்கு விதி?!! எங்கே, எப்போது, எப்படி முடியும்!!! இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்துவந்தாள். ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டு விட்டது. அதை பரிசோதித்த மருத்துவர்இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார். உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,இந்த கிளியை எப்படியாவதுக் காப்பாற்றுங்கள்.கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள். இந்திரன்,கவலைப்படாதே இந்திராணி… நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்…ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டுபிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்.. விஷயத்தைக்கேட்ட பிரம்மா , இந்திரா…. படைப்பது மட்டுமே என்வேலை. உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்…வா … நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக் கொண்டுமஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா. மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது. அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும். வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு. விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான். உயிர்களையெடுக்கும் பொறுப்பை நான்எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாருங்கள் …. நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன். தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு ,பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார். விஷயம் முழுவதையும் கேட்ட அவர் ,ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,எந்தசூழ்நிலையில் ,என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம். அந்த ஓலை அறுந்து விழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாருங்கள் அந்த அறைக்குச்சென்றுகிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார். இப்படியாகஇந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர். அது அந்த கிளியின் ஆயுள் ஓலை. அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்… அதில்,,, இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோஅப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது. இதுதான் விதி…! விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?! யாருக்கு விதி?!!எங்கே, எப்போது, எப்படி முடியும்!!!என்பது எழுதினவனுக்கே தெரியாது என்பது தான் உண்மை?!      இந்த வீடியோ பிடித்து இருந்தால் லைக் பன்னுங்க, சேர் பன்னுங்க,  கமன்ட் பன்னுங்க, மற்றும் சப்ஸ்கிரைப்பன்னவும், மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் துரைவேலு கிருஷ்ணசாமி, நன்றி வணக்கம்,

*எண்ணங்களின் மாறுபாடு – புரிந்து கொள்வது எப்படி

_*Motivation*__*எண்ணங்களின் மாறுபாடு – புரிந்து கொள்வது எப்படி?*_ * 🌹🌹🌹தனித்து இயங்குவதை விட நம்மை புரிந்து கொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது எளிதான வெற்றியை பெற்று தரும். ஆனால் நம்மை எல்லோருக்கும் பிடித்து விடுமா? ஒவ்வொருவரின் குணநலன்களும் வெவ்வேறு என்ற நிலையில் முரண்பாடுகள் எழுவது இயல்பானது. ஒரே வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கூட பிடிக்கும், பிடிக்காது என்ற எண்ணம் இருக்கக் கூடும். * அனைவரும் விரும்புபவராக இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று என்றாலும் சில வழிமுறைகளைப் பின்பற்றி பெரும்பாலானவர்களுக்கு விரும்பத்தக்கவராக இருக்க நிச்சயம் முடியும், நாம் மனது வைத்தால். சரி எப்படி இருந்தால் மற்றவர்களுக்கு பிடிக்கும்? இங்கு உங்களுக்காகவே சில டிப்ஸ். * எதிராளியின் செயல் குறித்த தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் எதிராளியை குறைத்துப் பேசும் போது உங்களுடைய மதிப்பும் குறைந்து நீங்கள் பேசும் வார்த்தைகள் வலிமையற்று விடும். * நேரத்தை வீணடிக்கும் சர்ச்சைகளில் ஈடுபடாதீர்கள். எதிராளி விவாதிக்கும் நோக்கில் கேள்விகளை வீசினாலும் நகர்ந்து விடுங்கள். *  ஒரு செயலால் கோபம் ஏற்படும் போது அதை எதிராளி மீது காட்டாதீர்கள். அவர் உங்களை கோபப்படுத்தினாலும் நிதானமாக இருங்கள். இல்லையெனில் அந்த இடத்தை விட்டு விரைந்து வெளியேறி விடுங்கள்.* எதைப் பற்றி பேசினாலும் அல்லது யாரைப் பற்றி பேசினாலும் அந்த விஷயம் மற்றும் அவர்களைப் பற்றி ஒரளவு தெரிந்து கொண்ட பின் பேசுங்கள். தவறான தகவல்கள் உங்கள் மீதான நம்பிக்கையைக் குலைத்து விடும். * நல்ல விளைவு தரும் உரையாடலில் முரண்பாடுகளாக தோன்றுவது போல் தோன்றினால் பேச்சுப்பொருளை மாற்றுங்கள். உரையாடலை ஒருபோதும் தேவையற்ற விவாதம் ஆக்கி விடாதீர்கள். * தகுதி, அந்தஸ்து பார்த்து பேசாதீர்கள். அனைவரிடமும் பாரபட்சம் காட்டாத குணத்துடன் சரிசமமாக பழகுங்கள். சிலரை உயர்த்திப் பேசும் போதும் பழகும் போதும் மற்றவர்களுக்கு நீங்கள் போலியானவராக தெரிவீர்கள். * அன்பும் கண்டிப்பும் கலந்தவராக இருங்கள். எது உண்மையானதோ எது நேர்மையானதோ அதை ஆதரிங்கள். சில சமயங்களில் நேர்மை அடுத்தவருக்கு கசப்பாக இருந்தாலும் அதுவே உங்கள் மதிப்பு உயரக் காரணமாகும். * நன்றாக கவனித்துப் பாருங்கள். சிறந்த தலைவராக இருப்பவர்கள் தமது பணியாளர்களுக்கு நல்லது நடக்க தங்கள் சொந்த நலனை கூட விட்டுக் கொடுக்க தயங்குவதில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் என்றும் தாழ்வதில்லை. * எதைச் சொல்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்லுங்கள். முடியாததை சொல்லி தர்ம சங்கடத்திற்கு ஆளாகாமல் தவிர்ப்பது நல்லது. * நிறைவேறாத போலி நம்பிக்கைகளை ஏற்படுத்தாதீர்கள். போலி வாக்குறுதிகளின் சாயம் வெளுத்தால் பின்விளைவுகள் உங்களுக்கே. * புறம் பேசுபவர்களை விட்டு விலகி விடுங்கள். அடுத்தவரின் விஷயங்களைப் பற்றி உங்களிடம் சொல்பவர்கள் அடுத்தவரிடம் உங்களைப் பற்றி சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? * அதேபோல் மற்றவரின் செயல்களை கண்காணித்து விமர்சிப்பதும், அவர்களது சொந்த விஷயங்களில் தலையிடுவதும் அறவே கூடாது. – இப்படி பல விஷயங்களில் கவனமாக இருந்தால் நிச்சயம் மற்றவர்கள் நம்மை விரும்பி ஆதரவு தருவார்கள்🌹🌹🌹

படுக்கை அறையில்

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் உண்டாகும் 6 தீய விளைவுகள்… திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள் ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு பிறகு பல வீடுகளில் கணவன் மனைவி சேர்ந்து உறங்குவது கிடையாது ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே குழந்தைகளுடன் உறங்குவார்கள் இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்… 1. நெருக்கம் குறைகிறது… கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் மனசு விட்டு பேச அல்லது காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கையறை நேரம்தான். இந்த நேரத்தை உறவை மேலும் வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் நண்பர்களே, இங்கு இருவேறு துருவங்கள் போல் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து இருப்பது கணவன் மனைவி உறவுக்கு அவ்வளவாக நல்லதல்ல என பாலியல் மற்றும் மனத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்… 2. எளிதில் சலித்துப் போய்விடும்… படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் சலித்துவிடும், உங்கள் மனைவியோ, அல்லது கணவனோ ஆசையாக உங்களை தொடும்போது கூட உங்களுக்கு பெரிதாக எந்தவொரு உணர்ச்சியும் ஏற்படாது, 3. உடலுறவில் நாட்டமின்மை… நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாகவே கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட அவ்வளவு பெரிதாக நாட்டமில்லாமல் போய்விடு்ம், 4. வேறு ஒருவர் மீது காதல்/ஆசை உங்களின் நெருக்கம் குறைவதால், நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறொருவர் மீது காதல்வயப்பட அதிக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் மனைவியுடன் அல்லது கணவனுடன் தனிமையில் சேர்ந்து அமர்ந்து கரம் பிடித்து பேசுவதை கூட நீங்கள் விரும்பமாட்டீர்கள்… 5. சண்டைகள் & சந்தேகங்கள்… ஒரு குடும்பத்தில் சந்தேகம் முன் வாசல் வழியாக வந்தால் சந்தோஷம் பின் வாசல் வழியாக ஓடிவிடுமாம், எந்த சூழ்நிலையிலும் சந்தேகம் என்பது புருசன் பொண்டாட்டி வாழ்க்கையில் கூடவே கூடாது… ஒருவருக்கொருவர் விளையாடுவது, மற்றும் சிறுசிறு காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும்போதுதான் அடிக்கடி சண்டைகள் / ஏச்சுப் பேச்சுகள் கணவன் மனைவிக்குள் வரும். 6. இந்நிலை இப்படியே நீடித்தால் இறுதியாக வெறுப்புதான் கிட்டும்… அதாவது உங்களது கவனம் வேறொரு நபர் மீது திசை திரும்பிவிட்டால வேறொருவரை நேசிக்க நீங்கள் ஆரம்பித்துவிட்டால் உங்களது துணையை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க ஆரம்பித்துவிடுவர்கள் ஆகவே நண்பர்களே… உங்களை நம்பி கரம் பிடித்தவரை காதலியுங்கள், துணையை அணைத்து துயரம் தவிர்த்திடுங்கள்…

குஷியில் அரசு ஊழியர்கள்,

குஷியில் அரசு ஊழியர்கள், ஏப்ரல் 1 முதல் UPS: 50% ஓய்வூதியத்துடன் இதுவும் கிடைக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதில் கிடைக்கும் பிரத்யேக நன்மைகள் என்ன? முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம். • ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?  • மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்? • எவ்வளவு காலம் பணிபுரிந்த பின்ஓய்வூதியம் கிடைக்கும்? Unified Pension Scheme: ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்’ சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. ​​ இந்த ஓய்வூதியத் திட்டம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது 2025  ஏப்ரல்  1 முதல் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு  மாற்றாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை  மீண்டும் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை ஆகிய இரு ஓய்வூதியத் திட்டங்களிலும் உள்ள முக்கிய அமசங்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் கடைசி சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது UPS மூலமும் ஊழியர்களுக்கும் அதே சலுகைகள் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு இருக்கும்? இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். அரசாங்கமும் 18.5 சதவீதத்தை பங்களிக்கும். இது தவிர, UPS இன் கீழ் ஒரு தனி இருப்பு நிதியும் அமைக்கப்படும். இதில் அரசாங்கம் கூடுதலாக 8.5 சதவீத பங்களிப்பை வழங்கும். மத்திய அரசு ஊழியர்களின் கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். Pension  எவ்வளவு காலம் பணிபுரிந்த பின் ஓய்வூதியம் கிடைக்கும்? இந்தத் திட்டத்தின் கீழ், 10 முதல் 25 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு விகிதாசார ஓய்வூதியம் வழங்கப்படும். துரதிர்ஷ்டவசமாக ஒரு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் வழங்கப்படும். இது தவிர, பணியாளரின் ஓய்வு நேரத்தில் பணிக்கொடையுடன் ஒரு மொத்தத் தொகையும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூபாய் 10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Pensioners  UPS செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களும் சலுகைகளைப் பெறலாம் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூபாய் 10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு ஓய்வு பெறும் ஊழியர்கள் மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய வயதிலிருந்து ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாவார்கள். இது தவிர, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களும் இதன் சலுகைகளைப் பெறலாம். பொது வருங்கால வைப்பு நிதியின் PPF) வட்டி விகிதங்களின் அடிப்படையில் கணக்கிட்டு, முந்தைய காலகட்டத்தின் நிலுவைத் தொகையுடன் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!  உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது  youtube channel ஐ பதிவிறக்குங்கள்!!

2025 உலக விஸ்கி விருதுகள்

2025 உலக விஸ்கி விருதுகளில் பாராட்டுகளைப் பெற்ற 1,000–30,000 ரூபாய்க்கு இடைப்பட்ட 15 இந்திய விஸ்கிகள் – அம்ருத் முதல் இந்திரி வரை உலக விஸ்கி விருதுகள் 2025 (உலகின் பிற பகுதிகளில்) விழாவில் 15 உள்நாட்டுத் தேர்வுகள் பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம், இந்திய விஸ்கி உலக அரங்கில் தொடர்ந்து பிரகாசிக்கிறது. அம்ருத், இந்திரி மற்றும் பால் ஜான் முதல் லெகசி மற்றும் ஸ்டெர்லிங் ரிசர்வ் வரை, இந்த விருது பெற்ற வெளிப்பாடுகள் ரூ.1,000 முதல் ரூ.30,000 வரை உள்ளன, இது பிரீமியம் விஸ்கி கைவினைத்திறனில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை நிரூபிக்கிறது. இந்தியர்களின் உலகளாவிய ஈர்ப்புவிஸ்கிதொடர்ந்து உயர்ந்து வருகிறது, பல உள்நாட்டு லேபிள்கள் மதிப்புமிக்க உலக விஸ்கி விருதுகள் 2025 (உலகின் பிற்பகுதி) விழாவில் உயர் விருதுகளைப் பெற்றுள்ளன. இந்த வருடாந்திர நிகழ்வு உலகளவில் விஸ்கியின் சிறப்பைக் கொண்டாடுகிறது, நிறுவப்பட்ட டிஸ்டில்லரிகள் மற்றும் வளர்ந்து வரும் சுயாதீன உற்பத்தியாளர்கள் இரண்டையும் அங்கீகரிக்கிறது. ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் (RoW) பிரிவின் வெற்றியாளர்கள் இப்போது மார்ச் மாதம் அறிவிக்கப்படும் இறுதி “உலகின் சிறந்த” பட்டத்திற்காக ஸ்காட்லாந்து, அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற விஸ்கி பவர்ஹவுஸ்களின் சகாக்களுடன் போட்டியிடுவார்கள். இறுதிப் போட்டிக்கு முன், இந்த ஆண்டு ரூ.1,000 முதல் ரூ.30,000 வரை விலையில் விற்பனையான 15 இந்திய விஸ்கி தேர்வுகளைப் பார்ப்போம். அம்ருத் டிஸ்டில்லரீஸ் அம்ருத் பீட்டட் சிங்கிள் மால்ட் கேஸ்க் வலிமை (தங்கம்) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.7,500 முதல் ரூ.8,500 வரை போர்ட் எலனில் மால்ட் மற்றும் பீட் செய்யப்பட்ட ஸ்காட்டிஷ் பார்லியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த பீப்பாய்-வலிமை கொண்ட விஸ்கி, வெண்ணிலா, கேரமல், ஓக், பழம், புகை மற்றும் மசாலா ஆகியவற்றின் சுவை குறிப்புகளுடன் ஒரு வலுவான வெளிப்பாடாகும்.

அம்ருத் பகீரா, அம்ருத் ஃபியூஷன் சிங்கிள் மால்ட், அம்ருத் சிங்கிள் மால்ட் & அம்ருத் சிங்கிள் மால்ட் காஸ்க் வலிமை (வெள்ளி) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) • அம்ருத் பகீரா: டார்க் சாக்லேட், மிட்டாய் பழங்கள் மற்றும் ஓக் ஆகியவற்றால் நிறைந்தது. (ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரை) • அம்ருத் ஃப்யூஷன்: சிட்ரஸ் பழங்கள், மசாலாப் பொருட்கள், கிரீமி இனிப்பு, பீட், காபி மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றின் சமநிலை. (ரூ. 4,500 முதல் ரூ. 5,500 வரை) • அம்ருத் சிங்கிள் மால்ட்: தேன், மசாலா, பாதாமி மற்றும் ரம் ஆகியவற்றின் இணக்கமான கலவை. (ரூ. 3,500 முதல் ரூ. 4,500 வரை) • அம்ருத் சிங்கிள் மால்ட் கேஸ்க் வலிமை: பிஸ்கட், பழம், சிட்ரஸ், மால்ட் மற்றும் டாஃபி குறிப்புகள். (ரூ. 6,000 முதல் ரூ. 7,500 வரை) இந்திரி-ட்ரினி விஸ்கிகள் இந்திரி ரீஃபில் ஒலோரோசோ ஷெர்ரி கேஸ்க் சிங்கிள் கேஸ்க் 03 (தங்கம்) வகை: ஒற்றை காஸ்க் ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை 58.5% ABV இல் பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த விஸ்கி, ஷெர்ரி பீப்பாய் செல்வாக்கிலிருந்து உலர்ந்த பழங்கள், டார்க் சாக்லேட், டாஃபி மற்றும் சூடான மசாலா ஆகியவற்றின் வளமான சமநிலையை வழங்குகிறது. இந்திரி எக்ஸ் சாட்டர்ன் ஒயின் கேஸ்க் சிங்கிள் கேஸ்க் 47050 (வெள்ளி) வகை: ஒற்றை காஸ்க் ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சிட்ரஸ் பழத்தோல் அடுக்குகள், வெண்ணிலா மற்றும் சிறிது ஓக் சாறுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட விஸ்கி, மது போன்ற இனிப்புடன் நிறைவுற்றது. இந்திரி ஹவுஸ் ஆஃப் பிளாக் & ஹவுஸ் ஆஃப் கிரீன் (வெள்ளி & வெண்கலம்) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஹவுஸ் ஆஃப் தி டிராகன் ரசிகர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த வரையறுக்கப்பட்ட பதிப்புகள் தனித்துவமான சுவை சுயவிவரங்களை வழங்குகின்றன: • ஹவுஸ் ஆஃப் பிளாக்: இனிப்பு சாக்லேட், டாஃபி மற்றும் வெண்ணிலாவின் குறிப்புகள். • ஹவுஸ் ஆஃப் கிரீன்: நட்டு நிறத்துடன் கூடிய பழம் நிறைந்த, மலர் சுவை கொண்ட விஸ்கி. இந்திரி 2024 தீபாவளி கலெக்டர் பதிப்பு (வெள்ளி) வகை: சிறிய தொகுதி ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை 50% ABV இல் பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்த பண்டிகை பதிப்பு, பீட் செய்யப்பட்ட ஆறு-வரிசை பார்லியிலிருந்து வடிவமைக்கப்பட்டு, பாரம்பரிய செப்பு பானை ஸ்டில்களில் காய்ச்சி வடிக்கப்படுகிறது, இதில் லேசான பழங்கள், மென்மையான மலர்கள் மற்றும் நுட்பமான மசாலாப் பொருட்கள் உள்ளன.

இந்திரி நிறுவனர் ரிசர்வ் ஒயின் கேஸ்க் 11 வயது (தங்கம்) வகை: ஒற்றை மால்ட் (12 வயது & அதற்குக் குறைவானது) விலை: ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை 11 வருடங்கள் பழமையான இந்த விஸ்கி, கருப்பட்டி, நெல்லிக்காய், அன்னாசி மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றின் துடிப்பான கலவையைக் காட்டுகிறது. கலந்த இந்திய விஸ்கிகள் லெகசி பிரீமியம் கலந்த விஸ்கி (தங்கம்) வகை: கலப்பு (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை தேன், உலர்ந்த பழங்கள் மற்றும் சிறிது காரச் சுவையுடன் கூடிய மென்மையான, நன்கு உருண்டையான விஸ்கி. ஸ்டெர்லிங் ரிசர்வ் B10 பிரீமியம் பிளெண்டட் & ரவுலட் அன்பீடட் பிரீமியம் (வெண்கலம்) வகை: கலப்பு (வயது அறிக்கை இல்லை) • ஸ்டெர்லிங் ரிசர்வ் பி10: தேன், வெண்ணிலா, ஓக் மற்றும் பெர்ரி. (ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரை) • ரவுலட் அன்பீட்டட் பிரீமியம்: பழம், தேன் மற்றும் மால்ட் ஆகியவற்றின் இனிப்பு கலவை. (ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை) பால் ஜான் விஸ்கி பால் ஜான் சிங்கிள் மால்ட் விஸ்கி மதேரா (வெண்கலம்) வகை: ஒற்றை மால்ட் (வயது அறிக்கை இல்லை) விலை: ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை ஆரஞ்சு தோல், வெண்ணிலா மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றின் ஆழமான குறிப்புகளுடன், கிறிஸ்துமஸ் கேக்கை நினைவூட்டும் ஒரு பணக்கார, வரையறுக்கப்பட்ட பதிப்பு விஸ்கி. உலக அரங்கில் இந்திய விஸ்கியின் எழுச்சி இந்திய விஸ்கி தொடர்ந்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது, பிரீமியம் எக்ஸ்பிரஷன்கள் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் சில சிறந்தவற்றுடன் போட்டியிடுகின்றன. இந்த ஆண்டு வேர்ல்ட் விஸ்கிஸ் விருதுகள் ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் பிரிவின் வெற்றியாளர்கள் புதுமை, பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் துடிப்பான கலவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்திய டிஸ்டில்லரிகள் விஸ்கி தயாரிப்பின் எல்லைகளைத் தாண்டிச் செல்வதால், ஆர்வலர்கள் வரும் ஆண்டுகளில் உலக அரங்கில் இன்னும் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் “உலகின் சிறந்த” இறுதி வெற்றியாளர்களுக்காக காத்திருங்கள்!

துயர்கண்டு துவண்டு விடாதீர்கள்.

துயர்கண்டு துவண்டு விடாதீர்கள். வாழ்க்கை எதிர்மறைகளைக் கொண்டது.பிச்சைக்காரன் அமைதியுடன் பாதுகாப்பற்று உறங்குவான். பேரரசன் பாதுகாப்புடன் இருப்பான் ஆனால் அமைதியாக உறங்க மாட்டான். உனது வாழ்க்கையை மகிழ்ச்சிகரமான, அமைதியானதாக, மௌனமானதாக, சந்தோஷமானதாக எது ஆக்குகிறது என்று மட்டும் கண்டுபிடித்துக்கொள். சாதாரணக் கணக்குதான் உனது வாழ்க்கை ஒரு புனிதமான வாழ்க்கையாக ஆக்கும். என்னைப் பொறுத்த வரையில் நீ மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நீ ஒரு புனிதமான மனிதன். எவரையும் எக்கணமும். எதற்காகவும் சார்ந்திருக்காதே. வெளிச்சம் இல்லையேல். நிழல் கூட துணைக்கு வராது. பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது. கஷ்டங்கள் கதவைத் தட்டத்தான் செய்யும். அவற்றைத் திருப்பி அனுப்புவதும். அல்லது அழைத்து உள்ளே அமர வைத்து அழகு பார்பதும் உங்களிடம் தான் உள்ளது. சில நேரம் உடைந்து போவது கூடபுதிய மாற்றத்திற்காகத் தான், கவலையை விட்டொழியுங்கள். புயலால் புல்லை வளைக்கத்தான் முடியும் ஒடிக்க முடியாது. துயர்கண்டு துவண்டு விடாதீர்கள். விழிப்பதற்கே வாழ்க்கை, வெல்வதற்கே தோல்வி. எழுவதற்கே வீழ்ச்சி, வாழ்வதற்கே வாழ்க்கை. வாழ்த்தினாலும் தாழ்த்தினாலும்     சிரித்து கொண்டே இருங்கள் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும். தேவைகள், எதிர்பார்ப்புகள், இவைகளைக் குறைத்துக் கொண்டால், வாழ்க்கையில் மன அமைதியும், நிம்மதியும் நிச்சயமாகக் கிடைக்கும். பிறர்க்கு நலம் கொடுத்து, அதனால் அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் நீ என்றால் நீ கடவுள்! கொடுப்பவர் இறைவன் என்பதை உணர்ந்தாலே, கிடைப்பது அனைத்தும் உயர்வாகத் தெரியும்.

இந்தியாவில் 2,600 ஆண்டுகள் பழமையான டெரகோட்டா பைப்லைன்கள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் 2,600 ஆண்டுகள் பழமையான டெரகோட்டா பைப்லைனை கண்டுபிடித்துள்ளனர் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு செழித்தோங்கிய நாகரிகத்தின் மேம்பட்ட நீர் மேலாண்மை நடைமுறைகளை எடுத்துக்காட்டும் வகையில், இந்தியாவின் தமிழ்நாட்டின் பழங்காலத் தளமான கீழடியில் தொல்பொருள் ஆய்வுகளின் சமீபத்திய கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் டெரகோட்டா பைப்லைனைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் வசித்த சங்க கால மக்கள் கல்வியறிவு மட்டுமின்றி நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பொறியியலில் அதிக திறன் பெற்றவர்கள் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு வளர்ந்து வரும் சான்றுகளை சேர்க்கிறது. மதுரையிலிருந்து தென்கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழடி, முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் (ASI) கே. அமர்நாத் ராமகிருஷ்ணனால் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்து, சங்க காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு மையப் புள்ளியாக இது மாறியுள்ளது, இது கிமு 300 முதல் கிபி 300 வரை நீடித்தது. கடந்த தசாப்தத்தில், 20,000 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இது செங்கல் தயாரிப்பு, மணி வேலைப்பாடு மற்றும் டெரகோட்டா கைவினைத்திறன் உட்பட அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு அதிநவீன சமூகத்தை வெளிப்படுத்துகிறது. கீழடியில் மிக சமீபத்திய கண்டுபிடிப்பு, உருளை வடிவ டெரகோட்டா பைப்லைன், குறிப்பாக குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையின் (டி என் எஸ் டி ஏ) அதிகாரியின் கூற்றுப்படி, இந்த குழாய் ஆறு கவனமாக வடிவமைக்கப்பட்ட உருளை உறைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் 36 சென்டிமீட்டர் நீளமும் 18 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இந்த உறைகள் மிக நுணுக்கமாக சீரமைக்கப்பட்டு, ஒன்றாகப் பொருத்தப்பட்டு, 174 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு தொடர்ச்சியான பைப்லைனை உருவாக்கி, ஒரு அகழியிலிருந்து மற்றொரு அகழிக்கு ஊடுருவிச் செல்லும். இந்த குழாய் பாதுகாக்கப்பட்ட நீரை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது, இது அக்காலத்தின் மேம்பட்ட ஹைட்ராலிக் பொறியியல் திறன்களுக்கு சான்றாகும். கீழடியில் வசிப்பவர்கள் திறமையான நீர் மேலாண்மைத் திறன்களைக் கடைப்பிடித்ததை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து உள்ள அகழியைத் தொடர்ந்து தோண்டும்போது அவர்களின் நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். டெரகோட்டா பைப்லைன் கண்டுபிடிப்பானது சங்க கால நாகரீகத்தின் தொழில்நுட்ப புத்தி கூர்மைக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது அதன் வளமான இலக்கிய பாரம்பரியம், செழிப்பான வணிக நெட்வொர்க்குகள் மற்றும் ஈர்க்கக்கூடிய நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. பைப்லைன் கட்டப்பட்ட துல்லியமானது, ஹைட்ராலிக் இன்ஜினியரிங்கில் உயர் மட்ட அறிவைக் குறிக்கிறது, இது கீழடியில் வசிக்கும் பெரிய நகர்ப்புற மக்களைத் தக்கவைக்க முக்கியமானதாக இருந்திருக்கும். தளத்தில் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வளைய கிணறு. கீழடியில் வசிப்பவர்கள் திறமையான நீர் மேலாண்மைத் திறன்களைக் கடைப்பிடித்ததை இந்த கண்டுபிடிப்பு காட்டுகிறது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து உள்ள அகழியைத் தொடர்ந்து தோண்டும்போது அவர்களின் நடைமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம். மேம்பட்ட நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நீர் மேலாண்மை ஆகியவை முதன்மையாக சிந்து சமவெளி போன்ற வட இந்திய நாகரிகங்களின் அம்சங்களாக இருந்தன என்ற முந்தைய அனுமானங்களையும் இந்த கண்டுபிடிப்பு சவால் செய்கிறது. கீழடி கண்டுபிடிப்புகள் அதே காலகட்டத்தில் தென்னிந்திய கலாச்சாரங்களின் அதிநவீனத்தை எடுத்துக்காட்டுகின்றன, முன்பு நினைத்ததை விட ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பண்டைய இந்தியாவை பரிந்துரைக்கிறது. அகழ்வாராய்ச்சிகள் தொடங்கிய பின்னரே கீழடியின் முக்கியத்துவம் ஒரு தொல்பொருள் தளமாக வளர்ந்துள்ளது. முந்தைய கண்டுபிடிப்புகளில் ‘தா’ என்ற தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு பானை ஓடு, உடைந்த செம்புப் பொருட்கள், மணிகள் மற்றும் சுழல் சுழல்கள் ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் கல்வியறிவு மற்றும் தொழில் ரீதியாக செயல்படும் சமுதாயத்தை சுட்டிக்காட்டுகின்றன. பல்வேறு கலைப்பொருட்களின் கார்பன் டேட்டிங் சங்க காலத்தின் காலவரிசையை 300 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளியது, முன்பு நம்பப்பட்ட கிமு 300 ஐ விட அதன் தோற்றம் கிமு 600 இல் அமைந்தது. மேலும், தமிழகத்தின் மற்றொரு தலமான சிவகாலையில் உள்ள புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட நெற்கதிர்கள் 3,200 ஆண்டுகள் பழமையானவை.

நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.  நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று கொண்டிருக்கிறோம். நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.  நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.  நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது.  எனவே நாம் வரிசையில் காத்திருக்கும் போது  நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள். தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள். பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.   நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள். உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள். சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள். சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள்.  நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள். மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை. ✨இவைகளை ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தில் 🌿துரைவேலு கிருஷ்ணசாமி  🌺🌺🌺💕💕💕💕🚩🚩🚩🚩

*கடவுள் எப்படிப்பட்டவன்?*

*கடவுள் எப்படிப்பட்டவன்?* கவியரசன் கண்ணதாசன் சொன்னது. #ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான். 🪷மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽 🪷பூலோகத்தில் வாழும்போது  புகழையும் கொடுப்பான். 🪷பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽     🪷பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான். 🪷அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான். 🪷பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான். *அவன் தான் கடவுள்*🙏🏽    🪷கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான். 🪷அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽    🪷ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான். 🪷பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை 🐅 புலிக்கும் கொடுப்பான். *அவன்தான் கடவுள்🙏🏽*    🪷அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான். 🪷அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான். *அவன் தான் கடவுள்*🙏🏽 🪷தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான். 🪷அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான். *அவன்தான் கடவுள்🙏🏽*    ‌ 🪷நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான். 🪷அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான். *அவன் தான் கடவுள்🙏🏽*    🪷புரியாதவனுக்கு புதிராய் இருப்பான். 🪷தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான். *அவன் தான் கடவுள்🙏🏽* 🪷கடல் முழுதும் தண்ணீரை வைப்பான். 🪷தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான். *அவன் தான் கடவுள்🙏🏽*      🪷மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும். 🪷சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான். 🪷பின்னிருந்து இயக்குவான். *அவன் தான் கடவுள்🙏🏽*     🪷தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான். 🪷(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான். *அவன் தான் கடவுள்🙏🏽*

Always4u
× How can I help you?